கர்மாலா தாலுகா

கர்மாலா தாலுகா (Karmala Taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தின் 11 தாலுகாக்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்மாலா நகரத்தில் உள்ளது. இத்தாலுகா கர்மலா எனும் நகராட்சி மற்றும் 123 கிராமங்களையும் கொண்டுள்ளது.[3] 1593.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இத்தாலுகாவில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 160 பேர் வீதம் வாழ்கின்றனர்.

கர்மாலா தாலுகா
தாலுகா
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்சோலாப்பூர்
தலைமையிடம்கர்மாலா
பரப்பளவு[1]
 • மொத்தம்1,593.01 km2 (615.06 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்2,54,489
 • அடர்த்தி160/km2 (410/sq mi)
 • பாலின விகிதம்925
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MH
வருவாய் கிராமங்கள்122[1]
குறுவட்டங்கள்6
சராசரி மழைப்பொழிவு50.6 mm

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 4702வீடுகளைக் கொண்ட கர்மாலா தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 254489 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 1,32,700 மற்றும் 1,21,789 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 31054 - 12.2% ஆகும். சராசரி எழுத்தறிவு 66.3% ஆகும். பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 13.84% மற்றும் 1.7% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 93.43%, இசுலாமியர்கள் 5.2%, பௌத்தர்கள் 0.37%, சமணர்கள் 0.76% மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Karmala Taluka facts" (PDF). Collectorate of Solapur. Archived (PDF) from the original on 21 July 2011.
  2. Tehsils 11 Tehsils of Solapur district
  3. Karmala Taluka
  4. Karmala Taluka Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மாலா_தாலுகா&oldid=3340866" இலிருந்து மீள்விக்கப்பட்டது