சுருள்வு (விளையாட்டு)
சுருள்வு (curling) என்ற விளையாட்டாளர்கள் பனிப்படுகையில் கற்களை நான்கு ஒன்றனுள் ஒன்றான வட்டங்களால் பிரிக்கப்பட்டுள்ள இலக்குப் பரப்பை நோக்கி சறுக்கவிட்டு விளையாடும் உடல் திறன் விளையாட்டு ஆகும். நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு அணிகள் ஒவ்வொருவராக, கனத்த, தீட்டிய கருங்கற் கற்களை, (பாறைகள் எனவும் இவை அறியப்படும்) பனி சுருள்வுப் படுகையினூடாக பனியில் வட்டமாக குறிக்கப்பட்டிருக்கும் இலக்கான தங்கள் இல்லத்தை நோக்கி தள்ளிவிடுகின்றனர்.[2] ஒவ்வொரு அணிக்கும் எட்டு கற்கள் உள்ளன. விளையாட்டின் நோக்கம் ஒரு ஆட்டத்தில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெறுவதாகும். ஒரு முனையிலிருந்து இரு அணிகளும் தங்களின் அனைத்துக் கற்களையும் தள்ளி முடிந்தபின் இல்லத்தின் மையத்திற்கு அருகேயுள்ள கற்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். ஓர் ஆட்டத்தில் எட்டு அல்லது பத்து முனைகள் இருக்கும்.
2005 டிம் ஆர்ட்டன்சு பிரியரில் இடம்பெற்ற சுருள்வு விளையாட்டுக்கள் | |
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | உலக சுருள்வு கூட்டமைப்பு |
---|---|
பிற பெயர்கள் | பனியில் சதுரங்கம், முழங்கும் விளையாட்டு |
முதலில் விளையாடியது | ஏறத்தாழ நடுக்கால இறுதி இசுக்காட்டுலாந்தில் |
பதிவு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள் | மதிப்பு. 1,500,000[1] |
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
தொடர்பு | இல்லை |
அணி உறுப்பினர்கள் | அணிக்கு நால்வர் (2 கலப்பிருவரில்) |
இருபாலரும் | இருவரும் கலப்பிருவரில் |
பகுப்பு/வகை | துல்லியமும் பிழையின்மையும் |
கருவிகள் | சுருள்வு துடைப்பங்கள், கற்கள் (பாறைகள்), சுருள்வு காலணிகள் |
விளையாடுமிடம் | சுருள்வு படுகை |
தற்போதைய நிலை | |
ஒலிம்பிக் | முதன்முதலில் 1924இல் (2006இல் பின்னோக்கி அங்கீகரிக்கப்பட்டது) செய்விளக்க விளையாட்டாக 1932, 1988 மற்றும் 1992 ஆண்டுகளில் அதிகாரபூர்வமாக 1998 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சேர்க்கப்பட்டது. |
இணை ஒலிம்பிக் | அலுவல்முறையாக 2006ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. |
கல் வீசுபவர் மெதுவான சுழற்சியுடன் தள்ளுவதால் கற்களுக்கு சுருண்ட பாதையில் செல்ல இயல்கிறது. மேலும் அணியின் மற்ற இருவர் சுருள்வு துடைப்பங்கள் கொண்டு அதனுடன் பயணித்து நகரும் கல்லுக்கு முன்புள்ள பனியின் நிலையை மாற்றுவதன் மூலம் கல்லின் வளைவுப்பாதையை தூண்ட முடியும். இந்த விளையாட்டில் சிறந்த பாதையையும் ஒவ்வொரு நிலைக்குமேற்ப கற்களை நிறுத்தவும் மிகுந்த உத்தியும் குழுப்பாங்கும் தேவையாகும். கல் தள்ளுபவரின் திறமையைப் பொறுத்தே வேணுடிய இடத்தில் கற்களை செலுத்த முடியும். இதனாலேயே இது "பனியின் சதுரங்கம்" எனப்படுகிறது.[3][4]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Curling Makes Gains in U.S. Popularity". Yahoo Sports. 19 November 2011. Archived from the original on 2 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Wetzel, Dan (2010-02-19). "Wetzel, Dan. (February 19, 2010) ''Don't take curling for granite'' Yahoo! Sports". Sports.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-04.
- ↑ "'Chess on ice'". Princeton Allumni Weekly. 2009-01-28. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
- ↑ "Chess on ice". The Curling News. 2007-06-22. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
மேலும் அறிய
தொகு- Mott, Morris (1989). Curling capital Winnipeg and the roarin' game, 1876 to 1988. Winnipeg [Man.]: University of Manitoba Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88755-145-9.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - Richard, Pierre (2006). Une Histoire Sociale du Curling au Québec, de 1807 à 1980 (in French). Trois-Rivières: Université du Québec.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- World Curling Federation
- CBC Digital Archives – Curling: Sweeping the Nation
- Bonspiel! The History of Curling in Canada at Library and Archives Canada பரணிடப்பட்டது 2016-05-27 at the வந்தவழி இயந்திரம்
- curling stones, Smithsonian Center for Folklife and Cultural Heritage.
- The Game Of The Magic Broom, மார்ச் 1944 one of the first magazine articles to introduce the game of curling to the American public
- The Canadian Curler's Manual transcription of 1840 text
- Sportlistings.com - World Curling Federation Directory listing