கலாபென் தெல்கர்

இந்திய அரசியல்வாதி

கலாபென் மோகன்பாய் தெல்கர் (Kalaben Mohanbhai Delkar) (பிறப்பு 21 ஆகஸ்ட் 1971) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தில் உள்ள தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார் . தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரும், மகாராஷ்டிராவுக்கு வெளியேயான முதல் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். [2] [3]

கலாபென் தெல்கர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 நவம்பர் 2021
முன்னையவர்மோகன்பாய் சஞ்சிபாய் தெல்கர்
தொகுதிதாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 21, 1971 (1971-08-21) (அகவை 52)[1]
சுகாலா, வல்சாடு, குசராத்து
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்மோகன்பாய் சஞ்சிபாய் தெல்கர்
வாழிடம்(s)சில்வாசா, தாத்ரா மற்றும் நகர் அவேலி
முன்னாள் கல்லூரிவீர் நர்மத் தெற்கு குசராத்து பல்கலைக்கழகம்
தொழில்வணிகம் & சமூக சேவகர்

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் மோகன்பாய் சஞ்சிபாய் தெல்கரை மணந்தார்; மோகன்பாய் சஞ்சிபாய் தெல்கர் ஏழு முறை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகவும், பழங்குடியினர் உரிமை வழக்கறிஞராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். [4]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர் தனது கணவர் மோகன்பாய் சஞ்சிபாய் தெல்கரின் மரணத்திற்குப் பிறகு 2021 இடைத்தேர்தலில் சிவசேனாவின் உறுப்பினராக தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றியடைந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மகேஷ் கவித்தை எதிர்த்து 51270 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Certificate of Domicile/Permanent Resident Certificate". p. 8. பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
  2. "Kalaben Delkar wins Dadra and Nagar Haveli". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  3. "Kalaben Delkar wins in Dadra and Nagar Haveli". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  4. "Kalaben Mohanbhai Delkar(Criminal & Asset Declaration)". My Neta. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
  5. "Shiv Sena's Kalaben Delkar leads in Dadra and Nagar Haveli bye-elections". Times of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாபென்_தெல்கர்&oldid=3454828" இலிருந்து மீள்விக்கப்பட்டது