கலாம் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம்

கலாம் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் (Kalam Institute of Health Technology) என்பது இந்திய அரசுத் திட்டமாகும். இது உயிரி தொழில்நுட்பத் துறையால் செயல்படுத்தப்படுகிறது. ஜூலை 2017இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்நிறுவனம் விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பிரதேச மெடெக் மண்டல வளாகத்திற்குள் அமைந்துள்ளது. மேக் இன் இந்தியா அரசுத் திட்டத்தின் கீழ் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது.[1]

கலாம் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம்
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Vigyanena Jaataani Jeevanti
வகைபொது
உருவாக்கம்2017
சார்புஉயிரிதொழில்நுட்பவியல் துறை (இந்திய அரசு)
பணிப்பாளர்பேரா. கே. விசயராகவன்
அமைவிடம், ,
இந்தியா

17°37′47″N 83°09′46″E / 17.629777°N 83.162910°E / 17.629777; 83.162910
இணையதளம்kiht.in

நிறுவனம்

தொகு

கலாம் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனம் மருத்துவ சாதனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் மருத்துவ தொழில்நுட்ப ஏற்றுமதியில் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.[2]

திட்டம் மற்றும் ஆராய்ச்சி

தொகு

இந்த நிறுவனம் ஆந்திரா மெடெக் சோன் லிமிடெட் நிறுவனத்திற்கான மருத்துவ சாதனங்களின் தகவல்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வழங்கும் மற்றும் தி ஜோனா பிரிக்ஸ் நிறுவனம் மற்றும் அடிலெய்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்கிறது.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "government program". the hindu. 2018-12-03. https://www.thehindu.com/news/national/kerala/education-expo-in-alappuzha/article25657067.ece. 
  2. "introduction". the hans india. 2018-11-16. https://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2018-11-16/GeM-signed-with-KIHT-at-EduTech/442725. 
  3. "ties up with". the hindu. 2018-06-18. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kiht-ties-up-with-australian-institute-for-research/article24188179.ece.