கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு (1097)

முதலாம் கலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு 1097 இல் கலிங்கப் படைகளின் வேங்கியின் மீதான படையெடுப்பிற்குப் பழிவாங்கும் நோக்குடன் முதலாம் குலோத்துங்க சோழனால் நடத்தப்பட்டது.[1] இப்போர் கலிங்கம் கீழ்ப்பட வேண்டியும் சோழப் பேரரசுக்குக் கப்பம் செலுத்தும் அரசாக அதனுடைய நிலையைக் குறைக்க வேண்டியும் ஏற்பட்டது.

விளைவு

தொகு

1097 இல் கலிங்கப் படை கிழக்கு சாளுக்கிய அரசு மீது படையெடுத்தது. அப்போது சாளுக்கிய அரசு சோழப் பேரரசிற்குக் கீழ்ப்பட்டிருந்தது. கலிங்கப் படைகள் கொலானு, ஏலூரு தலைவர்களால் உதவியளிக்கப்பட்டனர். விக்கிரம சோழன் பெரும் படையினை ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடிக்க அனுப்பினான். பாண்டிய அரசப் பிரதிநிதி பராந்தக பாண்டியன் தலைமையிலான படைகள் சோழப் படைகளுக்கு உதவின. கலிங்கப் படைகள் தோற்கடிக்கப்பட்டு, பின்வாங்கிய படைகள் கலிங்கம் வரை விரட்டியடிக்கப்பட்டன. போர் முடிந்ததும் கலிங்கம் சோழருக்குக் கீழ்ப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122411983, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1198-0.

உசாத்துணை

தொகு