கலிபோர்னியம்(II) அயோடைடு

வேதிச் சேர்மம்

கலிபோர்னியம்(II) அயோடைடு (Californium(II) iodide) CfI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. கலிபோர்னியமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

கலிபோர்னியம்(II) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
49774-08-5
InChI
  • InChI=1S/Cf.2HI/h;2*1H/q+2;;/p-2
    Key: VNDYPDFEICMTGA-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cf+2].[I-].[I-]
பண்புகள்
CfI2
வாய்ப்பாட்டு எடை 504.81 g·mol−1
தோற்றம் அடர் ஊதா நிற திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

570 பாகை செல்சியசு வெப்பநிலையில்:[2] மெல்லிய குவார்ட்சு குழாயில் ஐதரசனை கலிபோர்னியம் மூவயோடைடுடன் சேர்த்து குறைப்பதன் மூலம் இதை உற்பத்தி செய்யலாம்:

CfI3 + H2 → 2CfI2 + 2HI

இயற்பியல் பண்புகள் தொகு

கலிபோர்னியம்(II) அயோடைடு அடர் ஊதா நிறத்தில் ஒரு திண்மப்பொருளாக உருவாகிறது. சற்று அதிக வெப்பநிலையில், இது மெல்லிய குழாயில் உள்ள சிலிக்காவுடன் உருகி வினைபுரிந்து, CfOI என்ற சேர்மத்தை உருவாக்குகிறது.

கலிபோர்னியம் டையோடைடு இரண்டு வகையான படிக அமைப்புகளைக் கொண்டுள்ளது. ஒன்று CdCl2-வகை படிக அமைப்பு. அறை வெப்பநிலையில் இது நிலையானது. இதன் அணிக்கோவை அளவுருக்கள் a = 743.4 ± 1.1 பைக்கோமீட்டர் மற்றும் α = 35.83 ± 0.07° என்பவையாகும். மற்றொன்று CdI2 வகை படிக அமைப்பு. இது சிற்றுறுதி வகை நிலைப்புத்தன்மை கொண்டது. இதன் அணிக்கோவை அளவுருக்கள் a = 455.7 ± 0.4 பைக்கோமீட்டர் மற்றும் c = 699.2 ± 0.6 பைக்கோமீட்டர். என்பவையாகும்.[3] கலிபோர்னியம் டையோடைடு 300 முதல் 1100 நானோமீட்டர் வரையிலான அலைநீள வரம்பில் உறிஞ்சும் பட்டையைக் கொண்டுள்ளது. இதன் மூலம் Cf(II) வகை சேர்மம் இருப்பது நிருபிக்கப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "WebElements Periodic Table » Californium » californium dioxide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  2. Stuart, Sam (11 September 2013). XXIVth International Congress of Pure and Applied Chemistry: Plenary and Main Section Lectures Presented at Hamburg, Federal Republic of Germany, 2–8 September 1973 (in ஆங்கிலம்). Elsevier. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4832-7868-1. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  3. Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
  4. Wild, J. F.; Hulet, E. K.; Lougheed, R. W.; Hayes, W. N.; Peterson, J. R.; Fellows, R. L.; Young, J. P. (1 January 1978). "Studies of californium(II) and (III) iodides" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 40 (5): 811–817. doi:10.1016/0022-1902(78)80157-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190278801572. பார்த்த நாள்: 11 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(II)_அயோடைடு&oldid=3739460" இலிருந்து மீள்விக்கப்பட்டது