கலிபோர்னியம்(III) அயோடைடு
கலிபோர்னியம்(III) அயோடைடு (Californium(III) iodide) CfI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் இருமக் கனிமச் சேர்மமாக கலிபோர்னியம்(III) அயோடைடு வகைப்படுத்தப்படுகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கலிபோர்னியம் மூவயோடைடு[1]
| |
இனங்காட்டிகள் | |
20758-81-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CfI3 | |
வாய்ப்பாட்டு எடை | 631.71 g·mol−1 |
தோற்றம் | ஆரஞ்சுச்சிவப்பு திண்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கொதிநிலை | 800 °C (1,470 °F; 1,070 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகலிபோர்னியம் மூவயோடைடை அதிக வெற்றிடத்தின் கீழ் நுண்ணியகிராம் அளவுகளில் தயாரிக்கலாம். கலிபோர்னியம்(III) ஐதராக்சைடுடன் ஐதரசன் அயோடைடு சேர்த்து 500 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் கலிபோர்னியம்(III) அயோடைடு உருவாகிறது:
- Cf(OH)3 + 3HI → CfI3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
தொகுகலிபோர்னியம்(III) அயோடைடு ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக உருவாகிறது. ~800 ° செல்சியசு வெப்பநிலையில் உருகாமல் நேரடியாக பதங்கமாகிறது. இடக்குழு R3 (No. 148) உடன் a = 758.7 பைக்கோமீட்டர் மற்றும் c = 2081.4 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஓர் அலகுக்கு ஆறு வாய்ப்பாட்டு அலகுகள் என்ற முறையில் முக்கோணப் படிகத் திட்டத்தில் இது படிகமாகிறது. கலிபோர்னியம்(III) அயோடைடின் படிக அமைப்பு பிசுமத்(III) அயோடைடின் படிக அமைப்பிற்குச் சமமானதாக காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Californium » californium triiodide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2826. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ ERDA Energy Research Abstracts (in ஆங்கிலம்). ERDA Technical Information Center, etc.; Washington. 1977. p. 565. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.