கலிபோர்னியா வளைகுடா
கலிபோர்னியா வளைகுடா (Gulf of California) பாகா கலிபோர்னியா மூவலந்தீவை மெக்சிக்கோ பெருநிலத்திலிருந்து பிரிக்கின்ற நீர்ப்பரப்பாகும். இது கார்தேசு கடல் (Sea of Cortez) என்றும் வெர்மிலியன் கடல் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் எசுப்பானிய மொழியில் மார் தெ கோர்தேசு அல்லது மார் பெர்மெயோ எனப்படுகிறது. இதன் எல்லைகளாக மெக்சிக்கோ மாநிலங்களான பாகா கலிபோர்னியா, தெற்கு பாகா கலிபோர்னியா, சோனோரா, மற்றும் சினலோயா அமைந்துள்ளன. இதன் கடற்கரை ஏறத்தாழ 4,000 km (2,500 mi) நீளமுடையது. இந்த வளைகுடாவில் கொலராடோ, ஃபுயர்டெ, மேயோ, சினலோயா, சோனோரா மற்றும் யாக்குயி ஆறுகள் வந்தடைகின்றன. இதன் பரப்பளவு ஏறத்தாழ 160,000 km2 (62,000 sq mi) ஆகவுள்ளது.
கலிபோர்னியா வளைகுடாவின் தீவுகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
கலிபோர்னியா வளைகுடா (எடுப்பாய்க் காட்டப்பட்டுள்ளது) | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii, ix, x |
உசாத்துணை | 1182 |
UNESCO region | இலத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் |
ஆள்கூற்று | 28°0′N 112°0′W / 28.000°N 112.000°W |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2005 (29th தொடர்) |
இந்த வளைகுடா உலகப் பரப்பில் அமைந்துள்ள மிகவும் பல்வகைமை உள்ள கடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 5000க்கும் மேலான பெரும் முதுகெலும்பிலிகளின் இனங்கள் இங்குள்ளதாக ஆய்ந்தறியப்பட்டுள்ளது.[1] ஒரு மில்லியனுக்கும் கூடிய மக்கள்தொகை கொண்டுள்ள பாகா கலிபோர்னியா உலகின் மிக நீண்ட மூவலந்தீவுகளில் ஒன்றாக உள்ளது. [2] கலிபோர்னியா வளைகுடா உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Ernesto Campos, Alma Rosa de Campos & Jesús Angel de León-González (2009). "Diversity and ecological remarks of ectocommensals and ectoparasites (Annelida, Crustacea, Mollusca) of echinoids (Echinoidea: Mellitidae) in the Sea of Cortez, Mexico". Parasitology Research 105 (2): 479–487. doi:10.1007/s00436-009-1419-8.
- ↑ Richard C. Brusca (1973). A Handbook to the Common Intertidal Invertebrates of the Gulf of California. Tucson, Arizona: University of Arizona Press. pp. 10–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8165-0356-7.
வெளி இணைப்புகள்
தொகு- All About Baja - Learn all about the Sea of Cortez and the entire Baja peninsula.
- Sea of Cortez Expedition and Education Project
- Desert Museum
- CEDO Intercultural
- PANGAS project பரணிடப்பட்டது 2012-11-05 at the வந்தவழி இயந்திரம்
- Kino Bay Center for Cultural and Ecological Studies பரணிடப்பட்டது 2012-10-21 at the வந்தவழி இயந்திரம்