கலை+பெண்ணியம்
கலை மற்றும் பெண்ணியம் என்பது 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெண் கலைஞர்களைப் பற்றிய உள்ளடக்கத்தை விக்கிப்பீடியாவில் சேர்ப்பதற்கான உலகளாவிய தொகுத்தல் போட்டி ஆகும். இப்போட்டியானது பன்னாட்டு அளவில் விக்கிபீடியா பயனர்களால் தொகுக்கப்படுகிறது.[1][2]
கலை+பெண்ணியம் | |
---|---|
நிகழ்நிலை | செயல்பாட்டில் உள்ளது |
காலப்பகுதி | ஆண்டுதோறும் |
அமைவிடம்(கள்) | 17 நாடுகளில் 70 நிகழ்வுகள் (2015) |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 10 |
துவக்கம் | பெப்ரவரி 1, 2014 |
மிக அண்மைய | மார்ச்சு 2021 |
வருகைப்பதிவு | 1,300 (2015) |
அமைப்பாளர் | சியான் இவான்ஸ் ஜாக்குலின் மாபே மைக்கேல் மண்டிபெர்க் லாரல் தாக் |
2014இல் கலை மற்றும் பெண்ணியத்தின் தொடக்கப் பிரச்சாரம் 30 தனித்தனி நிகழ்வுகளில் 600 தன்னார்வ பயனர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.[1][2] 2015ஆம் ஆண்டில் மொத்தம் 1,300 தன்னார்வலர்கள் நான்கு கண்டங்களில் 17 வெவ்வேறு நாடுகளில் நடந்த 70 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். அப்போதிருந்து ஆண்டுதோறும் 1,500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 20,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இது 1,00,000க்கும் மேற்பட்ட விக்கிபீடியா கட்டுரைகளில் நேர்மறையான முடிவுகளுக்கு வழிவகுத்தது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் 1,260 நிகழ்வுகளில் சுமார் 84,000 விக்கிப்பீடியா கட்டுரைகளை 18,000க்கும் அதிகமானோர் பங்கேற்று உருவாக்கியுள்ளனர் அல்லது மேம்படுத்தியுள்ளனர்.
அமைப்பு
தொகுகலை அருங்காட்சியகத்தின் நூலகர் சியான் இவான்ஸ் என்பவர் வட அமெரிக்காவின் கலை நூலகங்களின் சமூகத்திற்கு பெண்களுக்காகவும், கலைக்காகவும் ஒரு திட்டத்தை வடிவமைத்தபோது கலை+பெண்ணியம் தொடங்கியது.[3] அடா லவ்லேஸின் நினைவாக தொகுப்பு போட்டி நிகழ்வில் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் அமைப்பினால் ஈர்க்கப்பட்ட சக கண்காணிப்பாளரான ஜாக்குலின் மாபேயுடன், சியான் இவான்ஸ் பேசினார்.[3] விக்கிப்பீடியாவை வகுப்பறைக் கற்றலில் இணைத்துக் கொண்டிருந்த நியூயார்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மைக்கேல் மாண்டிபெர்க்குடன் மாபே பேசினார். மாண்டிபெர்க் கலை மற்றும் தொழில்நுட்ப இலாப நோக்கற்ற ஐ பீம்-ன் சக ஊழியரான லாரல் தாக்குடன் பேசினார். அவர் நிகழ்வைத் திட்டமிட உதவ ஒப்புக்கொண்டார். குழு பின்னர் உள்ளூர் விக்கிப்பீடியர்களான டோரதி ஹோவர்டை பணியமர்த்தியது. பின்னர் நியூயார்க் நகர நூலகக் குழுவின் விக்கிபீடியர்கள் மற்றும் ரிச்சர்ட் நிபெல் ஆகியோர் விக்கிமீடியாவின் நியூயார்க் நகரத்தின் மூலம் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் உள்ளூர் அத்தியாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
கலை+பெண்ணியம் திட்டத்தை நிறுவுவதற்கான ஒரு காரணம், விக்கிப்பீடியாவின் பட்டியல் அமைப்பு பற்றிய எதிர்மறையான ஊடக செய்திகளுக்கு பதிலளிப்பதும் அடங்கும்.[4][5] இந்தத் திட்டம் விக்கிப்பீடியாவில் உள்ள உள்ளடக்க இடைவெளிகளை நிரப்பி, பெண் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.[6][7] விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளில் 17 சதவிகிதம் மட்டுமே பெண்களைப் பற்றியது மற்றும் விக்கிபீடியா தொகுப்பாளர்களில் 15 சதவிகிதம் மட்டுமே பெண்கள் ஆவார்.[8] கிரா விஸ்னீவ்ஸ்கி 2020ல் கலை+பெண்ணியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[9]
நிகழ்வுகள்
தொகுஅமெரிக்காவிற்கு வெளியே, நவீன கலைக்கான அருங்காட்சியகம் 2015ம் ஆண்டில் கலை+பெண்ணியக் கட்டுரைகளை தொகுக்கும் போட்டி காணொளி மூலம், ஆஸ்திரேலியா,[10] கனடா, கம்போடியா, இந்தியா,[11] நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்காவிற்குள், நியூயார்க் மற்றும் கலிபோர்னியா, கன்சாஸ், பென்சில்வேனியா, டெக்சாஸ் மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய மாநிலங்களில் இந்த நிகழ்வு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது..[12]
2020ம் ஆண்டில், கோவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக, ஜூம் கூட்டச் செயலி மூலம் நிகழ்வுகள் நடைபெற்றது.[13] 2021 இல், கோவிட்-19 கவலைகள் காரணமாக கலை+பெண்ணியம் பிரச்சாரம் மீண்டும் மெய்நிகராக நடத்தப்பட்டது.
இந்த திட்டம் உலகளாவியது என்றாலும் பால்டிமோர் நகரில் வசிக்கும் இத்திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கிரா விஸ்னிவ்ஸ்கி தனிப்பட்ட முறையில் அந்த பகுதியில் உள்ள கலாச்சார அமைப்புகளுடன் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்கிறார். தொகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களால் பங்களிக்கப்பட்ட உள்ளடக்கம் விக்கிபீடியாவில் உள்ள ஒருங்கிணைப்பு மன்றத்தில் கண்காணிக்கப்படுகிறது.[14]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "101 Women Artists Who Got Wikipedia Pages This Week". ARTnews. 6 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
- ↑ 2.0 2.1 "Art+Feminism's 2015 Wikipedia Edit-a-thon Adds 334 Articles on Female Artists". ARTnews. 2015-03-11. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.
- ↑ 3.0 3.1 Feinstein, Laura (2 March 2015). "Mass Wikipedia Edit To Make The Internet Less Sexist". magazine.good.is. Good Worldwide. Archived from the original on 5 September 2015. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
- ↑ Lapowsky, Issie (5 March 2015). "Meet the Editors Fighting Racism and Sexism on Wikipedia". Wired. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
- ↑ Filipacchi, Amanda (24 April 2013). "Wikipedia's Sexism Toward Female Novelists". The New York Times (New York). https://www.nytimes.com/2013/04/28/opinion/sunday/wikipedias-sexism-toward-female-novelists.html.
- ↑ McGurran, Brianna (18 February 2015). "MoMA to Host Wikipedia Edit-a-Thon to Tackle Gender Imbalance". The New York Observer. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
- ↑ Krasny, Michael (13 March 2015). "Wikipedia's Gender and Race Gaps: Forum". Forum. KQED-FM. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
- ↑ "As it happened: Wikipedia edit-a-thon".
- ↑ "Art+Feminism" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
- ↑ Ford, Clementine (6 March 2015). "Where are all the Australian feminist writers on Wiki?". dailylife.com.au. Archived from the original on 27 August 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
- ↑ Shruthi, H M (7 March 2015). "Edit-a-thon for women to bridge Wikimedia gender gap". டெக்கன் ஹெரால்டு. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
- ↑ Board, Glynis (3 March 2015). "Wiki Gender Gap to Be Discussed in Morgantown | West Virginia Public Broadcasting". wvpublic.org. Archived from the original on 25 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
- ↑ Landry, Katelyn (2020-05-14). "Can a Virtual Edit-a-Thon make Wikipedia More Inclusive?". Houstonia Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-17.
- ↑ Ghorashi, Hannah (10 March 2015). "Art+Feminism's 2015 Wikipedia Edit-a-thon Adds 334 Articles on Female Artists". ARTnews. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Art+Feminism at Wikipedia Meetup
- Sarah Mirk (January 24, 2014). "An Epic Feminism Edit-a-thon Takes Aim at Wikipedia's Gender Gap". Bitch. https://bitchmedia.org/post/an-epic-edit-a-thon-takes-aim-at-wikipedias-gender-gap.
- Cogdill, Caitlin (February 19, 2014). "Wikipedia's Art & Feminism Edit-A-Thon and the Gender Gap". Wikimedia Foundation.