கலை இயக்குநர்

கலை இயக்குநர் (Art director) என்பவர் அரங்கம், விளம்பரம், சந்தைப்படுத்தல், பதிப்பகம், திரைப்படம், தொலைக்காட்சி, இணையம் மற்றும் நிகழ்பட ஆட்டம் போன்ற பல துறைகளில் கலை சார்ந்த பணிகளை புரிவர் ஆவார். ஒரு கலை உற்பத்தியின் பார்வையை மேற்பார்வையிடுவதும் ஒருங்கிணைப்பதும் கலை இயக்குனரின் பொறுப்பு ஆகும்.

ஒரு கலை இயக்குனர் ஒரு திரைப்பட கலைத் துறையின் படிநிலை கட்டமைப்பில் தயாரிப்பு வடிவமைப்பாளருக்கு கீழே அமை விட அலங்கரிப்பாளர் மற்றும் அமை விட வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர்களின் கடமைகளில் பெரும்பகுதி கலைத் துறையின் நிர்வாக அம்சங்களை உள்ளடக்கியது.

தமிழ் திரைப்படத்துறையில் பி. கிருஷ்ணமூர்த்தி, தோட்டா தரணி[1], ராஜீவன்[2], சாபு சிரில்[3] போன்ற பல பிரபல கலை இயக்குநர்கள் உள்ளனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக 1998 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டு அரசாங்கத்தால் சிறந்த என்ற பெயரில் கலை இயக்குநருக்கான தமிழக மாநில திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "State Awards for the year 2006 - Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 2007-09-08. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
  2. "amilnadu State Awards 2007 & 2008". Dinakaran. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-09-30.
  3. "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலை_இயக்குநர்&oldid=3685340" இலிருந்து மீள்விக்கப்பட்டது