தயாரிப்பு வடிவமைப்பாளர்

தயாரிப்பு வடிவமைப்பாளர் (Production designer) என்பவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பணி புரியும் நபர் ஆவார். இவர்கள் கதையின் ஒட்டுமொத்த அழகியலுக்கு பொறுப்பானவர் என்பதனால் தயாரிப்பு வடிவமைப்பாளர் என்று அழைக்கப்படுகின்றது.

இவர்கள் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தயாரிப்பாளருடன் நேரடியாகப் பணிபுரிகின்றனர். மற்றும் இயக்கப் படங்கள் மற்றும் தொலைக்காட்சியை உருவாக்குவதில் முக்கிய ஆக்கபூர்வமான பங்கைக் கொண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பாளர் என்ற சொல் 'வில்லியம் கேமரூன் மென்ஸீஸ்' என்பவர் கான் வித் த விண்ட்[1] என்ற திரைப்படத்தில் பணிபுரிந்தபோது உருவாக்கப்பட்டது. தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் பொதுவாக கலை இயக்குநர்களுடன்[2] குழப்பமடைகிறார்கள் ஏனெனில் இவர்களின் பணியும் ஒத்த பொறுப்புகளில் உள்ளன.

தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் காட்சிக் கருத்தை முடிவுசெய்து, திரைப்படத் தயாரிப்பில் பல மற்றும் மாறுபட்ட தளவாடங்கள், அட்டவணை, அக்கச்செலவு மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டவற்றைக் கையாளுகின்றனர். கலை இயக்குநர்கள் காட்சிகளை உருவாக்கும் செயல்முறையை நிர்வகிக்கிறார்கள், இது கணினி வரைகலைஞர்கள், அமைவிட வடிவமைப்பாளர்கள், ஆடைகலன் வடிவமைப்பாளர், விளக்கு வடிவமைப்பாளர்கள் போன்றவர்களால் செய்யப்படுகிறது.[3] தயாரிப்பு வடிவமைப்பாளரும் கலை இயக்குநரும் தனித்தனி குழுவை வழிநடத்தி படத்தின் காட்சி கூறுகளுக்கு உதவுகிறார்கள்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Cairns, David (2011). "The Dreams of a Creative Begetter". The Believer. No. 79. பார்க்கப்பட்ட நாள் 8 October 2018.
  2. Preston, Ward (1994). What an Art Director Does: An Introduction to Motion Picture Production Design. Los Angeles: Silman-James Press. pp. 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-879505-18-6.
  3. Barnwell, Jane (2017). Production Design for Screen: Visual Storytelling in Film and Television. London: Bloomsbury Visual Arts. pp. 23–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781474223409.
  4. Salom, Leon (March 17, 2014). "Explainer: what is production design?". The Conversation.