கல்சி (லே மாவட்டம்)
கல்சி (Khaltse or Khalsi), இந்தியாவின் வடக்கில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள கல்சி தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[1][2]இது சிறீநகர்-லே நெடுஞ்சாலையில், சிந்து ஆற்றின் பாலத்தைத் தாண்டி 337 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[3] லே மற்றும் கார்கில் நகரங்களுக்கிடையே அமைந்த கல்சியில் லடாக் நடுவண் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.[4][5]இக்கிராமம் சர்க்கரை பாதாமி பழங்களுக்கு பெயர் பெற்றது.
கல்சி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 34°19′12″N 76°52′45″E / 34.3200775°N 76.8793025°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | லடாக் |
மாவட்டம் | லே |
தாலுகா | கல்சி |
கிராம ஊராட்சி | கல்சி |
ஏற்றம் | 2,987 m (9,800 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 767 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இடக் குறியீடு | 194106 |
2011 கணக்கெடுப்பு குறியீடு | 948 |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 156 வீடுகள் கொண்ட கல்சி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 767 ஆகும். இதில் ஆண்கள் 381 மற்றும் பெண்கள் 386 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 8.87% ஆகும். சராசரி எழுத்தறிவு 86.27 % ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 0 மற்றும் 751 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக பௌத்தர்கள் மற்றும் இசுலாமியர்கள ஆவார்.[6]
வேளாண்மை
தொகுலே நகரத்திற்கும் 400 மீட்டர் குறைவாக, கல்சி கிராமம் 2,987 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பதால், கல்சி கிராமத்தில் ஆண்டிற்கு இரு போகம் பார்லி சாகுபடி நடைபெறுகிறது. இவ்வூர் சிந்து ஆற்றின் நீர் பெறுகிறது. மேலும் கல்சியில் நெளிகோதுமை மற்றும் கோசுக்கிழங்கு பயிரிடப்படுகிறது.
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், கல்சி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | -3.5 (25.7) |
-0.3 (31.5) |
5.3 (41.5) |
12.9 (55.2) |
19.3 (66.7) |
23.5 (74.3) |
26.7 (80.1) |
26.2 (79.2) |
22.4 (72.3) |
16.0 (60.8) |
8.9 (48) |
1.1 (34) |
13.21 (55.78) |
தினசரி சராசரி °C (°F) | -8.2 (17.2) |
-5.7 (21.7) |
0.2 (32.4) |
7.3 (45.1) |
13.0 (55.4) |
17.0 (62.6) |
20.4 (68.7) |
19.9 (67.8) |
15.8 (60.4) |
9.3 (48.7) |
2.8 (37) |
-3.9 (25) |
7.33 (45.19) |
தாழ் சராசரி °C (°F) | -12.9 (8.8) |
-11.1 (12) |
-4.9 (23.2) |
1.8 (35.2) |
6.8 (44.2) |
10.6 (51.1) |
14.2 (57.6) |
13.7 (56.7) |
9.3 (48.7) |
2.7 (36.9) |
-3.2 (26.2) |
-8.9 (16) |
1.51 (34.72) |
மழைப்பொழிவுmm (inches) | 32 (1.26) |
33 (1.3) |
46 (1.81) |
23 (0.91) |
19 (0.75) |
7 (0.28) |
11 (0.43) |
11 (0.43) |
13 (0.51) |
7 (0.28) |
5 (0.2) |
17 (0.67) |
224 (8.82) |
ஆதாரம்: Climate-data.com[7] |
அடிக்குறிப்புகள்
தொகு- Francke, A. H. (1977). A History of Ladakh. A. H. Francke (Originally published as, A History of Western Tibet, (1907). 1977 Edition with critical introduction and annotations by S. S. Gergan & F. M. Hassnain. Sterling Publishers, New Delhi.
- Francke, A. H. (1914). Antiquities of Indian Tibet. Two Volumes. Calcutta. 1972 reprint: S. Chand, New Delhi.
- Schettler, Rolf & Margaret. (1981). Kashmir, Ladakh & Zanskar. Lonely Planet. South Yarra, Vic., Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-908086-21-0.
- Janet Rizvi. (1996). Ladakh: Crossroads of High Asia. Second Edition. Oxford University Press, Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564546-4.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
- ↑ Leh subdivision-blocks.
- ↑ Schettler (1981), pp. 102–103.
- ↑ "Cabinet approves setting up central university in Ladakh". 23 July 2021.
- ↑ "Cabinet approves setting up central university in Ladakh". 23 July 2021.
- ↑ Khaltse Population – Leh
- ↑ "Climate: Khalatse". Climate-data.com.