கல்பநாத் ராய்

இந்திய அரசியல்வாதி

கல்பநாத் ராய் (Kalpnath Rai) (4 சனவரி 1941 - 6 ஆகத்து 1999) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1974 – 80, 1980 – 86, மற்றும் 1986 – 92 க்கு இடையில் மாநிலங்களவையில் உறுப்பினராக பணியாற்றினார். அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோசி தொகுதியில் இருந்து மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தார்.

கலபநாத் ராய்
பிறப்பு4 சனவரி 1941
மௌ, ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு6 ஆகத்து 1999
(வயது 58)
புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியன்

கோசி மக்களவைத் தொகுதியிலிருந்து ஒரு உறுப்பினராக இருந்த நாட்களில் மௌ ஒரு மாவட்டமாக மாறியதற்கான பெருமைக்குரியவர் ஆவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இராய் ஒரு பூமிகார் பிராமணக் குடும்பத்தில் பிறந்து உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். ஆங்கிலம் மற்றும் சமூகவியலில் முதுகலைப் பட்டங்களும், சட்டமும் படித்தார். பின்னர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

இறப்பு

தொகு

இராய், 1999 ஆகத்து 6 அன்று, தனது 58 வயதில், மாரடைப்பால் இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் இருந்தனர். [2]

குறிப்புகள்

தொகு
  1. "History of Mau". Article. Archived from the original on 2011-11-30.
  2. "Kalpnath Rai passes away". Newspaper (New Delhi). 1999-08-06. http://www.financialexpress.com/old/ie/daily/19990807/ige07034.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பநாத்_ராய்&oldid=3007835" இலிருந்து மீள்விக்கப்பட்டது