கல்பேலியா (Kalbelia )அல்லது கபேலியா என்பது ராஜஸ்தானின் கபேலியப் பழங்குடியினர் நிகழ்த்தும் ஒரு நடனமாகும். [1] இவ்வகை நடனம் அவர்களின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். இது ஆண்களும் பெண்களும் நிகழ்த்தும் ஒரு நடனமாகும்.

கல்பேலியா பழங்குடி

தொகு
 
ஒரு ராஜஸ்தானிய கல்பேலிய நாட்டுப்புற நடனம்.

கல்பேலியாக்கள் பண்டைய காலங்களில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அடிக்கடி இடம் மாறிச் சென்றனர். பாம்புகளைப் பிடிப்பது மற்றும் பாம்பு விசத்தை வர்த்தகம் செய்வது இவர்களின் பாரம்பரிய தொழில் ஆகும். எனவே, நடன இயக்கங்களும் இவர்களின் சமூகத்தின் ஆடைகளும் பாம்புகளின் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. அவை சப்பேரா, ஜோகிரா அல்லது யோகி என்பனவாகும். குரு கோரக்நாத்தின் 12 வது சீடரான கன்லிபரிடமிருந்து இவர்கள் தங்கள் வம்சாவளியைக் கண்டுபிடிக்கின்றனர். கல்பேலியா மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையானது பாலி மாவட்டத்திலும், பின்னர் அஜ்மீர், சித்தோர்கர் மற்றும் உதய்பூர் மாவட்டத்திலும் உள்ளனர். இவர்கள் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். மேலும் இவர்கள் பட்டியல் சாதிப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். [2] [3]

பாரம்பரியமாக, கல்பேலியா ஆண்கள் கிராமங்களில் வீட்டுக்கு வீடு வீடாக கரும்பு கூடைகளில் நாகங்களை எடுத்துச் சென்றனர். அதே நேரத்தில் இவர்களின் பெண்கள் பாடி நடனமாடி பிச்சை கேட்டார்கள். இவர்கள் நாகத்தை வணங்குகிறார்கள் மற்றும் ஊர்வனவற்றைக் கொல்லக்கூடாது என்று வாதிடுகிறார்கள். கிராமங்களில், ஒரு பாம்பு கவனக்குறைவாக ஒரு வீட்டிற்குள் நுழைந்தால், ஒரு கல்பேலியர் நாகத்தைப் பிடிக்கவும், அதைக் கொல்லாமல் எடுத்துச் செல்லவும் வரவழைக்கப்படுவார். கல்பேலியர்கள் பாரம்பரியமாக சமுதாயத்தில் கிராமத்திற்கு வெளியே உள்ள இடங்களில் வசிக்கும் ஒரு குழுவாக இருந்து வருகிறார்கள். அங்கு இவர்கள் தற்காலிக குடிசைகளில் வசிக்கின்றனர். கல்பெலியர்கள் குடிசையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துகிறார்கள். தலைமுறைகளாக, கல்பேலியர்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பற்றியறுள்ளனர். மேலும் பல்வேறு நோய்களுக்கான மூலிகை மருந்துகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். இது இவர்களுக்கு மாற்று வருமான ஆதாரமாக உள்ளது.

1972 ஆம் ஆண்டு வனவிலங்கு சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து, கல்பேலியர்கள் பாம்பைக் கையாளும் பாரம்பரிய தொழிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இப்போது கலை நிகழ்ச்சிகள் இவர்களுக்கு ஒரு முக்கிய வருமான ஆதாரமாக உள்ளன. இவை இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. நிகழ்ச்சி வாய்ப்புகள் அவ்வப்போது உள்ளன. எனவே சமூகத்தின் உறுப்பினர்கள் வயல்களில் வேலை செய்கிறார்கள். அல்லது தங்களைத் தக்கவைத்துக் கொள்ள கால்நடைகளை மேய்கிறார்கள். [4]

கல்பேலியா நடனம்

தொகு
 
கல்பேலியா நடனம்

கொண்டாட்டமாக நிகழ்த்தப்படும் கல்பேலியா நடனம் கல்பேலியா கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இவர்களின் நடனங்கள் மற்றும் பாடல்கள் கல்பேலியர்களுக்கான பெருமை மற்றும் அடையாளத்தின் அடையாளமாகும். மேலும் அவை பாம்பு மந்திரவாதிகளின் இந்த சமூகத்தின் ஆக்கபூர்வமான தழுவலை மாற்றியமைக்கும் சமூக பொருளாதார நிலைமைகளுக்கும் கிராமப்புற ராஜஸ்தானி சமுதாயத்தில் அவற்றின் சொந்த பங்கிற்கும் பிரதிபலிக்கின்றன.

கறுப்பு உடையணிந்து பெண் நடனக் கலைஞர்கள் ஒரு பாம்பின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் விதமாக நடனமாடுவார்கள். மேல் உடல் துணியை அன்ராகி என்று, தலையில் அணிந்திருக்கும் துணியின் ஒரு பகுதி ஓதானி என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் கீழ் உடல் துணியை லங்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த துணிகள் அனைத்தும் சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்கள் கலக்கப்பட்டு, பூவேலைகள் செய்யப்பட்டிருக்கும் . இந்த ஆடைகளை அணிந்து கொண்டு நடனக் கலைஞர்கள் நடனம் நிகழ்த்தும்போது கண்களுக்கும், சூழ்நிலைக்கும் இனிமையான வண்ணங்களின் கலவையைக் அளிக்கிறது.

ஆண் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய காற்று ஒலி இசைக்கருவியான மகுடியினை வாசித்து பாம்புகளை பிடிப்பது போல நடனமாடுவார்கள். ஒரு தாள வாத்தியங்களான, தப்பு, கஞ்சாரி - மோர்சிங், குராலியோ மற்றும் மத்தளம் (தோலாக்) போன்ற இசைகருவிகளைக் கொண்டு தாளத்தை உருவாக்குகிறார்கள். நடனக் கலைஞர்கள் பாரம்பரிய வடிவமைப்புகளில் பச்சை வண்ணம் சேர்க்கப்பட்ட நகைகள் மற்றும் சிறிய கண்ணாடிகள் மற்றும் வெள்ளி நூல் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். நடன வேகம் அதிகரிக்கும்போது, தாளமும் வேகம வேகமாக மாறுகிறது. [4]

கல்பேலியா பாடல்கள் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், ஹோலியின் போது சிறப்பு நடனங்கள் செய்யப்படுகின்றன. கல்பேலியா தன்னிச்சையாக பாடல்களை இயற்றுவதற்கும், நிகழ்ச்சிகளின் போது பாடல்களை மேம்படுத்துவதற்கும் புகழ் பெற்றது. இந்த பாடல்களும் நடனங்களும் வாய்வழி மரபின் ஒரு பகுதியாகும். அவை தலைமுறைகளாகக் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, அதற்காக நூல்களோ பயிற்சி கையேடுகளோ இல்லை. 2010 ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் கல்பேலியா நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் யுனெஸ்கோவால் அதன் அருவமான பாரம்பரிய பட்டியலில் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. [4]

குறிப்புகள்

தொகு
  1. "Kalbelia Folk Dances of Rajasthan".
  2. Kumar Suresh Singh; B. K. Lavania; D. K. Samanta; S. K. Mandal; N. N. Vyas; Anthropological Survey of India. People of India Vol. XXXVIII. Popular Prakashan. p. 1012.
  3. Miriam Robertson. Snake Charmers: The Jogi Nath Kalbelias of Rajastan. Illustrated Book Publishers. p. 323.
  4. 4.0 4.1 4.2 http://www.unesco.org/culture/ich/index.php?lg=en&pg=00011&RL=00340

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பேலியா&oldid=3238843" இலிருந்து மீள்விக்கப்பட்டது