கல்முனை நெற் (இணைய இதழ்)


கல்முனை நெற் மின்னிதழ்
வெளியீட்டாளர் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு
நிருவாக ஆசிரியர் பு.கேதீஷ்
வகை இணைய இதழ்
வெளியீட்டு சுழற்சி வார இதழ்
முதல் இதழ் 14-01-2021
நிறுவனம் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு
நகரம் கல்முனை
மாகாணம் கிழக்கு இலங்கை
நாடு இலங்கை
தொடர்பு முகவரி கல்முனை நெற் ஊடக வலையமைப்பு
பிரதான வீதி,
பாண்டிருப்பு
கல்முனை,
இலங்கை
வலைப்பக்கம் கல்முனை நெற் பரணிடப்பட்டது 2021-11-27 at the வந்தவழி இயந்திரம்


கல்முனை நெற் மின்னிதழ் - கல்முனையிலிருந்து வெளிவரும் ஒரு இணைய வார இதழ் ஆகும். "தமிழ் மொழியினருக்கான தகவல் தளம்" என்ற மகுட வாசகத்துடன் தமிழரின் பொங்கல் தினமான 2021 தை மாதப் பிறப்பான 2021.01.14 ஆந் திகதியிலிருந்து வெளிவருகிறது.[1][2] கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் ஒரு ஊடகப் பணியாக இம்மின்னிதழ் வெளிவருகின்றது.

கல்முனை நெற் ஊடக வலையமைப்பு கல்முனையிலிருந்து 24 மணிநேரமும் இணையவழிச் செய்திச் சேவையை தொடர்ச்சியாக வழங்கிவருகின்ற ஒரு ஊடக நிறுவனமாகும். கல்முனையிலிருந்து செயற்படும் மிக விரைவான செய்தி நிறுவனமாக இது காணப்படுகின்றது. இணையவழி ஊடாகச் செயற்பாட்டுக்கு மேலதிகமாக "பரிமாணம்" எனும் மாதாந்த அச்சுப் பத்திரிகையையும் கல்முனை நெற் ஊடக வலையமைப்பு கடந்த 28.03,2021 முதல் வெளியிட்டுவந்தது. [3][4][5] கொரோனா பெருந்தொற்று காரணமாக அச்சு இதழின் வெளியீடு தற்காலிககமாக இடைநிறுத்தப்பட்டது.

செய்தி, இலக்கியம், வரலாறு, மகளிர் பக்கம், சிறுவர் பக்கம், கல்வி, சுகாதாரம், சினிமா என பல்வேறு விடயங்களைத் தாங்கியதாக கல்முனை நெற் மின்னிதழ் வெளிவருகின்றது.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கொள்கள் தொகு

  1. "கல்முனை நெற் வாரந்த மின்னிதழ் 14.01,2021". Archived from the original on 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-01.
  2. "கல்முனை நெற் மின் வார இதழ் அங்குரார்ப்பண நிகழ்வு இம்போர்ட்மிரர் 19.01,2021".
  3. "ஊடகதர்மத்தைப் பாதுகாக்கவேண்டிய பெரும்பங்கு ஊடகத் துறையினருக்கும் உண்டு கல்முனையில் 'பரிமாணம்' பத்திரிகைவெளியீட்டு விழாவில் சுமந்திரன்". {{cite web}}: line feed character in |title= at position 71 (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "திருகோணமலையில் 'பரிமாணம்' அறிமுகவிழா". Archived from the original on 2021-12-01. பார்க்கப்பட்ட நாள் 2021-12-01.
  5. "துணிவுள்ள ஊடகங்கள் சமூகத்திற்கு தேவை!!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனை_நெற்_(இணைய_இதழ்)&oldid=3708750" இலிருந்து மீள்விக்கப்பட்டது