கல்யாண் சிங் குப்தா

இந்தியச் செயற்பாட்டாளர்

கல்யாண் சிங் குப்தா (Kalyan Singh Gupta) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு சுதந்திர ஆர்வலர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.[1] இது தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பாகும். [2][3]

கல்யாண் சிங் குப்தா
Kalyan Singh Gupta
பிறப்பு1923
அரியானா, இந்தியா
இறப்பு23 சனவரி 2002
புது தில்லி, இந்தியா
பணிசமூக சேவகர், சுதந்திரச் செயற்பாட்டாளர்
விருதுகள்பத்மசிறீ

1923 ஆம் ஆண்டு இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பிறந்த இவர், தனது ஆரம்பக் கல்லூரிக் கல்வியை பஞ்சாப் மற்றும் டெல்லியில் முடித்தார், அந்த நேரத்தில் கல்யாண் சிங் குப்தா இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார், பின்னர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார். அரோல்ட்டு லாசுகியின் பயிற்சியில் இவர் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.[1] 1951 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பிய கல்யான் சிங் இந்தியா நியூசு குரோனிக்கிளில் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] ஓராண்டு கழித்து, கல்யாண் சுசேதா கிருபலானியுடன் இணைந்து லோக் கல்யாண் சமிதியை நிறுவினார்.[1] திபெத்திய அகதிகளுக்கு நிவாரண உதவி வழங்குவதற்காக 1959 ஆம் ஆண்டு மத்திய நிவாரணக் குழுவையும் இவர் தொடங்கினார்.[1] இந்திய அரசால் 1969 ஆம் ஆண்டு நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4]

கல்யாண் சிங் குப்தா 23 சனவரி 2002 அன்று புது தில்லியில் தனது 79 ஆவது வயதில் காலமானார் [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5
  2. "IIT Delhi Alumni Association". IIT Delhi Alumni Association. 14 November 2010. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  3. "LKS About US". LKS. 2015. Archived from the original on 12 February 2015. பார்க்கப்பட்ட நாள் 13 May 2015.
  4. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_சிங்_குப்தா&oldid=4180543" இலிருந்து மீள்விக்கப்பட்டது