கல்யாண் பானர்ஜி (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

கல்யாண் பானர்ஜி (Kalyan Banerjee) (பிறப்பு: 4 சனவரி 1957) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், செராம்பூர் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1] [2]மேலும் இவர் 15 மற்றும் 16 வது மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

கல்யாண் பானர்ஜி
பெருந்தலைவர், ஹூக்ளி ஆற்றுப் பாலம் ஆணையாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 நவம்பர் 2020
முன்னையவர்சுவேந்து அதிகாரி
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2009
முன்னையவர்சாந்தசிறீ சட்டர்ஜி
தொகுதிசெராம்பூர் மக்களவை தொகுதி
உறுப்ப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2001–2006
தொகுதிஅசன்சோல் வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1957 (1957-01-04) (அகவை 67)
பாங்குரா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சாப்பி சட்டர்ஜி
பிள்ளைகள்2
வாழிடம்(s)4 கோஸ்வாமி தெரு, ராஜ்பதி, செராம்பூர், ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம் - 712201
தொழில்வழக்கறிஞர்

அவதூறு

தொகு

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டரின் போது சபை நடத்த விடாமல் அமளி செய்தமையால், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களில் கல்யாண் பானர்ஜியும் ஒருவர். மேலும் இவர் நாடாளுமன்ற வளாகத்தில் இராகுல் காந்தி மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் துணை குடியரசுத் தலைவரும் மற்றும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரைப் போன்று நடித்து விகடம் (மிமிக்கிரி) செய்து காண்பித்தார்.

அவமானத்திற்குரிய இச்செயல் குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விநித் ஜிண்டால் என்பவர் மாநிலங்களவை & மக்களவை நெறிமுறைகள் குழுக்களிடம், கல்யாண் பானர்ஜியை தகுதி நீக்கம் செய்ய வேண்டி விண்ணப்பம் செய்துள்ளார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
  2. "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 11 August 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
  3. ஜகதீப் தன்கரைப் போல நடித்து கிண்டல் செய்த எம்பி
  4. Mimicry row: Complaint filed against TMC MP Kalyan Banerjee for mimicking VP Jagdeep Dhankhar