களை (2021 திரைப்படம்)
களை என்பது 2021 ஆம் ஆண்டு இந்திய மலையாள மொழி உளவியல் த்ரில்லர் படமாகும். இதனை ரோஹித் வி.எஸ் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்திற்கு கதையை யது புஷ்பகரன் மற்றும் ரோஹித் ஆகியோர் எழுதினர். இதில் டோவினோ தாமஸ் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் லால் பால் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் எடிட்டராக சாமன் சக்கோவும், அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவாளராகவும் பணியிற்றியுள்ளனர். இப்படத்திற்கு டான் வின்சென்ட் இசையமைத்துள்ளார்.
களை | |
---|---|
இயக்கம் | ரோஹித் வி.எஸ் |
தயாரிப்பு | சிஜூ மேத்யூ நவிஸ் சேவியர் டோவினோ தாமசு Akhil George |
கதை | யது புஷ்பகரன் ரோஹித் |
இசை | டான் வின்சென்ட் |
நடிப்பு | டோவினோ தாமசு சுமேஷ் மூர் லால் திவ்யா பிள்ளை பிரமோத் வெல்லியநாத் |
ஒளிப்பதிவு | அகில் ஜார்ஜ் |
படத்தொகுப்பு | சாமன் சக்கோ |
கலையகம் | ஜூவிஸ் புரொடக்ஷன்ஸ் டோவினோ தாமஷ் புரோடெக்சன் அட்வென்ச்சர் கம்பெனி |
வெளியீடு | மார்ச்சு 25, 2021இந்தியா & GCC) | (
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹1.5 crore |
மொத்த வருவாய் | ₹3.10 crore |
இப்படம் ஜூவிஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் சிஜூ மேத்யூ மற்றும் நவிஸ் சேவியர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. அட்வென்ச்சர் கம்பெனி மற்றும் டோவினோ தாமஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் டோவினோ தாமஸ், ரோஹித் வி.எஸ் மற்றும் அகில் ஜார்ஜ் இணைந்து தயாரித்தனர்.[1][2]
சுருக்கம்
தொகுஷாஜி தனது குடும்பத்தினருடன் பண்ணை வீட்டில் வசிக்கிறார். ஷாஜியின் மனைவி கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவராக உள்ளார். ஷாஜி தலைகணம் கொண்ட நபராகவும், பணக்காரராக இருப்பதாலும் நிறைய நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடும் பழக்கமும் கொண்டுள்ளார். சுயமாக தொழில் தொடங்க மனைவியின் உறவினர்களிடம் பணம் பெற்று அந்த தொழில் தோல்வியில் முடிந்ததால் கடன்காரராக உள்ளார்.
ஷாஜியின் தந்தை ரவீந்திரன் ஷாஜியின் மீது வெறுப்பில் உள்ளார். எதற்கும் ஷாஜி சரியான ஆளில்லை என கடிந்து கொள்கிறார். அன்றைய நாளில் ரவீந்திரன் மருத்துவமனை செல்லவேண்டிய நாள். ஆனால் ஷாஜியின் மனைவியும், பையனும் அம்மாச்சி வீட்டிற்கு செல்கிறார்கள். அன்றே மிளகுகளை பறிக்க கூலி ஆட்களும் வருகிறார்கள் என்பதால் ஷாஜி மட்டும் வீட்டில் தங்குகிறார். சேமிப்பகத்தில் உள்ள தந்தை ரவீந்தரனின் மிளகுகளை திருடி தன்னுடைய பணப்பிரட்சனையை தீர்த்து விடலாம் என ஷாஜி நினைக்கிறார். ஆனால் வேலைக்கு வந்த நபர்களில் ஒரு இளைஞன் ஷாஜியை தாக்குகிறான். பிறகு அந்த இளைஞனின் நாயை ஷாஜி கொன்றதும், அதற்காக ஷாஜியை பலிவாங்க அந்த இளைஞன் வந்திருப்பதும் தெரிகிறது.
பன்றியை வேட்டையாடி உண்ணும் இளைஞனுக்கும், பெரும் நிலத்திற்கு சொந்தக்காரரான ஷாஜிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள், பழக்கவழக்கங்கள் இப்படத்தில் தெளிவாக காட்டப்படுகின்றன. இறுதி சண்டையில் ஷாஜியை அந்த இளைஞன் பன்றியை கையாளுவதை போல வேட்டையாடூ தனது பக்கமிருக்கும் தர்மத்தை வெளிபடுத்துவதாக படம் நிறைவடைகிறது.
நடிகர்கள்
தொகு- கதாநாயகனாக சுமேஷ் மூர்
- ஷாஜியாக டோவினோ தாமஸ்
- ரவீந்திரனாக லால் பால்
- வித்யா ஷாஜியாக திவ்யா பிள்ளை
- மணி ஆஷனாக பிரமோத் வெல்லியநாத்
- ஷாஜியின் நண்பராக ஸ்ரீஜித் ரவி
- அனிலாக பிபின் பெரும்பில்லிகுன்னல்
தயாரிப்பு
தொகு11 ஜூலை 2020 அன்று, டோவினோ தாமஸ் தனது அடுத்த திட்டமான களை என்று அறிவித்தார்.[3] படத்தின் பூசை 5 செப்டம்பர் 2020 அன்று செய்யப்பட்டது [4] மற்றும் முதன்மை புகைப்படம் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது.[5] 7 அக்டோபர் 2020 அன்று டொவினோ சண்டைக்காட்சிகளுக்காக படப்பிடிப்பின் போது அடிபட்டமையால் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .[6][7][8] அவர் காயங்களிலிருந்து மீண்ட பின்னர் 2020 டிசம்பர் 18 அன்று படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.[9][10] படப்பிடிப்பு 30 டிசம்பர் 2020 அன்று நிறைவடைந்தது.[11][12]
இசை
தொகுவிநாயக் சசிகுமார் எழுதிய வான்யம் பாடல் டான் வின்சென்ட் இசையில் 20 மார்ச் 2021 அன்று ஜூவிஸ் புரொடக்ஷனின் யூடியூப் [1] சேனலில் வெளியிடப்பட்டது.
ட்ராக் | பாடல் | பாடலாசிரியர் | இசையமைப்பாளர் | பாடகர் (கள்) |
---|---|---|---|---|
1 | வான்யம் | விநாயக் சசிகுமார் | டான் வின்சென்ட் | அமிர்தா ஜெயக்குமார், சாத்தன் மூபன், கரியன் மூபன் |
வெளியீடு
தொகுதிரையரங்கம்
தொகுகளை திரைப்படம் மார்ச் 25 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[13][14]
செயலி
தொகுகளை அமேசான் பிரைம் வீடியோவில் 24 மே 2021 இல் வெளியானது.
வரவேற்பு
தொகுவிமர்சன பதில்
தொகுஇப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்தது. தி அப்டேட் 3/5 மதிப்பிடப்பட்ட திரைப்படத்தின் வைசாக் வாமதேவன் மற்றும் "காலா ஒரு புதிய காட்சி அனுபவத்தை வழங்குகிறது, அங்கு தொழில்நுட்ப பக்கங்களும் முதலிடத்தில் இருந்தன" [15]
பிலிம் கம்பானியனின் அனுபமா சோப்ரா எழுதினார், "படம் உங்களை கசக்கிப் போடுகிறது, உங்களுக்குள் இருளைப் பார்க்கிறது, மேலும் சிந்திக்க உங்களை விட்டுச்செல்கிறது" [16]
குறிப்புகள்
தொகு- ↑ Shrijith, Sajin (5 February 2021). "Kala is a tale of fear: Rohith VS". தி நியூ இந்தியன் எக்சுபிரசு.
- ↑ K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". இந்தியா டுடே.
- ↑ K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". இந்தியா டுடே.K., Janani (11 July 2020). "Kala: Tovino Thomas announces new film with director VS Rohith". இந்தியா டுடே.
- ↑ Pandey, Nikhil (7 September 2020). "Tovino Thomas Begins Shooting For Rohith VS' 'Kala'; Shares Pictures From Puja Ceremony". ரிபப்ளிக் தொலைக்காட்சி.
- ↑ "Tovino's look from Kala out". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 1 October 2020.
- ↑ G., Krishna Kumar (7 October 2020). "Malayalam actor Tovino Thomas hospitalised". தி இந்து.
- ↑ "Actor Tovino Thomas hospitalised after accident on Kala set". இந்தியன் எக்சுபிரசு. 7 October 2020.
- ↑ Rajan, Silpa (7 October 2020). "Tovino Thomas hospitalized after getting injured on the set of 'Kala'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ "Tovino Thomas resumes shoot of Kala". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 December 2020.
- ↑ "Tovino Thomas back on 'Kala' sets after recovering from injuries". தி நியூஸ் மினிட். 19 December 2021.
- ↑ "Tovino Thomas completes 'Kala'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 30 December 2020.
- ↑ "Tovino Thomas's 'Kala' shooting wrapped up". தி நியூஸ் மினிட். 30 December 2020.
- ↑ "Tovino Thomas upbeat about 'A' certificate for Kala, announces release date". இந்தியன் எக்சுபிரசு. 18 March 2021.
- ↑ "Tovino's 'Kala' to hit theatres in March". மாத்ருபூமி (இதழ்). 17 March 2021. Archived from the original on 19 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Vaisakh, Vamadevan. "കള റിവ്യൂ; ഒരു പുതിയ ദൃശ്യാനുഭവം ഒരുക്കി ടോവിനോ ചിത്രം". The Update. Archived from the original on 28 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 March 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Chopra, Anupama. "Kala, On Amazon Prime Video, Will Batter And Dazzle You". பார்க்கப்பட்ட நாள் May 25, 2021.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help)