கள்ளிப்புறா

பறவை இனம்
கள்ளிப்புறா
சிரிக்கும் புறா
இந்தியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கொலும்பிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
சிபில்லோபெலியா
இனம்:
சி. செனெகேலென்சிசு
இருசொற் பெயரீடு
சிபில்லோபெலியா செனெகேலென்சிசு
(லின்னேயஸ், 1766)
வேறு பெயர்கள்
  • கொலும்பா செனெகேலென்சிசு லின்னேயஸ், 1766
  • சிரிடெப்டோபெலியா செனெகேலென்சிசு (லின்னேயஸ், 1766)
  • சிடிக்மேடோபெலியா செனெகேலென்சிசு (லின்னேயஸ், 1766)
சிரிடெப்டோபெலியா செனெகேலென்சிசு
noicon
குரல் ஒலியின், ஒளிப்படம்

கள்ளிப்புறா(உயிரியல் பெயர்:Stigmatopelia senegalensis) (Laughing Dove), சிரிக்கும் புறா என்றும் அழைக்கப்படுகிறது. இது சிறியவகை புறா இனத்தைச் சார்ந்தது.ஆப்பிரிக்காவின் தெற்கு சகாராப் பகுதிகளிலும், அரபு நாடுகளிலும், கிழக்கு ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா வரையிலும், மேற்கு ஆசுத்திரேலியாவிலும் காணப்படுகிறது. அந்தந்த பகுதிகளில் செவ்வனே இனப்பெருக்கமும் செய்யும் இயல்புடையதாக இருக்கிறன.இதன் எடை 100 கிராம் அளவில் உள்ளது.

வகைப்பாடு

தொகு

இப்பறவைகளின் சிறிய சிறகுகளின் தொகுதிகள், அளவு வேறுபாடுகளின் அடிப்படையில் ஐந்து கிளையினங்களாக வகைபடுத்தபட்டுள்ளது:[2]

  • S. s. phoenicophila (ஆர்டெர்ட், 1916) – மொராக்கோ முதல் வடமேற்கு லிபியா வரை
  • S. s. aegyptiaca (Latham, 1790) – நைல் பள்ளத்தாக்கு (எகிப்து)
  • S. s. senegalensis (Linnaeus, 1766) – southern laughing dove, மேற்கு அரேபியா, சுகுத்திரா தீவு, சகாராவுக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்கா
  • இந்தியக் கள்ளிப்புறா S. s. cambayensis (Gmelin, JF, 1789) – கிழக்கு அரேபியா மற்றும் கிழக்கு ஈரான் முதல் பாக்கித்தான், இந்தியா, வங்கதேசம் வரை
  • S. s. ermanni (Bonaparte, 1856) – கஜகஸ்தான், வடக்கு ஆப்கானிஸ்தான், மேற்கு சீனா

சிறப்புகள்

தொகு
  • இப்புறாவானது, சிறுபுறா இனமாகும்.நீளமான இறகுகளை உடைய இவை, அளவு 25 செ.மீ. இருக்கும். இறக்கைகளும், வாலும் சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும், இறக்கையில் சாம்பல் நிறமும் கலந்து இருக்கும்.தொண்டையில் கரும்புள்ளிகள் காணப்படுகிறது. தலைப்பகுதி இளஞ்சிவப்பிலும், வயிற்றுப் பகுதியில் வெள்ளைநிறப்பரவலும் அமைந்துள்ளது.
  • இவை குச்சிக்களைக் கொண்டு, கூடுகளை, மரத்தின் மேற்புறத்திலேயேக் கட்டுகின்றன. தனது இணையுடன் கடைசி வரையில் வாழ்கிறது.
  • விதைகள், புற்கள், தானியங்களை பெரும்பாலும் உண்ணுகின்றன. அவ்வப்பொழுது, சிறு பூச்சிகளையும் உண்ணுகின்றன.
  • வெள்ளை நிறத்தில், இரு முட்டைகளை மட்டுமே இடுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Stigmatopelia senegalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2009.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009.
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளிப்புறா&oldid=3776742" இலிருந்து மீள்விக்கப்பட்டது