கவாம்போதி
கவாம்போதி கருநாடக இசையின் 43வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 43வது இராகம் கீர்வாணி (ஆங்கிலத்தில் Geervaani).
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ரி1 க2 ம2 ப த1 நி1 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம2 க2 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
தொகு- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் சேனாவதி (07) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் தைவத சுரம் முறையே ஹாடகாம்பரி (18) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
தொகுவகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | நமோமஸ்தி கீர்வாணி | முத்துசுவாமி தீட்சிதர் | த்ரிபுட |
கிருதி | வீரராகவ | கோடீஸ்வர ஐயர் | ஆதி |