கவிதா நெகேமியா

கவிதா நெகேமியா சமூக நோக்குக் கொண்ட இந்திய தொழிலதிபர். இவர் ஃபிண்டெக் நிறுவனம் அர்டூ (Artoo)வின் இணை நிறுவனர்.[1][2][3] வணிக உத்திகள் மற்றும் சந்தை அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் பொருளாதார ரீதியாக நலிந்தவர்களுக்கு உதவுவதற்காக 2010 மே மாதத்தில் பெங்களூரில் உள்ள சமீர் செகல் நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைத்தார்.

Kavita Nehemiah
தேசியம்Indian
படித்த கல்வி நிறுவனங்கள்Cornell University, St. Stephen's College, Delhi
பணிCo-founder & COO, Artoo
வலைத்தளம்
artoo.com

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து வளர்ந்த கவிதா, இந்தியாவின் ஊட்டிக்கு அருகில் உள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில் கல்வி பயின்றார். டெல்லியில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் (ஹானர்ஸ்) இளங்கலை பட்டமும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.

இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் சிறிய தொழிற்சாலை வைத்திருந்த தந்தைக்கு மகளாக பிறந்த கவிதாவுக்கு இயல்பாகவே தொழில் மீது ஆர்வம் இருந்தது. பொருளாதார வாய்ப்புகளால் முழு பகுதியுமே மாறும் என்பதில் நம்பிக்கைக் கொண்டிருந்தார் கவிதா. இளமையில் இருந்தே வறுமை ஒழிப்புக்கு, மாற்றுத் தீர்வுகளைக் கண்டுபிடித்து செயல்படுத்த விரும்பினார் கவிதா.

தொழில்

தொகு

இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, கவிதா அப்போது வளர்ந்து வந்த நிறுவனமான எம்.எஃப்.ஐ உஜ்ஜீவன் நிதி சேவைகளில் பரணிடப்பட்டது 2020-03-03 at the வந்தவழி இயந்திரம் சேர்ந்தார். அங்கு அவர், கடன் மற்றும் இடர் பகுப்பாய்வு, சந்தை ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் நல்ல அனுபவம் பெற்றார். உஜ்ஜீவனில், அவர் தலைமையில் தனிப்பட்ட கடன் வழங்கும் பணிகள் தொடங்கின.

 
சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான கள நிதர்சனம் குறித்த ஆர்ட்டூவின் குழு விவாதத்தில் கவிதா

எம்பிஏ மேற்படிப்புக்காக கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு சென்ற கவிதா, தனது நிறுவனமான ஆர்டூ நிறுவனத்தை சமீர் செகலுடன் இணைத்தார். ஆர்டூவில் சி.ஓ.ஓவாக இருக்கும் கவிதா, சமீர் செகலுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ரென்ட்-டு-ஓன் ஆபிரிக்கா (ஜாம்பியாவின் லுசாக்காவை தளமாகக் கொண்ட ஒரு மைக்ரோ-சொத்து குத்தகை நிறுவனம்), விஷன்ஸ்ப்ரிங் (நியூயார்க்கை தளமாகக் கொண்ட இது முன்னர் ஸ்கோஜோ அறக்கட்டளை என்று அறியப்பட்டது) மற்றும் எலிவர் ஈக்விட்டியுடன் பரணிடப்பட்டது 2020-03-03 at the வந்தவழி இயந்திரம் கோடைகால பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

அங்கீகாரம்

தொகு

கவிதா தனது எம்பிஏ படிப்பிற்காக 2010ஆம் ஆண்டில் பீட்டர் மற்றும் ஆலிஸ் வான் லோசெக் உதவித்தொகையைப் [4] பெற்றார். சமூகப் பொறுப்புள்ள ஒரு முயற்சியைக் கட்டியெழுப்பவும், படிப்பை முடித்த பின்னர் தங்கள் சொந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்புவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தொழில்முனைவோர், உங்கள் வணிகத்தை உருவாக்குதல் மற்றும் நிதி திரட்டுதல் போன்ற தலைப்புகளில் பல நிகழ்வுகளில் அவர் பேசியுள்ளார்.[5] ருவாண்டாவின் கிகாலியில் நிதி சேர்க்கை குறித்த மாஸ்டர்கார்டு அறக்கட்டளை சிம்போசியத்தில் சோஃபி 2016, இல் ஆர்டூவை பிரதிநிதித்துவப்படுத்தினார். வருடாந்திர மாஸ்டர்கார்டு வாடிக்கையாளர்கள் அறக்கட்டளையில் ஆர்டூ இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[6]

குறிப்புகள்

தொகு
  1. Siva, Meera. "Going social for a cause". http://www.thehindubusinessline.com/portfolio/net-worth/going-social-for-a-cause/article6254733.ece. 
  2. Vageesh, NS. "Artoo makes it easier to lend to small businesses". http://www.thehindubusinessline.com/money-and-banking/artoo-makes-it-easier-to-lend-to-small-businesses/article9231191.ece. 
  3. Ghosh, Aparna. "Artoo | A solution to serve the bottom of the pyramid". www.livemint.com/. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  4. "Future MBA students win $40,000 in scholarships for their studies abroad". epaper.timesofindia.com. Archived from the original on 2019-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Entrepreneurs share insights on building Social Startups – The Social Enterprise Summit Bangalore | Headstart". headstart.in. Archived from the original on 2016-08-14. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  6. Foundation, MasterCard. "Hello Paisa Wins Second Annual MasterCard Foundation Clients at the Centre Prize". Mastercard Foundation Symposium on Financial Inclusion 2016. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_நெகேமியா&oldid=3635589" இலிருந்து மீள்விக்கப்பட்டது