காடே ராமமோகன்
காடே ராமமோகன் ராவ் (Gadde Ramamohan Rao) ஆந்திராவின் விஜயவாடா தொகுதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக இந்தியாவின் பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். [1] [2] இவர் 1994-1999 காலகட்டத்தில் கன்னவரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [3] [4] 2004 முதல் 2009 வரை தெலுங்கு தேசம் கட்சியின் விஜயவாடா நகரப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்தார். விஜயவாடா கிழக்கு தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ளார். [5] 2014 ஆந்திரப் பிரதேசத் தேர்தலில் விஜயவாடா (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2019 ஆந்திர பிரதேச தேர்தலில் அதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காடே ராமமோகன் | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் விஜயவாடா கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2014 | |
முன்னையவர் | ஒய். இரவி |
விஜயவாடா மக்களவைத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | ப. உபேந்திரா |
பின்னவர் | இலகடபதி ராசகோபால் |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் கன்னவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | |
பதவியில் 1994–1999 | |
முன்னையவர் | எம். ரத்னா போசு |
பின்னவர் | டி. வி. பாலவர்தன் ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | காடே அனுராதா |
As of 14 மே, 2010 மூலம்: [1] |
இவரது மனைவி காடே அனுராதாவும் தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல்வாதி ஆவார். மேலும் அவர் கிருஷ்ணா மாவட்ட ஊராட்சியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Exciting contest on the cards" இம் மூலத்தில் இருந்து 11 April 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090411071645/http://www.hindu.com/2009/04/08/stories/2009040860320300.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Thirteens Lok Sabha, Members from Andhra Pradesh". Government of India. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 January 2010.
- ↑ "Upendra seeks a hat-trick in AP's most politically conscious city". ரெடிப்.காம். http://www.rediff.com/election/1999/sep/14ap1.htm. பார்த்த நாள்: 22 January 2010.
- ↑ "Gadde Ramamohan Profile". Archived from the original on 23 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ "Gadde Rammohan resigns" இம் மூலத்தில் இருந்து 26 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090526234729/http://www.hindu.com/2009/05/22/stories/2009052258990300.htm. பார்த்த நாள்: 22 January 2010.