இலகடபதி ராசகோபால்

இந்திய அரசியல்வாதி

இலகடபதி ராசகோபால் (Lagadapati Rajagopal) (பிறப்பு 1964) [1] ஓர் தொழிலதிபரும் மற்றும் முன்னாள் [2] அரசியல்வாதியும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் விஜயவாடா மக்களவைத் தொகுதியிலிருந்து பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.[3] [4] மக்களவையில் தெலங்காணா மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அரசியலில் இருந்தும் விலகினார். [2] ராச்கோபால், லான்கோ இன்ஃப்ராடெக் என்ற நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருந்தார் . [5] [6]

இலகடபதி ராசகோபால்
விஜயவாடா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
22 மே 2004 – 19 பெப்ரவரி 2014
முன்னையவர்காடே ராமமோகன்
பின்னவர்சீனிவாஸ் கேசினேனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964
நெல்லூர், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பத்மா சிறீ லகடபதி
பிள்ளைகள்2 மகன்கள்
பெற்றோர்(s)இலகடபதி ராமாநாயுடு
இலகடபதி ராமலக்சுமம்மா
வாழிடம்விசயவாடா
முன்னாள் கல்லூரிவி. ஆர். சித்தார்த்தா பொறியியல் கல்லூரி
இலயோலா பொதுப் பள்ளி, குண்டூர்
தொழில்தொழிலதிபர்

சொந்த வாழ்க்கை தொகு

இவர் எல். ராமலட்சுமம்மா மற்றும் ஒப்பந்ததாரர் எல். வி. ராம நாயுடு ஆகியோரின் மகனாகப் பிறந்தார். வி. ஆர். சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். [1]

அரசியல்வாதி ப. உபேந்திராவின் மகளை மணந்தார். இவர், கச்சா இரும்பு வணிகத்தையும் மின்துறை நிறுவனத்தையும் தொடங்கினார்.[1]

2004 இல், விஜயவாடா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினரானார். [1] தெலங்காணாவை ஆந்திராவிலிருந்து பிரிப்பதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். [1] இவரது தெலங்காணா எதிர்ப்பு நிலைகள் காரணமாக ஐதராபாத்து அலுவலகங்கள் இலக்குகளாக கருதப்பட்டதால் இவரது நிறுவனத்தின் தலைமையகம் தில்லிக்கு மாற்றப்பட்டது. [1]

13 பிப்ரவரி 2014 அன்று, தெலங்காணா மசோதா மீதான விவாதத்தின் போது, ராசகோபால் அவையில் இருந்தபோது மிளகுத் தூளைப் பயன்படுத்தினார். இதனால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றக் கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.[7] சபாநாயகர் மீரா குமார் [8] நான்கு உறுப்பினர்களுடன் சேர்ந்து இவரை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தார். [9] ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், இந்தச் செயல்களை "தேசத்துரோகம்" என்றார். [9] ராசகோபாலின் உருவபொம்மையை எரித்தும், வாரங்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு நடத்தியும் இவரது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். [10] பிப்ரவரி 2014 இல் இவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Kingshuk Nag (14 February 2014). "Lagadapati Rajagopal 'has no control over his temper' -". http://timesofindia.indiatimes.com/india/Lagadapati-Rajagopal-has-no-control-over-his-temper/articleshow/30369425.cms?referral=PM. பார்த்த நாள்: 26 February 2014. 
  2. 2.0 2.1 2.2 "Pepper spray' MP Lagadapati Rajagopal resigns from Lok Sabha'". HindustanTimes. 18 February 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
  3. "Congress MP Rajagopal to move SC against Telangana". The Hindu. 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  4. "Congress MP Lagadapati Rajagopal attacks Sonia over AP bifurcation issue - Economic Times". Articles.economictimes.indiatimes.com. 2014-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  5. "AP Congress MP L Rajagopal resigns over Telangana decision". Ibnlive.in.com. 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  6. "Lanco Infratech Limited". Lancogroup.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  7. "Regret pepper spray incident, says Lagadapati Rajagopal, continues to attack Cong". Deccan Chronicle. 2014-02-14. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  8. "Government influenced the Speaker to suspend select MPs: Rajagopal-Lok Sabha Elections News - IBNLive Mobile". M.ibnlive.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-26.
  9. 9.0 9.1 "Pepper spray leaves Lok Sabha - and nation - in tears". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.
  10. "Widespread protests against 'pepper attack'". Hindu. பார்க்கப்பட்ட நாள் 17 February 2014.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகடபதி_ராசகோபால்&oldid=3850874" இலிருந்து மீள்விக்கப்பட்டது