ப. உபேந்திரா

இந்திய அரசியல்வாதி

பர்வதனேனி உபேந்திரா (Parvathaneni Upendra) (14 ஜூலை 1936 - 16 நவம்பர் 2009) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பொத்துனூரு கிராமத்தில் பிறந்தார்.

பர்வதனேனி உபேந்திரா
தொகுதிவிஜயவாடா
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
பதவியில்
2 டிசம்பர் 1989 – 10 நவம்பர் 1990
முன்னையவர்எச். கே. எல். பகத்
பின்னவர்சந்திரசேகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-07-14)14 சூலை 1936
பொத்துனூரு
இறப்பு16 நவம்பர் 2009(2009-11-16) (அகவை 73)
ஐதராபாத்து, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய முன்னணி
இந்திய தேசிய காங்கிரசு
பிரசா ராச்யம் கட்சி
துணைவர்
பர்வதனேனி வசுந்தரா தேவி (தி. 1956)
பிள்ளைகள்4

ஒரு வெளிப்படையான அரசியல்வாதியான, உபேந்திரா, தேசிய அளவில், கட்சி எல்லைகளைக் கடந்து, பல மூத்த அரசியல் தலைவர்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்தார். 1988ல் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக இது இவருக்கு உதவியது.

தொழில்

தொகு

உபேந்திரா, ஆந்திரப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் புது தில்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் பொது நிர்வாகத்தில் ஆங்கில இலக்கியம், மக்கள் தொடர்பு மற்றும் இதழியல் ஆகியவற்றில் முதுகலை சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.[1] பிறகு பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

உபேந்திரா அரசியலில் நுழைவதற்கு முன்பு இந்திய ரயில்வேயில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இரண்டு தசாப்தங்களாக பணியாற்றினார். இவர் 1977 மற்றும் 1979 க்கு இடையில் அப்போதைய இரயில்வே அமைச்சர் மது தண்டவதேவின் தனிச் செயலாளராக பணியாற்றினார்.

அரசியல்

தொகு

1982 இல், இவர் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான என்.டி.ராமராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1984 ஆம் ஆண்டு முதன்முதலில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1996 வரை அதன் உறுப்பினராகத் தொடர்ந்தார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது (1984-1989) மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்த உபேந்திரா, வி.பி. சிங்கின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்தார். [2] இந்தியாவின் முதல் கூட்டணி அரசாங்கத்திற்கு அவசியமான பல்வேறு பாராளுமன்ற நடைமுறைகளை இவர் மேற்பார்வையிட்டார். பிரசார் பாரதி சட்டம் 1990 இயற்றுவதற்கும் இவர் பொறுப்பேற்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் சேர்ந்து இவர் எல். கே. அத்வானியின் இரத யாத்திரையில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மதுகர் தேவ்ரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றார், ஆனால் அது வெற்றிபெறவில்லை.

சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து 1992 மார்ச்சில் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வெளியேறிய பிறகு, உபேந்திரா 1994 இல் முறையாக காங்கிரசில் சேருவதற்கு முன்பு மாநிலங்களவையில் "இணைக்கப்படாத" உறுப்பினராக ஓரிரு ஆண்டுகள் கழித்தார். இவர் 1996 இல் விஜயவாடாவிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1998 இலும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உபேந்திரா, சந்திரபாபு நாயுடு தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி போன்ற கட்சிகளை எதிர்க்கும் நிலைப்பாட்டை இவர் தொடர்ந்து கடைப்பிடித்தார். [3] இவர் நவம்பர் 2008 இல் ஆளும் காங்கிரசு கட்சியில் இருந்து விலகி நடிகரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் பிரசா ராச்யம் கட்சியில் சேர்ந்தார். [4]

விஜயவாடா ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தென் மத்திய ரயில்வேயின் முதல் நகரும் படிகட்டை அமைப்பதில் உபேந்திரா முக்கிய பங்கு வகித்தார். இவர் நகரத்திற்கு தூர்தர்ஷன் நிலையத்தை நிறுவுவதற்கும், சத்யநாராயணபுரம் ரயில் பாதையை அகற்றுவதற்கும் வழி வகுத்தார். [5]

உபேந்திரா தனது அரசியல் அனுபவத்தை பட்டியலிட்டு இரண்டு பகுதிகளாக கடம் ஸ்வாகதம் என்ற புத்தகத்தை எழுதினார்.

சொந்த வாழ்க்கை

தொகு

உபேந்திரா, 1956 இல் வசுந்தரா என்பவரை மணந்தார். தம்பதியினருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.

இறப்பு

தொகு

உபேந்திரா, 16 நவம்பர் 2009 அன்று தனது 73வது வயதில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஐதராபாத்தில் இறந்தார். [6]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • "Biographical Sketch: Upendra, Shri Parvathaneni". parliamentofindia.nic.in. Archived from the original on 22 February 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._உபேந்திரா&oldid=3850557" இலிருந்து மீள்விக்கப்பட்டது