காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்

காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் காட்டாங்குளத்தூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2] காளத்தீசுவரர் இறைவராக வீற்றிருக்கும் இக்கோயிலின் தாயார் ஞானாம்பிகை ஆவார். இக்கோயிலில் தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. நாகர் உருவம் தரித்த இராகு, கேது காட்சியளிக்கின்றனர். இராகு, கேது பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.

காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்
காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:12°48′41″N 80°01′38″E / 12.8114°N 80.0271°E / 12.8114; 80.0271
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:செங்கல்பட்டு மாவட்டம்
அமைவிடம்:காட்டாங்குளத்தூர்
சட்டமன்றத் தொகுதி:செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:83 m (272 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காளத்தீசுவரர்
தாயார்:ஞானாம்பிகை

கடல் மட்டத்திலிருந்து சுமார் 83 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள காட்டாங்குளத்தூர் காளத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°48′41″N 80°01′38″E / 12.8114°N 80.0271°E / 12.8114; 80.0271 ஆகும்.

விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[3][4]

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Kalatheeswarar Temple அருள்மிகு காளத்திசுவரர் கோயில் - Hindu temple - Kattankulathur - Tamil Nadu". yappe.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  2. "காட்டாங்கொளத்தூர் காளத்தீஸ்வரர் கோவிலில் நாகதோஷ பரிகார பூஜை - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!". News18 Tamil. 2023-05-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  3. "Sri Kalatheeswarar Temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  4. "Kalatheeswarar Temple, Kattangulathur, Chennai". Kalatheeswarar Temple, Kattangulathur, Chennai. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.
  5. "Arulmigu Sri Kaalathiswarar Temple, Kattankolathur - 603203, Chengalpattu District [TM003020].,RAGU KALA KOIL,KALATHESWARAR". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-30.

வெளி இணைப்புகள்

தொகு