காட்டுயிர்களைக் கடத்தல்

காட்டுயிர்கள் கடத்தல் என்பது அழிந்து வரும் காட்டு உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் மற்றும் தாவரங்களைச் சட்டவிரோதமாக சேகரித்தல், வர்த்தகம் செய்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தி வர்த்தகம் செய்தல் பன்னாட்டுச் சட்ட விரோதம் ஆகும்.[2] யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்தல், வன விலங்குகளை வேட்டையாடி உண்ணல், பாரம்பரிய மருத்துவத்திற்காகவும், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்காகவும், வீட்டில் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்காகவும் காட்டுயிர்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு வருகிறது,

Item depicts three tables against a wall with various illegal wildlife items across them. Some items include skins, ivory, taxidermy, and shoes.
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட காட்டுயிர்களை கைப்பற்றிய ஐக்கிய இராச்சியத்தின் எல்லை ரோந்து அணி, ஆண்டு 2013
தந்த வர்த்தகத்திற்காக வேட்டையாடப்படும் ஆப்பிரிக்க யானைகள்
வனவிலங்கு கடத்தல் வலையமைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டும் வரைபடம்.[1]

சீனாவும், அமெரிக்காவும் சட்டவிரோத வனவிலங்குகளை வாங்குபவர்களில் முதலிடத்தில் உள்ளனர்.[3].[4]

யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருக கொம்புகள் அரைக்கப்பட்டு பொடியாக்கி கடத்தப்படுகிறது..மேலும் உணவுக்காக பாம்புகளை சிறிய தகர டப்பாக்களில் வைத்துக் கடத்தப்படுகிறது.[5].

ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை குறைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று சட்டவிரோத காட்டுயிர் கடத்தலே காரணம். . கடந்த 30 ஆண்டுகளில் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை சுமார் 90% குறைந்துள்ளதால், ஆப்பிரிக்க யானைகளை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம், மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள அழிந்து வரும் உயிரினங்களின் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களின் (CITES) அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் கீழ், அழிந்து வரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இது அந்த இனங்களின் எண்ணிக்கையை மீட்டெடுக்க அனுமதிக்கும். சட்டவிரோத காட்டுயிர் கடத்தலைக் கண்காணிக்கும் அமைப்புகளின்படி, கடத்தல்காரர்கள் அதிகளவில் அஞ்சல் மற்றும் தூதஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2023 மற்றும் சனவரி 2024க்கு இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள அஞ்சல் நிலையங்களைப் பயன்படுத்திப் பல்வேறு வகையான பல்லிகளைக் கடத்த முயற்சிகள் நடந்தது.ஆப்பிரிக்காவில் உணவிற்காக காட்டுயிர்கள் வேடையாடப்படுகிறது. [6] [7] [8] மேலும் காட்டுயிர்களை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யப்படுகிறது. [9][10][6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Money Laundering and the Illegal Wildlife Trade, The Financial Action Task Force (FATF), 2020
  2. Smart, Utpal; Cihlar, Jennifer Churchill; Budowle, Bruce (2021-09-01). "International Wildlife Trafficking: A perspective on the challenges and potential forensic genetics solutions" (in en). Forensic Science International: Genetics 54: 102551. doi:10.1016/j.fsigen.2021.102551. பன்னாட்டுத் தர தொடர் எண்:1872-4973. பப்மெட்:34134047. https://www.sciencedirect.com/science/article/pii/S1872497321000880. 
  3. Guynup, Sharon; Shepherd, Chris R.; Shepherd, Loretta (2020). "The True Costs of Wildlife Trafficking". Georgetown Journal of International Affairs 21: 28–37. doi:10.1353/gia.2020.0023. 
  4. Satyaem, Chaiwat (May 12, 2023). "Wildlife trafficking gang arrested". Bangkok Post. Archived from the original on 2023-11-01. பார்க்கப்பட்ட நாள் 2023-11-01.
  5. யானைத் தந்தத்தில் பவுடர், காண்டாமிருக கொம்புகளில் கூழ் - கடத்தல்காரர்களின் புதிய உத்திகள்
  6. 6.0 6.1 Gluszek, Sarah; Viollaz, Julie; Mwinyihali, Robert; Wieland, Michelle; Gore, Meredith L. (2021). "Using conservation criminology to understand the role of restaurants in the urban wild meat trade" (in en). Conservation Science and Practice 3 (5). doi:10.1111/csp2.368. பன்னாட்டுத் தர தொடர் எண்:2578-4854. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/csp2.368. 
  7. Dell, BreeAnna; Willcox, Adam; Souza, Marcy (2022-08-30). Attitudes, practices, and zoonoses awareness of community members involved in the bushmeat trade near Murchison Falls National Park, northern Uganda. Open Science Framework. doi:10.17605/OSF.IO/Q4MDV. https://osf.io/q4mdv/. 
  8. Rentsch, Dennis; Damon, Amy (2013-07-01). "Prices, poaching, and protein alternatives: An analysis of bushmeat consumption around Serengeti National Park, Tanzania" (in en). Ecological Economics 91: 1–9. doi:10.1016/j.ecolecon.2013.03.021. பன்னாட்டுத் தர தொடர் எண்:0921-8009. https://www.sciencedirect.com/science/article/pii/S0921800913001122. 
  9. Chaber, Anne-Lise; Allebone-Webb, Sophie; Lignereux, Yves; Cunningham, Andrew A.; Marcus Rowcliffe, J. (2010). "The scale of illegal meat importation from Africa to Europe via Paris: Illegal intercontinental meat trade" (in en). Conservation Letters 3 (5): 317–321. doi:10.1111/j.1755-263X.2010.00121.x. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1755-263X.2010.00121.x. 
  10. Musing, Louisa; Norwisz, Magdalena; Kloda, Jane; Kecse-Nagy, Katalin (2018). Wildlife Trade in Belgium: An analysis of CITES trade and seizure data. TRAFFIC International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85850-443-8.