வனவிலங்கை வேட்டையாடுதல்

காட்டு விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடுதல் மற்றும் பிடிப்பது

வேட்டையாடுதல் (Poaching) என்பது சட்டவிரோத வேட்டையாடல் அல்லது காட்டு விலங்குகளை பிடிப்பதாகும். பொதுவாக இது நில பயன்பாட்டு உரிமைகளுடன் தொடர்புடையது.[1][2]ஒரு காலத்தில் வறிய விவசாயிகளால் வாழ்வாதார நோக்கங்களுக்காகவும், குறைந்த உணவுப் பொருட்களுக்காகவும் வேட்டையாடப்பட்டது.[3] இது பிரபுக்கள் மற்றும் பிராந்திய ஆட்சியாளர்களின் வேட்டையாடும் சலுகைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டது.[4]

பிரடெரிக் ரூஜ் (1867-1950) எழுதிய தி போச்சர் நூலின் மேலட்டை

1980களிலிருந்து, "வேட்டையாடுதல்" என்ற சொல் காட்டு தாவரங்களை சட்டவிரோதமாக அறுவடை செய்வதைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. [5] [6] விவசாய அடிப்படையில், 'வேட்டையாடுதல்' என்ற சொல், கால்நடைகளின் கால்களால் மண் இழப்பிற்கு அல்லது புல் சேதம் விளைவிக்கும் செயல்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இச்செயல் உற்பத்தி நிலம் கிடைப்பது, தண்ணீர் மாசு அதிகரிப்பு மற்றும் கால்நடைகளின் நலன் சார்ந்த பிரச்சனைகள் ஆகியவற்றை பாதிக்கலாம். கால்நடைகளைத் திருடுவது, பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை திருடுவது போன்றவை திருட்டு என்று வகைப்படுத்துகிறது. இது வேட்டையாடுதல் என்று வகைப்படுத்தப் படுவதில்லை.[7]

ஐக்கிய நாடுகளின் “நிலையான வளர்ச்சி இலக்கு 15” என்ற திட்டம் அனைத்து வனவிலங்குகளின் நிலையான பயன்பாட்டை உள்ளடக்கியது. பாதுகாக்கப்பட்ட வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் ஆகியவற்றைக் கையாள்வதில் நடவடிக்கை எடுப்பதை இலக்காகக் கொண்டு அவை தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கிடைப்பதை உறுதி செய்கிறது. [8]

சட்ட அம்சங்கள் தொகு

 
வேட்டையாடுபவர், 1916 ஆம் ஆண்டு ஓவியம் வரைந்தவர் டாம் தாம்சன், ஒன்றாரியோ, தொராண்டோ

1998 ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் காட்டுயிர்களை வைத்திருப்பது, கொண்டு செல்வது, நுகர்வது அல்லது விற்பது மற்றும் அதன் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் அவற்றை சட்டவிரோதமாக வளர்ப்பது போன்ற செயல்களைச் செய்வது ஒரு சுற்றுச்சூழல் குற்றம் என்ற கருத்தை முன்மொழிந்தனர். மேலும், புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பாதுகாக்க நிறுவப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு முரணான எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையாகவும் வரையறுக்கப்பட்டனர்.

வேட்டையாடுவதை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிர்வாழ்விற்கான மிகக் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாக அவர்கள் கருதினர்.[6] வனவிலங்கு உயிரியலாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் வேட்டையாடுவது பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்லுயிர் பெருக்கத்தில் தீங்கு விளைவிக்கும் என்று கருதுகின்றனர். இதனால் வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைகிறது, அதன் இனங்கள் உள்நாட்டில் குறைந்து வருகின்றன. மேலும் இச்செயல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறது.

புலிகள் மற்றும் மூக்குக் கொம்பன் போன்ற பல விலங்குகளின் உடல் பாகங்கள், மனித உடலில் ஆண்மைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்துவது உள்ளிட்ட சில நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக பாரம்பரியமாக சில கலாச்சாரங்களில் நம்பப்படுகிறது. வேட்டையாடப்பட்ட புலியின் பிறப்புறுப்புகள் மற்றும் புலியின் கண்கள் ஆண்மைத்தன்மையை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் - பெரும்பாலும் ஆசிய நாடுகளில் குறிப்பாக வியட்நாம் மற்றும் சீனா - கருப்பு சந்தையில் இந்த பாகங்கள் விற்கப்படுகின்றன.[9] இத்தகைய மாற்று மருத்துவ நம்பிக்கைகள் போலி அறிவியல் மற்றும் ஆதார அடிப்படையிலான மருத்துவத்தால் ஆதரிக்கப்படவில்லை.[10] [11]

 
பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக ஒரு சீன சந்தையில் சட்டவிரோத பொருட்களை விற்கும் விற்பனையாளர். படத்தில் காட்டப்பட்டுள்ள சில துண்டுகளில் புலியின் பாதம் போன்ற விலங்குகளின் பாகங்களும் அடங்கும்.

பாரம்பரிய சீன மருத்துவம் பெரும்பாலும் தாவரங்களின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், இலை, தண்டு, பூ, வேர் மற்றும் விலங்குகள் மற்றும் தாதுப் பொருட்களிலிருந்து வரும் பொருட்களையும் உள்ளடக்கியது. அழிந்து வரும் உயிரினங்களின் ( கடற்குதிரைகள், மூக்குக் கொம்பனின் கொம்புகள், கரடிப் பூனை, பாங்கோலின் செதில்கள் மற்றும் புலியின் எலும்புகள் மற்றும் நகங்கள் போன்றவை) பாகங்களைப் பயன்படுத்துவது சர்ச்சையை உருவாக்கி, வேட்டையாடுபவர்களின் கருப்புச் சந்தைக்கு வழிவகுக்கிறாது.[12] [13] [14] புலிகளின் பாகங்களின் ஆற்றல் குறித்த ஆழமான கலாச்சார நம்பிக்கைகள் சீனா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பரவலாக உள்ளன. சுமாத்திராப் புலி போன்ற ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் திறந்த சந்தைகளில் இந்த பொருட்களின் காட்சி மற்றும் விற்பனையை நிறுத்தத் தவறிவிட்டன.[15]

பல விலங்குகளின் இயற்கையான பொருளான தந்தம், சட்டவிரோத விலங்கு பொருட்கள் மற்றும் வேட்டையாடுதல் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. தந்தம் என்பது கலைப் பொருட்கள் மற்றும் நகைகளை உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். அங்கு தந்தம் வடிவமைப்புகளுடன் செதுக்கப்படுகிறது. சீனா தந்தம் வர்த்தகத்தின் அதிக அளவு நுகர்வோராகவும் மற்றும் கணிசமான அளவு விற்பனையிலும் உள்ளது. 2012 ஆம் ஆண்டில், த நியூயார்க் டைம்ஸ் அனைத்து சட்டவிரோத தந்தங்களில் சீனாவில் மட்டுமே 70% காணப்படுகிறது என அறிவித்தது.[16] [17]

விலங்குகளின் மென்மயிர்களும் வேட்டைக்காரர்களால் தேடப்படுகிறது. பாரம்பரியமாக ஆஸ்திரியா மற்றும் பவேரியாவின் ஆல்ப்ஸ் பகுதிகளில் டிராக்டன் தொப்பிகளில் அலங்காரமாக பயன்படுத்தப்படும் முடி, முன்பு வேட்டையாடுபவர்களுக்கு வழங்கப்படும் கோப்பையாக அணியப்பட்டது. கடந்த காலத்தில், இது சாமோயிஸ் என்ற ஆட்டின் கீழ் கழுத்தில் இருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது.[18]

வேட்டைக்கு எதிரான முயற்சிகள் தொகு

உலகம் முழுவதும் பல்வேறு வேட்டை எதிர்ப்பு முயற்சிகள் கடுமையாக எடுக்கப்படு வருகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதி விரிவாக்கத்தை விட வேட்டையாடுவதால் பாதிக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதில் இத்தகைய பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.[19] [20]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Poaching". Random House Webster's Unabridged Dictionary (2nd). (2002). New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-42599-8. 
  2. "Poaching". World book Encyclopedia. (2005). Springfield: Merriam-Webster, Inc.. 
  3. "Poaching". Encyclopædia Britannica (15th). (2010). Encyclopædia Britannica, Inc.. 
  4. Herrschaftspraxis in Bayern und Preussen im 19. Jahrhundert: ein historischer Vergleich. Frankfurt, New York: Campus Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783593358499.
  5. Power Bratton, S. (1985). "Effects of disturbance by visitors on two woodland orchid species in Great Smoky Mountains National Park, USA". Biological Conservation 31 (3): 211–227. doi:10.1016/0006-3207(85)90068-0. Bibcode: 1985BCons..31..211P. https://archive.org/details/sim_biological-conservation_1985_31_3/page/211. 
  6. 6.0 6.1 Muth, R. M.; Bowe, Jr. (1998). "Illegal harvest of renewable natural resources in North America: Toward a typology of the motivations for poaching". Society & Natural Resources 11 (1): 9–24. doi:10.1080/08941929809381058. Bibcode: 1998SNatR..11....9M. 
  7. August, R. (1993). "Cowboys v. Rancheros: The Origins of Western American Livestock Law". Southwestern Historical Quarterly 96 (4): 457–490. https://archive.org/details/sim_southwestern-historical-quarterly_1993-04_96_4/page/457. 
  8. "Goal 15 targets". Archived from the original on 4 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  9. Pederson, Stephanie. "Continued Poaching Will Result in the Degradation of Fragile Ecosystems". The International. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  10. Jacobs, Ryan. "AK-47s, Quack Medicine, and Heaps of Cash: The Gruesome Rhino Horn Trade, Explained". Mother Jones (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-24.
  11. Le Roux, Mariëtte (25 March 2018). "Quackery and superstition: species pay the cost". Agence France-Presse (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-24 – via phys.org.
  12. van Uhm, D.P. (2018). "The social construction of the value of wildlife: A green cultural criminological perspective". Theoretical Criminology 22 (3): 384–401. doi:10.1177/1362480618787170. பப்மெட்:30245576. 
  13. Weirum, B. K.. "Will traditional Chinese medicine mean the end of the wild tiger?". http://www.sfgate.com/travel/article/Will-traditional-Chinese-medicine-mean-the-end-of-3236621.php. 
  14. "Rhino rescue plan decimates Asian antelopes". Newscientist.com. Archived from the original on 2013-05-17. பார்க்கப்பட்ட நாள் 2010-03-18.
  15. Wednesday (2008-02-13). "Traffic.org". Traffic.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  16. Gettleman, Jeffrey (3 September 2012). "Elephants Dying in Epic Frenzy as Ivory Fuels Wars and Profits". The New York Times. https://www.nytimes.com/2012/09/04/world/africa/africas-elephants-are-being-slaughtered-in-poaching-frenzy.html?pagewanted=all. 
  17. Gettleman, Jeffrey (26 December 2012). "In Gabon, Lure of Ivory Is Hard for Many to Resist". The New York Times. https://www.nytimes.com/2012/12/27/world/africa/in-gabon-lure-of-ivory-proves-hard-to-resist.html?pagewanted=all. 
  18. Girtler, R. (1996). Randkulturen: Theorie der Unanständigkeit.
  19. Timms, Liam; Holden, Matthew H. (2024-02-01). "Optimizing protected area expansion and enforcement to conserve exploited species". Biological Conservation 290: 110463. doi:10.1016/j.biocon.2024.110463. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3207. Bibcode: 2024BCons.29010463T. 
  20. Kuempel, Caitlin D.; Adams, Vanessa M.; Possingham, Hugh P.; Bode, Michael (May 2018). "Bigger or better: The relative benefits of protected area network expansion and enforcement for the conservation of an exploited species" (in en). Conservation Letters 11 (3). doi:10.1111/conl.12433. பன்னாட்டுத் தர தொடர் எண்:1755-263X. Bibcode: 2018ConL...11E2433K. https://conbio.onlinelibrary.wiley.com/doi/10.1111/conl.12433. 

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு