காட்டு மூஞ்சூறு
காட்டு மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இயுலிபோடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | சன்கசு
|
இனம்: | ச. ஜீலானிகசு
|
இருசொற் பெயரீடு | |
சன்கசு ஜீலானிகசு பிலிப்சு, 1928[2] | |
காட்டு மூஞ்சூறு பரம்பல் |
காட்டு மூஞ்சூறு (Jungle shrew)(சன்கசு ஜீலானிகசு) என்பது இலங்கையைச் சேர்ந்த சோரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டியாகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
விளக்கம்
தொகுகாட்டு மூஞ்சூறுவின் தலை மற்றும் உடல் நீளம் 10 முதல் 12 செ. மீ. ஆகும். காட்டு மூஞ்சூறுவின் வாலானது 8–9 செ.மீ. நீளமுடையது. இதன் உரோமம் மேற்பகுதியில் அடர் சாம்பல் நிறமாகவும், கீழ்ப் பகுதியில் இலகுவாகவும் இருக்கும். முடிகள் அடிப்பகுதியில் கருமையாகவும், நுனியில் வெளிர் நிறத்தில் காணப்படும். வால் குறுகிய மற்றும் சாம்பல், சில நேரங்களில் வெள்ளை முனையுடன் இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dando, T.; Kennerley, R. (2019). "Suncus zeylanicus". IUCN Red List of Threatened Species 2019: e.T21148A22289100. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T21148A22289100.en. https://www.iucnredlist.org/species/21148/22289100. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ Phillips, W. W. A. 1928. Guide to mammals of Ceylon. VIII. Rodentia. Spolia Zeylanica, XIV, 295-331.
- ↑ Phillips WWA (1925) Sri Lanka. NHMUK ZOO 1928.1.25.1