காட்மியம் பெர்மாங்கனேட்டு
காட்மியம் பெர்மாங்கனேட்டு (Cadmium permanganate) என்பது Cd(MnO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Cd(MnO4)2·6H2O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஓர் அறுநீரேற்றாகவும் இது உருவாகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
34057-37-9 நீரிலி 13520-63-3 அறுநீரேற்று | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 21872968 |
| |
பண்புகள் | |
Cd(MnO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 350.28 |
தோற்றம் | அடர் பழுப்பு படிகங்கள்[1] |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகாட்மியம் சல்பேட்டுடன் பேரியம் பெர்மாங்கனேட்டை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் காட்மியம் பெர்மாங்கனேட்டை உருவாக்கலாம். பேரியம் சல்பேட்டு வீழ்படிவை அகற்றிய பிறகு, கரைசல் இருட்டில் படிகமாக்கப்படுகிறது.:[1]
- Ba(MnO4)2 + CdSO4 → Cd(MnO4)2 + BaSO4↓
காட்மியம் பெர்மாங்கனேட்டை மாங்கனீசு எப்டாக்சைடை காட்மியம் ஆக்சைடு அல்லது காட்மியம் ஐதராக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் தயாரிக்கலாம்.[2]
இயற்பியல் பண்புகள்
தொகுகாட்மியம் பெர்மாங்கனேட்டு அறுநீரேற்று 61~62 ° செல்சியசு வெப்பநிலையில் படிகமயமாக்கலின் போது நீரை இழக்கிறது. மேலும் 90 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது நீரிலியைப் பெறலாம். இந்நீரற்ற வடிவம் 108 °செல்சியசு வெப்பநிலையில் சிதையத் தொடங்குகிறது:[3]
- Cd(MnO4)2 → CdMnO3 + MnO2 + 3/2 O2↑}}
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kótai, László; Banerji, Kalyan K. (2001-03-31). "An Improved Method for the Preparation of High-Purity Permanganate Salts" (in en). Synthesis and Reactivity in Inorganic and Metal-Organic Chemistry 31 (3): 491–495. doi:10.1081/SIM-100002234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-5714. http://www.tandfonline.com/doi/abs/10.1081/SIM-100002234. பார்த்த நாள்: 2020-06-21.
- ↑ Kótai, László; Sajó, István E.; Gács, István; Sharma, Pradeep K.; Banerji, Kalyan K. (Jul 2007). "Convenient Routes for the Preparation of Barium Permanganate and other Permanganate Salts" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 633 (8): 1257–1260. doi:10.1002/zaac.200700142. http://doi.wiley.com/10.1002/zaac.200700142. பார்த்த நாள்: 2020-06-21.
- ↑ Zhang, Zhongsheng; Wu, Jigui; Zhang, Yanni (1991-07-02). "Research on Kinetic Parameters of Cadmium Permanganate by Thermogravimetry" (in zh). Journal of Lanzhou University (Natural Science) 27 (2). doi:10.13885/j.issn.0455-2059.1991.02.019. http://dx.doi.org/10.13885/j.issn.0455-2059.1991.02.019.