காந்தலூர்

கந்தலூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.இது இந்த

காந்தலூர் (കാന്തല്ലൂർ; Kanthalloor) இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு வருவாய் ஊர் ஆகும். இது தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் வாழும் பகுதியாகும்.

காந்தலூர்
കാന്തല്ലൂർ (மலையாளம்)
KANTHALLOOR
வருவாய் ஊர் (Revenue Village)
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி மாவட்டம்
வட்டம்தேவிகுளம் வட்டம்
வட்டார தன்னாட்சி நிறுவனம்காந்தலூர் ஊராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,758
மொழிகள்
 • அலுவல்தமிழ்,மலையாளம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN685 620

ஜனத்தொகை கணக்கெடுப்பு 2011 தொகு

மொத்த ஜனத்தொகை 6758
மொத்த ஆண்கள் 3339
மொத்த பெண்கள் 3419
பட்டியல் ஜாதியினர் 2291
பட்டியல் பழங்குடியினர் 887
கல்வியறிவு உள்ளோர் 4681

நிலப்பரப்பு தொகு

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

முக்கிய தொழில் தொகு

இந்த ஊரின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். இங்கு குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளப்பூடு ஆகியனவும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், ப்லம், பேறிக்காய், கொய்யா, தாட்டுபுட்டான் ஆகியவையும் ஆகும்.

முக்கிய மொழிகள் தொகு

90 சதவீத மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது, மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களாவர். இப்பகுதியில் வாழும் மக்கள் தமிழ் மொழியை அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். இப்பகுதி மக்கள் கேரள மாநிலத்தின் அனைத்து அரசு துறைகளிலும் விண்ணப்பங்கள் தமிழில் கொடுக்கலாம், அதற்கான பதிலும் தமிழிலேயே இருக்க வேண்டும் என மலையாள மொழி சட்டம் 2015 கூறுகிறது.[1]

முக்கிய பண்டிகைகள் மற்றும் விழாக்கள் தொகு

கார்த்திகை தீபம், தீபாவளி, தமிழ் புத்தாண்டு ஆகியன முக்கிய பண்டிகைகளும், ஆவணி நோன்பு, சித்திரை திருவிழா, சிவராத்திரி, சித்திர குப்த்தன் பொங்கல் ஆகியன முக்கிய விழாக்களுமாகும்.

சமயங்கள் மற்றும் ஆலயங்கள் தொகு

பெரும்பான்மையான மக்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாவர், மீதமுள்ளவர்கள் கிருத்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். ஒரேஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது. பெருமலை மலையாள பகவதியம்மன் ஆலயம், இராமர் குகைக்கோவில், காந்தலூர் உடையபெருமாள் ஆலயம், புத்தூர் பிடாரியம்மன் ஆலயம், வெட்டகாரன் கோவில், சிறுமலர் ரோமன் கத்தோலிக்கன் தேவாலயம், வேளாங்கண்ணி மாதா சுரியன் கத்தோலிக்கன் தேவாலயம் ஆகியவை முக்கிய வழிபாட்டு தளங்கலாகும்.

கல்விச்சாலைகள் தொகு

அரசு உதவிப் பெரும் ஆரம்ப் பள்ளி(Aided Primary School, Kanthalloor) தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி, மவுன்ட் கார்மல் ஆரம்ப பள்ளி தமிழ் வழி கல்வி மற்றும் திரு இருதய உயர்நிலை பள்ளி தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி ஆகியன முக்கிய கல்வி சாலைகளாகும்.

சுற்றுலா தளங்கள் தொகு

மன்னவன் சோலை (ஆணைமுடி சோலை தேசிய பூங்கா), பட்டிச்சேறி அணை, ஆப்பிள் தோட்டம், குழச்சிவயல் சூட்டிங் பாறை, இராமர் குகைக்கோவில், சர்க்கரை ஆலைகள்(மறையூர் சர்க்கரை).

மேற்கோள்கள் தொகு

  1. Malayalam Language Act, 2015, section 5
  • "Census of India : Villages with population 5000 & above". Retrieved 2008-12-10.[dead link]
  • "Kanthalloor Details (ML)". Kerala Government. Retrieved October 3, 2011.
  • "Kanthalloor". Retrieved October 3, 2011.
  • "Rain Shadow village....". Kerala Government. Retrieved October 3, 2011.
  • "Member". Kerala Government. Retrieved October 3, 2011.
  • "Population". Kerala Government. Retrieved October 3, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தலூர்&oldid=3676565" இலிருந்து மீள்விக்கப்பட்டது