கான்சுடன்டீன் செர்னென்கோ

கான்சுடன்டீன் உசுத்தீனொவிச் செர்னென்கோ (Konstantin Ustinovich Chernenko;[1] உருசியம்: Константи́н Усти́нович Черне́нко; உக்ரைனியன்: Костянти́н Усти́нович Черне́нко; 24 செப்டம்பர் 1911 – 10 மார்ச் 1985)[2] சோவியத் அரசியல்வாதியும், சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-ஆவது பொதுச் செயலாளரும் ஆவார். இவர் 1984 பெப்ரவரி 13 முதல் 1985 மார்ச் 10 இல் இறக்கும் வரை சோவியத் ஒன்றியத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

கான்சுடன்டீன் செர்னென்கோ
Konstantin Chernenko
Константин Черненко
Konstantin Chernenko Portrait.jpg
1984 இல் செர்னென்கோ
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
13 பெப்ரவரி 1984 – 10 மார்ச் 1985
முன்னவர் யூரி அந்திரோப்பொவ்
பின்வந்தவர் மிக்கைல் கொர்பச்சோவ்
சுப்ரீம் சோவியத் செயற்குழுத் தலைவர்
பதவியில்
11 ஏப்ரல் 1984 – 10 மார்ச் 1985
முன்னவர் யூரி அந்திரோப்பொவ்
வசீலி குசுனித்சோவ் (பதில்)
பின்வந்தவர் அந்திரேய் குரோமிக்கோ
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாம் செயலாளர்
பதவியில்
10 நவம்பர் 1982 – 9 பெப்ரவரி 1984
முன்னவர் யூரி அந்திரோப்பொவ்
பின்வந்தவர் மிக்கைல் கொர்பச்சோவ் (நடைமுறைப்படி)
பதவியில்
25 சனவரி 1982 – 24 மே 1982
முன்னவர் மிக்கைல் சூசுலொவ்
பின்வந்தவர் யூரி அந்திரோப்பொவ்
தனிநபர் தகவல்
பிறப்பு கொன்ஸ்டன்டீன் உசுத்தீனொவிச் செர்னென்கோ
செப்டம்பர் 24, 1911(1911-09-24)
பல்சாயா தெசு, யெனிசெயிசுக், உருசியப் பேரரசு
இறப்பு 10 மார்ச்சு 1985(1985-03-10) (அகவை 73)
மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பிற்கான
காரணம்
எம்விசிமா, குருதித்தேக்க இதயத் திறனிழப்பு
அடக்க இடம் கிரெம்லின்
தேசியம் உக்ரைனியர்
அரசியல் கட்சி சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1931-1985)
வாழ்க்கை துணைவர்(கள்) பைனா வசீலியெவ்னா செர்னென்கோ,
அன்னா திமீத்ரியெவ்னா லியூபீமொவா (தி. 1944)
பிள்ளைகள் 4
விருதுகள்
பட்டியலைப் பார்க்க
  • சோசலிச தொழிலாளர் நாயகன் சோசலிச தொழிலாளர் நாயகன் சோசலிச தொழிலாளர் நாயகன்
    லெனினின் ஆணை லெனினின் ஆணை லெனினின் ஆணை லெனினின் ஆணை
    தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை தொழிலாளர் சிவப்புப் பதாகையின் ஆணை "1941-1945 பெரும் தேசபக்திப் போரில் வீர உழைப்பிற்கான" பதக்கம்
    "விளாடிமிர் இலிச் லெனின் பிறந்த 100 வது ஆண்டு நினைவாகப்" பதக்கம் "1941-1945 பெரும் தேசபக்தி போரில் முப்பது ஆண்டு வெற்றி" விழாப் பதக்கம் "சோவியத் ஒன்றியத்தின் ஆயுதப் படைகளின் 60 ஆண்டு" விழாப் பதக்கம்
    Medal Lenin Prize.png
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு சோவியத் ஒன்றியம்
கிளை சோவியத் ஆயுதப்படை
பணி ஆண்டுகள் 1930–1933
உறுப்புரிமை

ஏனைய அரசியல் பதவிகள்
சோவியத் ஒன்றியத்தின் தலைவர்

சைபீரியாவைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த செர்னென்கோ,[3] 1929-இல் சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் கழகமான கொம்சோமால் அமைப்பில் சேர்ந்தார். 1931 இல் கட்சியின் முழு உறுப்பினரானார். தொடர்ந்து பல கொள்கைப்பரப்புப் பதவிகளை வகித்த பிறகு, 1948 இல் அவர் கொள்கைப் பரப்புத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] மால்தாவியாவில், இலியோனீது பிரெசுனேவின் கீழ் பணியாற்றினார். பிரெசுனேவ் 1964 இல் கட்சியின் முதல் செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு, செர்னென்கோ மத்திய குழுப் பொதுத் துறையின் தலைவராக உயர்ந்து, பொலித்பியூரோவிற்கான நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கும் மத்திய குழு ஆணைகளை வரைவதற்கும் பொறுப்பானார். 1971 இல் செர்னென்கோ மத்திய குழுவின் முழு உறுப்பினராகவும், பின்னர் 1978 இல் பொலித்பியூரோவின் முழு உறுப்பினராகவும் ஆனார்.

பெரெசுனேவும் அவருக்கு அடுத்து பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அந்திரோப்பொவும் முறையே 1982, 1984 இல் இறந்த பின்னர், செர்னென்கோ பிப்ரவரி 1984 இல் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏப்ரல் 1984 இல் உச்ச சோவியத் செயலகத்தின் தலைவரானார். ஆனாலும், விரைவான உடல்நலக் குறைவு காரணமாக,[5] செர்னென்கோ தனது அதிகாரப்பூர்வக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை.[6] 13 மாதங்கள் மட்டுமே நாட்டை வழிநடத்திய பின்னர் மார்ச் 1985 இல் இறந்தார். அவரை அடுத்து மிக்கைல் கொர்பச்சோவ் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

செர்னென்கோவுக்கு அவரது முதல் மனைவியான பைனா வாசிலியேவ்னாவுக்கு ஆல்பர்ட் என்ற மகன் உள்ளார். 1944-இல் அவரை மணந்த அவரது இரண்டாவது மனைவியான அன்னா திமீத்ரியெவ்னா லியூபிமோவாவுடன், அவருக்கு யெலீனா, வேரா என்ற இரண்டு மகள்களும், விளாதிமிர் என்ற மகனும் இருந்தனர். 2015 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காப்பக ஆவணங்களின்படி, செர்னென்கோவுக்கு இன்னும் பல மனைவிகள் இருந்தனர், அவர்களுடன் இன்னும் பல குழந்தைகள் இருந்தனர்; 1940களில் செர்னென்கோவின் தொழில் வளர்ச்சி குறைவதற்கு இந்தச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[7]

குறிப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு