யூரி அந்திரோப்பொவ்
யூரி விளதிமீரொவிச் அந்திரோப்பொவ் (Yuri Vladimirovich Andropov[1] உருசியம்: Ю́рий Влади́мирович Андро́пов, ஒ.பெ யூரிய் வ்ளதீமிரவிச் அந்த்ரோப்பொவ், பஒஅ: [ˈjʉrʲɪj vlɐˈdʲimʲɪrəvʲɪtɕ ɐnˈdropəf] (15 சூன் [யூ.நா. 2 சூன்] 1914 – 9 பெப்ரவரி 1984)[2] சோவியத் ஒன்றியத்தின் ஆறாவது தலைவரும், சோவியத் பொதுவுடைமைக் கட்சியின் நான்காவது பொதுச் செயலாளரும் ஆவார். லியோனீது பிரெசுனேவின் 18-ஆண்டு கால ஆட்சியின் பின்னர், அந்திரோப்பொவ் 1982 நவம்பர் முதல் 1984 பெப்ரவரியில் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.
யூரி அந்திரோப்பொவ் Yuri Andropov | |
---|---|
Юрий Андропов | |
1974 இல் அந்திரோப்பொவ் | |
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொத்ச் செயலாளர் | |
பதவியில் 12 நவம்பர் 1982 – 9 பெப்பவரி 1984 | |
முன்னையவர் | லியோனீது பிரெசுனேவ் |
பின்னவர் | கான்சுடன்டீன் செர்னென்கோ |
சுப்ரீம் சோவியத் செயலகத்தின் தலைவர் | |
பதவியில் 16 சூன் 1983 – 9 பெப்ரவரி 1984 | |
முன்னையவர் | வசீலி குசுனித்சோவ் (பதில்) |
பின்னவர் | வசீலி குசுனித்சோவ் (பதில்) |
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாவது செயலாளர் | |
பதவியில் 24 மே 1982 – 10 நவம்பர் 1982 | |
முன்னையவர் | கான்சுடன்டீன் செர்னென்கோ (பதில்) |
பின்னவர் | கான்சுடன்டீன் செர்னென்கோ |
பாதுகாப்புக் குழுவின் (கேஜிபி) 4-ஆவது தலைவர் | |
பதவியில் 18 மே 1967 – 26 மே 1982 | |
பிரதமர் |
|
முன்னையவர் | விளாதீமிர் செமிச்சாசுனி |
பின்னவர் | வித்தாலி பெதர்ச்சுக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இசுத்தனீத்சா நகூத்சுக்கயா, இசுத்தாவ்ரபோல், உருசியப் பேரரசு | 15 சூன் 1914
இறப்பு | 9 பெப்ரவரி 1984 மாஸ்கோ, சோவியத் ஒன்றியம் | (அகவை 69)
காரணம் of death | சிறுநீரகச் செயலிழப்பு |
இளைப்பாறுமிடம் | கிரெம்லின், மாஸ்கோ |
குடியுரிமை | சோவியத் |
அரசியல் கட்சி | சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி (1939–1984) |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | 4
|
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | சோவியத் ஒன்றியம் |
கிளை/சேவை | சோவியத் ஆயுதப்படை, சோவியத் கரந்தடி |
சேவை ஆண்டுகள் | 1939–1984 |
தரம் | இராணுவ செனரல் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர் அங்கேரியக் கிளர்ச்சி சோவியத்–ஆப்கான் போர் |
உறுப்புரிமை
ஏனைய பதவிகள்
| |
அந்திரோப்பொவ் 1954 முதல் 1957 வரை அங்கேரிக்கான சோவியத் தூதராகப் பணியாற்றினார், அந்த நேரத்தில் அவர் 1956 அங்கேரிய எழுச்சியை அடக்குவதில் ஈடுபட்டார். 1967 மே 10 இல் கேஜிபியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில், "சமூக ரீதியாக விரும்பத்தகாதவர்கள்" என்று கருதப்படும் நபர்களை வெகுசனக் கைதுகள் மற்றும் தன்னிச்சையற்ற மனநோய் அர்ப்பணிப்பாளர்களால் நடத்தப்பட்ட பாரிய ஒடுக்குமுறையை இவர் மேற்பார்வையிட்டார். 1975 ஆம் ஆண்டில் பிரெசுனேவ் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார், அது பிரெசுனேவின் ஆளுமைத் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. இதன் காரணமாக, அந்திரோப்பொவ், பிரெசுனேவின் ஆட்சியின் எஞ்சிய காலத்திற்கு வெளியுறவு அமைச்சர் அந்திரே குரோமிக்கோ, பாதுகாப்பு அமைச்சர்கள் அந்திரே கிரெச்கோ, திமீத்ரி உசுத்தீனொவ் ஆகியோருடன் இணைந்து கொள்கை வகுப்பதில் திறம்பட ஆதிக்கம் செலுத்தினார்.
1982 நவம்பர் 10 இல் பிரெசுனேவ் இறந்தவுடன், அவருக்குப் பிறகு அந்திரோப்பொவ் கட்சியின் பொதுச் செயலாளராகவும், பின்னர் சோவியத் ஒன்றியத்தின் தலைவராகவும் ஆனார். அவரது குறுகிய காலத்தில், அந்திரோப்பொவ் நாட்டிற்குள் ஊழலையும் திறமையின்மையையும் அகற்ற முயன்றார். பனிப்போர் தீவிரமடைந்தது, சோவியத் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பதில் அவர் திணறினார். யெகோர் லிகாச்சியோவ், நிக்கொலாய் ரீசுக்கோவ், மிக முக்கியமாக மிக்கைல் கொர்பச்சோவ்] போன்ற தன்னைப் போலவே ஆற்றல் மிக்க புதிய தலைமுறை இளம் சீர்திருத்தவாதிகளை முன்னுக்குக் கொண்டு வந்ததே இவரது நீண்ட கால தாக்கமாகும்.[3] இருப்பினும், பிப்ரவரி 1983 இல் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டதால், அந்திரோப்பொவின் உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது. 15 மாதங்கள் மட்டுமே நாட்டை வழிநடத்திய அவர் 1984 பிப்ரவரி 9 அன்று இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஅந்திரோப்பொவ் தான் பிறந்த ஊரிற்கு அருகில் பிறந்த நீனா இவனோவ்னா என்பவரைத் திருமணம் புரிந்து, அவரை 1941 இல் மணமுறிவு பெற்றார். பின்னர் இரண்டாம் உலகப் போரின் போது கரேலிய முன்னரங்க நிலையில் கொம்சமோல் செயலாளராகப் பணியாற்றிய தத்தியானா பிலிப்போவா என்பவரை சந்தித்து அவரைத் திருமணம் புரிந்தார்.[4] 1956 அங்கேரியப் புரட்சியின் பொது தத்தியானா நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார். அந்திரோப்பொவின் இறுதிச் சடங்கு வரை அவர் பொதுவில் காணப்படவில்லை.[4] 1985 ஆம் ஆண்டில், 75-நிமிட திரைப்படம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது, அதில் தத்தியானா தனது கணவர் எழுதிய காதல் கவிதைகளைப் படித்தார். தத்தியானா நோய்வாய்ப்பட்டு நவம்பர் 1991 இல் இறந்தார்.[4] இவர்களுக்கு எவ்கேனியா, ஈகொர், இரீனா, விளாதிமிர் என நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andropov". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Profile of Yuri Andropov
- ↑ Mauricio Borrero, "Andropov, Yuri Vladimirovich 1914–1984." Encyclopedia of Modern Dictators (2006), pp. 7–10.
- ↑ 4.0 4.1 4.2 "Интимная жизнь чекиста. Какие тайны хранил генсек Юрий Андропов". Life. 17 October 2020. பார்க்கப்பட்ட நாள் 22 July 2021.
- இந்தக் கட்டுரை இப்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள ஒரு பிரசுரத்தின் உரையை உள்ளடக்கியது: "Biography of Yuri Andropov". Soviet Life (323): 1B. 1983. https://commons.wikimedia.org/wiki/File:Soviet_Life,_1983-08,_%E2%84%96_323.pdf. பார்த்த நாள்: 19 August 2013.
- Johanna Granville, trans., "Soviet Archival Documents on the Hungarian Revolution, 24 October – 4 November 1956",
- Cold War International History Project Bulletin, no. 5 (Woodrow Wilson Center for International Scholars, Washington, D.C.), Spring 1995, pp. 22–23, 29–34.