கான்ராட் ஹண்ட்
சர் கான்ராட் கிளியோபாஸ் ஹன்ட், கே.ஏ [1] (Sir Conrad Cleophas Hunte 9 மே 1932 - 3 டிசம்பர் 1999) ஒரு பார்பேடிய துடுப்பாட்ட வீரர் . இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3245 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 260 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரது மட்டையாட்ட சராசரி 45.06 ஆகும். இவர் 132 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 8916 ஓட்டங்களை 43.92 எனும் சராசரியில் எடுத்தார். இவர் அதிகபட்சமாக 263 ஓட்டங்களை எடுத்தார். 3 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடி 12 ஓட்டங்களை எடுத்தார். [2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தொகுஇவர் பார்படோசின் வடக்கே செயின்ட் ஆண்ட்ரூ பாரிஷில் பிறந்தார். சர்க்கரை தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார். [3] ஹண்டேவின் குடும்பம் ஏழ்மையானது ஆகும். ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த ஹன்ட் ஒரு அறை மட்டுமே உள்ள வீட்டில் வசித்தார். ஹன்டேவிற்கு ஆறு வயதாக இருந்தபோது, அவர் கிராமத்து சிறுவர்களுடன் துடுப்பாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். பனையிலிருந்து தயாரிக்கப்பட்ட மட்டையைப் பயன்படுத்தி இவர்கள் துடுப்பாட்டம் விளையாடினார். பெல்லிபிளேன் பாய்ஸ் பள்ளியில் பயின்ற இவர் மூன்று மைல் தூரத்திற்கு வெறுங்காலுடன் நடந்தே சென்றார். [4] [5] பள்ளியின் முதல் லெவன் அணியில் விளையாடிய இவர் தன்னை விட வயதில் பெரிய மாணவர்களுடன் விளையாடினார்.
12 வயதானபோது ஹன்ட், அலெய்ன் மேல்நிலைப் பள்ளியில் சேர உதவித்தொகையினைப் பெற்றார். இவரது திறனைக் கவனித்த அவரது விளையாட்டு ஆசிரியர் இவரை பள்ளி முதல் லெவன் அணியில் சேர்த்தார், அங்கு அவர் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு எதிராக விளையாடினார். ஊக்கத்தொகையாக இவர் ஒவ்வொரு முறையும் 25 ஓட்டங்கள் எடுத்தபோதும் ஹண்டேவுக்கு ஒரு ஷில்லிங் வழங்கினார். ஹன்ட் தனது கடைசி மூன்று ஆண்டுகளில் பள்ளி அணியின் தலைவராக இருந்தார். [6]
இவர் பார்படோசு துடுப்பாட்ட அணி சார்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு துடுப்பாட்ட அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுனின் கென்சிங்டன் ஓவலில் நடைபெற்ற முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். முதல் ஆட்டப் பகுதியில் ஹன்ட் 63 ஓட்டங்கள் எடுத்தார், இரண்டாவது ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் எடுத்தார். [7]
ஓய்விற்குப் பிறகு
தொகுஹன்டே ஒரு கிறிஸ்தவ மதத்தின் மீது ஆதீத உறுதி கொண்டவர் ஆவார். 1961 ஆம் ஆண்டில், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது, கறுப்பு அமெரிக்க கல்வியாளர் மேரி மெக்லியோட் பெத்துனின் வாழ்க்கையைப் பற்றி தி கிரவுனிங் எக்ஸ்பீரியன்ஸ் என்ற படத்தைப் பார்த்தபோது அவரது வாழ்க்கையின் அர்த்தம் இவருக்குப் புரிந்ததாக கூறினார். இந்த திரைப்படத்தை மோரல் ரீ-ஆர்மமென்ட் (எம்.ஆர்.ஏ) என்பவர் இதனை ஊக்குவித்தார்.
1967 ஆம் ஆண்டில் ஹன்ட் துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் தனது சுயசரிதையினை, பிளேயிங் டு வின் என்ற தலைப்பில் 1971 ஆம் ஆண்டில் எழுதினார். பிரிட்டனில் பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இவர், ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்குச் சென்றார், அங்குதான் அவர் உள்ளூர் செய்தித் தொடர்பாளரான அவரது மனைவி பாட்ரிசியாவைச் சந்தித்தார். இந்தத் தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்தனர்.
சான்றுகள்
தொகு- ↑ Awards in the Order of Barbados பரணிடப்பட்டது 6 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "An island of legends: Desmond Haynes picks his greatest Barbados Test XI". ESPN Cricinfo. Archived from the original on 9 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
- ↑ "Obituary – Conrad Hunte". Wisden Cricketers' Almanack – online archive. John Wisden & Co. 2000. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
- ↑ "Cricketer of the Year 1964 – Conrad Hunte". Wisden Cricketers' Almanack – online archive. John Wisden & Co. 1964. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
- ↑ Dodds, Dickie; Coulter, Jim (1 April 2000). "A Cricketer for the Oppressed". For A Change. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
- ↑ "Cricketer of the Year 1964 – Conrad Hunte". Wisden Cricketers' Almanack – online archive. John Wisden & Co. 1964. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.
- ↑ "Barbados v Trinidad". First-Class matches in West Indies 1950/51. CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 31 July 2011.