காப்புக்காடு

கிராமம் தமிழ்நாடு, இந்தியா

காப்புக்காடு (Kappukadu) என்பது தென்மிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பண்டைய ஊராகும். இவ்வூரில் பழந்தமிழ்ப் புலவர் தொல்காப்பியர் பிறந்ததாக நம்புவதால் இது காப்பியங்காடு எனவும் வழங்கப்படுகிறது. இங்குத் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.[3]

காப்புக்காடு
—  கிராமம்  —
காப்புக்காடு
இருப்பிடம்: காப்புக்காடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°20′42″N 77°10′55″E / 8.3451335°N 77.18204°E / 8.3451335; 77.18204
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

காப்புக்காடு 1 ச.கிமீ பரப்பளவு கொண்டதாகும். புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளி ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 5000 அளவுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

இந்த ஊர் நாகர்கோயில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை 47-இல் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊர் கன்னியாகுமரியையும் கொச்சியையும் இணைக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை தொடர்ச்சியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. இந்த ஊரின் இருபுறப் போக்குவரத்துக்கும் முன்மொழியப்பட்டுள்ள திருவனந்தபுரம்-கன்னியாகுமரி விரைவு நெடுஞ்சாலைக்கும் முதன்மையானதாகும்.

ஊரில் நெல்வயல்களும் தென்னைமரங்களும் சூழ்ந்துள்ளன. ஊரின் ஒருபக்கம் சிறுமலைகளும் தண்பொருநை ஆறும் மறுபக்கம் பாறைகளும் உள்ளன. மிக அருகில் 1 கிமீ தொலைவில் குழித்துறை தொடருந்து நிலையமும் 2 கிமீ தொலைவில் மார்த்தாண்டம் நகரியமும் உள்ளன. இங்குள்ள மக்கள் தமிழும் மலையாளமும் கலந்து ஈழப்பாணித் தமிழில் பேசுகின்றனர். முன்பு இது கேரளாவில் இருந்தது. விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டோடு சேர்ந்தது.

பள்ளிகள் தொகு

  • புனித அந்தோணி உயர்நிலைப் பள்ளி
  • ஆர்த்தெசியா பதின்மப் பள்ளிவிக்னேசுவரா பதின்மப் பள்ளி
  • அரசு நடுநிலைப்பள்ளி

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. https://www.dailythanthi.com/News/State/tolkappiyar-statue-garlanded-by-govt-958334?infinitescroll=1
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்புக்காடு&oldid=3913854" இலிருந்து மீள்விக்கப்பட்டது