காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில்

நூற்றாண்டு கண்ட.காமநாயக்கன் பாளையம்

காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில் என்பது தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில், காமநாயக்கன்பாளையம் சிறுநகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் சிவன் கோவில் ஆகும். இக்கோவில் இருக்கும் இடமெல்லாம் சகல செல்வங்கள் இருக்கும் என்பது புராண வரலாறு கூறுகிறது.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில், காமநாயக்கன் பாளையம்.
பெயர்
வேறு பெயர்(கள்):திருச்செங்கோட்டையன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:காமநாயக்கன்பாளையம், பல்லடம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பல்லடம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:அர்த்தநாரீசுவரர்
தாயார்:பெரியநாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கார்த்திகை தீபம், பைரவர் ஜென்மாஷ்டமி, மாசி சிவராத்திரி
உற்சவர்:கால பைரவர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:5
வரலாறு
கட்டிய நாள்:பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:சுயம்பு மூர்த்தி

வரலாறு

தொகு

இக்கோவிலின் புராணம் தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கோவிலாகும். பொதுவாக திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவிலில் மட்டுமே அக்காலம் தொட்டு சென்று வந்தனர். இது நீண்ட தூர மக்களுக்கு பெரும் சிரமமாக இருப்பதாக பக்தர் ஒருவர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலையத்தில் இறைவனிடம் முறையிட்டு உள்ளார். பின் பக்தரின் கனவில் தோன்றிய இறைவன் காமநாயக்கன்பாளையத்தில் தாம் சுயமாக எழுவேன் என்று கூறி மறைந்ததும் அதன்பின் அதே இடத்தில் சுயம்புவாக உருவானார். இன்று வரை இருபத்து ஐந்து ஊர்களுக்கு இணைந்த கோவிலாக இந்த காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  • இக்கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே செங்கோட்டையன் கோயில் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. முன்னர் சாதாரண அளவில் கட்டப்பட்டும், பிறகு ஊர் பொதுமக்கள் பாராமரிப்பில் விடப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பின்பு இக்கோவில் கால வளர்ச்சிக்கு ஏற்ப கட்டப்பட்டது. இக்கோயில் பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கோவிலில் தல விருட்சமாக வில்வ மரம் விளங்குகிறது.
  • பெரும்பாலும் நாயக்கர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
  • தோடை குலத்தாரின் குல தெய்வமாக இத்தலம் கருதப்படுகிறது.
  • மாசி சிவராத்திரி அன்று பன்னெடுங்காலமாக காடை குலத்தினரால் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
  • மேலும் இக்கோவிலில் குழந்தை இல்லாதவர் வழிபட்டால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் புத்திரபாக்கியம் கிடைப்பதாக ஐதீகம்.
  • கண்நோய் குணமடையும் ஒரு ஸ்தலம்

கால பூஜைகள்

தொகு

இந்த காமநாயக்கன்பாளையம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கால பைரவர் பெரியநாயகி சன்னதியும் அமைந்துள்ளது. இங்கு பூஜைகள் மிக ஏராளமாக நடப்படுகிறது.வருடத்திற்கு ஒருமுறை ஆடிப்பெருக்கு நாளில் கோவில் நிர்வாகம் சார்பில் பழநி பாதையாத்திரை அழைத்துச் செல்லப்படுகிறது.

  • மேலும் ஆண்டிற்கு ஒருமுறை குத்து விளக்கு பூஜை நடைபெறுகிறது.
  • இங்கு பிரதோஷ வழிபாடு மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக சோமவாரப் பிரதோஷம்,சனிப் பிரதோஷம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
  • அஷ்டமி காலங்களில் காலபைரவர், நவகிரகங்கள், பெரியநாயகி சன்னதிகளுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.
  • கோவிலானது வாரத்தில் அனைத்து நாட்களும் காலை மற்றும் மாலை என இருநேரங்களும் நடை திறக்கப்பட்டு கால பூஜைகள் நடைபெறும்.

சிறப்பு

தொகு

ஆண் பாதி பெண் பாதி கொண்ட இந்த திருத்தலத்தை தமிழ்நாட்டில் எங்குமே இக்கோவிலைக் காண்பது மிக அரிதான ஒன்றாகும்.இக்கோவில் தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் மட்டுமே உள்ளது. அவை

ஆகும். இதில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் பொதுவாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோவில் காமநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளதால் மிகவும் சிறப்பானதாக இவ்வூர் மக்கள் போற்றுகின்றனர்.இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் காமநாயக்கன்பாளையம் நகரில் அமைந்துள்ளது. பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. இப்பேருந்து திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் இயக்கப்படுகிறது. திருப்பூர்-பொள்ளாச்சி வழி பல்லடம்-காமநாயக்கன்பாளையம்-நெகமம் வழித்தடம் ஆகும். சேலம்,ஈரோடு பகுதிகளில் இருந்தும் பொள்ளாச்சி பேருந்து இயக்கப்படுகிறது. கோவையில் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு காமநாயக்கன்பாளையம் நகரத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)