காமராஜர் ஏரி
காமராஜர் ஏரி (Kamarajar Lake) என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தின், ஆத்தூர் என்ற சிற்றூரில் உள்ள ஒரு ஏரியாகும். பருவமழையால் நீர்வசதி பெறும் இந்த நீர்நிலை 400-ஏக்கர் (1.6 km2) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியானது ஆத்தூர் கிராமத்தில் இருந்து 6 km (3.7 mi) தொலைவில் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்னணியில் உள்ள அழகிய இடத்தில் அமைந்துள்ளது. மீன்பிடிப் பரிசல், தென்னை, வாழைத் தோட்டங்கள், ஏலக்காய்த் தோட்டங்கள் போன்றவை இங்கு காணப்படும் அழகிய காட்சிகளாகும். ஏரியில் நீச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் ஏரி | |
---|---|
அமைவிடம் | திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 10°17′42″N 77°48′40″E / 10.295°N 77.811°E |
மேற்பரப்பளவு | 400 ஏக்கர்கள் (160 ha) |
ஏரியின் வடக்கு எல்லையில் சில சுற்றுச்சூழலுக்கு உகந்த ஓய்வு இல்லங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கபட்டுள்ளன. தென்னை, மா மரங்கள் இப்பகுதியில் ஏராளமாக இருப்பதால், இங்கு வெப்பமண்டல சூழல் நிலவுகிறது.
இப்பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் நடைபயிற்சி செல்வது இந்த பகுதியில் மிகவும் பரவலரான நடவடிக்கைகளில் ஒன்றாகும். காமராஜர் ஏரியைச் சுற்றி பல நடைபாதைகள் உள்ளன. காமராஜர் ஏரிக்கு அருகில் பார்க்க வேண்டிய பெரும்பாலான இடங்களுக்கு இந்த நடைபாதைகளைப் பயன்படுத்தி போதுமான நேரத்தில் நடந்து செல்லலாம்.
பாதைகளில் பல பறவைகள் காணப்படுகின்றன. மயில்கள், நாரைகள், மீன் கொத்திகள், கொக்குகள், ஹெரான்கள், தேன்சிட்டுகள் போன்ற பறவைகள் அனைத்தும் இப்பகுதிக்கு அடிக்கடி வருவது அறியப்படுகிறது. உண்மையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பறவை நோக்கர் குழு ஒன்று நான்கு நாட்களில் 160 வெவ்வேறு வகையான பறவைகளைப் பார்த்ததை ஆவணப்படுத்தியுள்ளது. மலையேற்றம் இப்பகுதியில் மற்றொரு பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாகும்.
இந்த பகுதியில் புலிகள் காணப்படவில்லை என்றாலும், மற்ற வகை வனவிலங்குகள் இப்பகுதியில் பரவலாக உள்ளன. இப்பகுதி முழுவதும் சிறுத்தை, கீரி, குரங்கு, கேளையாடு, இந்தியக் காட்டெருது, காட்டுப்பன்றி போன்ற கானுயிர்கள் காணப்படுகின்றன.