காமா சிங்

கனடாவின் தொழில் முறை மல்யுத்த வீரர்

கதோவர் சிங் சகோதா (Gama Singh; திசம்பர் 8, 1954 இல் பிறந்தார்) [2] காமா சிங் என்றும் கிரேட் காமா என்றும் அழைக்கப்படும் இவர் இந்திய-கனடிய ஓய்வு பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். [1] மேலும், 1970கள் மற்றும் 1980களின் பெரும்பகுதிகளில் கனடாவின் கால்கரி நகரிலுள்ள தொழில்முறை மல்யுத்த ஊக்குவிப்பு மையத்தின் முக்கியமானவராக இருந்தார். இவர், யப்பான், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, குவைத்து, துபாய், ஓமான், ஆத்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கரிபியன் ஆகிய நாடுகளில் சர்வதேச அளவில் மல்யுத்தம் செய்தார். 1980-86 வரை வின்சு மெக்மான் மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் (WWF) ஆகியவற்றிற்காக அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் இவர் அவ்வப்போது பணியாற்றினார். இவரது மருமகன் ஜிந்தர் மஹால் முன்னாள் உலக மல்யுத்த வாகையாளராவார்.

காமா சிங்
சிங் தனது எதிரியை நண்டு பிடியில் அடக்குகிறார்.
இயற்பெயர்கதோவர் சிங் சகோதா
பிறப்புதிசம்பர் 8, 1954 (1954-12-08) (அகவை 70)
பஞ்சாப், இந்தியா
Residesகால்கரி, ஆல்பர்ட்டா, கனடா
குடும்பம்இராஜ் சிங் (மகன்)
ஜிந்தர் மகால் (உறவினர்)
தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை
மற்போர் பெயர்காமா சிங்
கிரேட் காமா
Billed height5 அடி 10 அங் (1.78 m)
Billed weight225 lb (102 kg)
பயிற்சியாளர்பில் பெர்சாக்
Stu Hart
முதல் போட்டி1973[1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Greer, Jamie (January 14, 2018). "Indian Legend Gama Singh Joins Impact Wrestling". Last Word on Pro Wrestling. பார்க்கப்பட்ட நாள் December 25, 2018.
  2. "SLAM! Wrestling Canadian Hall of Fame: The Great Gama". Slam! Sports. Canadian Online Explorer. Archived from the original on 2012-08-01. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமா_சிங்&oldid=3580643" இலிருந்து மீள்விக்கப்பட்டது