காமெங் யானை காப்பகம்
காமெங் யானை காப்பகம் (Kameng Elephant Reserve) இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 2002ஆம் ஆண்டு ஜீன் மாதம் 19ஆம் நாள் 1894 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தோற்றுவிக்கப்பட்டது. இதனுடைய தலைமையகம் சீஜோசாவில் உள்ளது.
காமெங் யானை பாதுகாப்பகம் | |
---|---|
வனவிலங்கு சரணாலயம் | |
ஆள்கூறுகள்: 27°05′N 92°26′E / 27.083°N 92.433°E | |
மாநிலம் | அருணாச்சல பிரதேசம்/திபெத் தன்னாட்சிப் பகுதிகள் |
மாவட்டம் | கிழக்கு காமெங்/கோனா நாடு |
தோற்றுவிக்கப்பட்டது | 2002 |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,894 km2 (731 sq mi) |
ஏற்றம் | 3,250 m (10,660 ft) |
மொழிகள் | |
• அலுவல்l | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | AR |
அருகில் உள்ள நகரம் | தேசுபூர் |
IUCN வகைப்பாடு | IV |
Governing body | Secretary (Political), Government of Arunachal Pradesh |
சராசரி கோடைகால வெப்பநிலை | 28 °C (82 °F) |
சாரசரி குளிர்கால வெப்பநிலை | −2 °C (28 °F) |
Kameng Elephant Reserve |
நிலவியல்
தொகுஇதன் வடபகுதியில் செசா ஆர்க்கிட் சரணாலயமும் (36 கி.மீ 2 ), மேற்குப் பகுதியில் கழுகுக்கூடு வனவிலங்கு சரணாலயமும் (128 கி.மீ 2 ) மேற்கில், பாகுய் புலி பாதுகாப்பகமும் (586 கி.மீ 2 ) கிழக்கில் கமெங் ஆறும் கெல்லாங் வனப் பிரிவின் பாதுகாப்புக் காடுகளும் (1144 கி.மீ 2) அமைந்துள்ளன. இந்தப் பகுதியானது 100 மீட்டர்கள் (328 அடி) முதல் 3,250 மீட்டர்கள் (10,663 அடி) வரை உயரத்தில் அமைந்துள்ளது. [1]
விலங்குகள்
தொகுஇந்த வனவிலங்கு பாதுகாப்பகத்தில் 377 இந்திய யானைகளும் (2001 கணக்கெடுப்பு), வங்காள புலி, சிறுத்தை, மேகமூட்டப்பட்ட சிறுத்தை, சிவப்பு பாண்டா, கஸ்தூரி மான், கடமான், பன்றி மான், இமயமலை கருப்புக் கரடி, செந்நாய், மீன்பிடி பூனை, காட்டுப் பூனை, சுந்தா லோரிஸ், இந்திய காட்டெருமை, நரி, குள்ள நரி, பெரிய கருப்பு அணில்,புணுகுப்பூனை, முயல், செம்முகக் குரங்கு, மூடிய லங்கூர் மற்றும் மஞ்சள் தொண்டை மார்டன் . 4 வகையான இருவாய்ச்சி உட்பட 250 வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் 300 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wild Arunachal retrieved 10/11/2007 Kameng Elephant Reserve பரணிடப்பட்டது 2 ஏப்பிரல் 2007 at the வந்தவழி இயந்திரம்