காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன் இந்தியத் திரைப்பட நடிகையாவார். ஒரு சோப்பு கம்பெனி நடத்திய மிஸ் சென்னை அழகிப் போட்டியில் வென்று அப்படியே வடிவழகுகில் நுழைந்து, மனதைத் திருடி விட்டாய் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் காயத்ரி ஜெயராம்.இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காயத்ரி ஜெயராமன் | |
---|---|
பிறப்பு | 27 செப்டம்பர் 1979 மும்பை, இந்தியா |
மற்ற பெயர்கள் | காயத்ரி ஜெயராமன் |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்போது |
பிறப்பும் வளர்ப்பும்
தொகுகாயத்ரி ஜெயராம் என்று அறியப்படும் இவர் குல்பர்கா அருகில் சஹாபாத்தில் ஜெயராமன் -சித்ரா தம்பதியரின் மகளாய் 1984 செப்டம்பர் 27 இல் பிறந்தார். இவரது குடும்பம் 1988 இல் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. இவரது கல்வி ஆதர்ஷ் வித்யாலயாவிலும், பின்னர் மும்பையில் உள்ள சர்ச் பார்க்கிலும் தொடர்ந்தது. இவர் மருத்துவம் படிக்கவே முயன்றார். இவர் போர்டு பரீட்சையில் தேறி 94% மதிப்பெண் பெற்றும் இளஞ்கலைப் பட்டப்படிப்பு தான் படிக்க முடிந்தது. இந்நிலையில் படிப்பும், விளம்பர மாடலாகவும் இருந்து, சென்னை எஸ். ஆர். எம். கல்லூரியில் பிசியோ தெராபி படித்தார். நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், போத்தீஸ் மற்றும் சென்னை சில்க்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு வடிவழகு செய்து கொண்டே 1997 அக்டோபர் மாதம் மிஸ் தமிழ்நாடு பட்டத்தையும், 1998 இல் மிஸ் தென்னிந்தியா பட்டத்தையும் வென்றார். மிஸ் பெமினா இந்தியா 2000 போட்டியில் 8000 விண்ணப்பத்தில் 26 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இவருக்கு நான்காவது இடம் கிடைத்தது.
சினிமா வாழ்வும் , சொந்த வாழ்க்கையும்
தொகு2001 இல் நீலா என்ற கன்னட படத்திலும் அசோகா என்ற இந்தி படத்தில் கரீனா கபூருடனும் மனதை திருடி விட்டாய் என்ற தமிழ் படத்திலும் நடித்தார். நீலா வெற்றிப் படமாக அமைந்தது. மனதை திருடிவிட்டாய் படத்தில் மஞ்சக் காட்டு மைனா என்ற பாட்டில் அவரது நடனம் வெகுவாக ரசிகர் வட்டத்தை சேர்த்தது. தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோது மலையாளத் திரைப்படங்களுக்குச் சென்றார். பின்னர் சன் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். 2002 இல் வெளியான ஏப்ரல் மாதத்தில் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றினார். வசீகரா படத்திலும் தோன்றினார். பின்னர் சின்னத்திரையிலும் நடித்தார்.
பின்னர் அவர் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராக மாறினார். சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் அந்தமானில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஸ்கூபா டைவிங் பயிற்சியாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அப்போதுதான் அந்த ரிசார்ட்டின் உரிமையாளர் சமீத்துக்கும், காயத்ரிக்கும் காதல் மூண்டது. இரண்டு வருடங்களாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 2007 மே 13ம் தேதி காலை 7.30 மணிக்கு இருவருக்கும் அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவில் சமித் சவ்ஹ்னி என்பாரை மணந்தார். அங்கு ஸ்கூபா டைவிங் பள்ளி ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2001 | நீலா (திரைப்படம்) | நீலா | கன்னடம் | |
அசோகா | இந்தி | சிறப்புத் தோற்றம் | ||
மனதை திருடிவிட்டாய் | சுருதி | தமிழ் | ||
2002 | Aaduthu Paaduthu | காயத்ரி | தெலுங்கு | |
சிறீ | தமிழ் | |||
ஏப்ரல் மாதத்தில் | நிம்மி | தமிழ் | ||
2003 | வசீகரா | ஆசா | தமிழ் | |
2004 | நிஜன் சல்பேரு ராமன்குட்டி | சங்கீதா | மலையாளம் | |
2005 | நாயுடு எல்எல்பி | தெலுங்கு | ||
2005 | லோகநாதன் அய்.ஏ.எசு | துர்கா | மலையாளம் | |
சுவாமி | கன்னடம் |