நல்லி சில்க்ஸ்

நல்லி சில்க்ஸ் என்பது பட்டுப் புடவைகள் விற்பனை செய்யும் தமிழகத்தை மையமாகக் கொண்ட இந்திய துணிக்கடையாகும். தமிழகத்தின் பழமையான வணிக நிறுவனமாக இதன் தலைமையகம் சென்னையின் வர்த்தகப் பகுதியான தி நகரில் உள்ளது. நல்லி குழுமமாக பட்டு மற்றும் தங்க நகை விற்பனையில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருகிறது.[1]

நல்லி
வகைபட்டு சேலைகள்
வகைதுணிக்கடை
நிறுவுகை1928
நிறுவனர்(கள்)நல்லி சின்னசாமி செட்டியார்
தலைமையகம்சென்னை, இந்தியா 100, உஸ்மான் சாலை
அமைவிட எண்ணிக்கைசென்னை, புது தில்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத்து (இந்தியா), கொச்சி, கொல்கத்தா, அகமதாபாது, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், புதுச்சேரி, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிங்கப்பூர்
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
உரிமையாளர்கள்நல்லி குடும்பத்தினர்

வரலாறு தொகு

நல்லி சின்னசாமி செட்டியார் என்பவர் நல்லி என்ற பெயரில் பட்டுப் புடவை வியாபாரத்தை 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் காஞ்சிபுரத்தில் நடத்திவந்தார்.[2][3] ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மசாலியர் சமூகத்தைச் சேர்ந்த சின்னசாமியின் குடும்பப் பெயரான நல்லி பின்னாளில் நிறுவனத்தின் அடையாளப் பெயராக மாறியது.[4][5] 1911 இல் பிரித்தானிய மன்னர் ஐந்தாம் ஜோர்ஜ் இந்தியாவில் சென்னை வந்த போது அவருக்கு நினைவு பரிசாக பட்டுப்பீதாம்பரம் கொடுக்கப்பட்டது அதைக் காஞ்சிபுரத்திலிருந்து நெய்து கொடுத்தவர் நல்லி சின்னசாமி ஆவார்.[4] அன்று முதல் நல்லி என்ற பெயர் புகழ்பெறத் தொடங்கியதால் சென்னையில் 1928 ஆம் ஆண்டு தி நகரில் நல்லி சின்னசாமி நல்லி சில்க்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.[6] ஆரம்பக் காலத்தில் ஒரு வீட்டிலேயே விற்பனையைத் தொடங்கி 1935 இல் வணிகக் கட்டடத்திற்கு மாறினர்.[6] இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவிற்குப் பரிசாக 1954 இல் நல்லி பட்டுப் புடவை பரிசளிக்கப்பட்டது.[7] சின்னசாமிக்குப் பின்னர் இவரது மகன் நல்லி நாராயணசாமி செட்டியாரும் இவரது பெயரனான நல்லி குப்புசாமி செட்டியாரும் இந்நிறுவனத்தினை நடத்தினர். நல்லி சின்னசாமி செட்டியார் 1958 இல் இறந்தாலும் அவர் தொடங்கிய நிறுவனம் ஐந்து தலைமுறையாகப் பட்டுக்குப் புகழ் பெற்றதாக இருந்துவருகிறது.[8][9] தற்போது நல்லி ராமநாதன் மற்றும் அவரது மகள் லாவண்யா நல்லி நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர்.

வர்த்தகம் தொகு

இந்நிறுவனம் 1993 ஜூன் 9 அன்று நல்லி சில்க் சாரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனமாகப் பதிவுசெய்து கொண்டது.[10] சென்னை மட்டுமல்லாமல் பல இந்திய ஊர்களில் தனது விற்பனை அங்காடிகளைத் திறந்துள்ளது. அமெரிக்கா, கனடா, [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில் தங்களது கிளைகளைத் தொடங்கியுள்ளது. 2012 முதல் பட்டு மற்றும் ஆடைகளை வர்த்தகத்துடன் நகை விற்பனையையும் தொடங்கியது.[2] 2020 இல் தனது முதல் ஐரோப்பிய அங்காடியை லண்டனில் தொடங்கியது.[7] 2022 ஆம் நிதியாண்டின் படி இந்நிறுவனம் 500 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்து வருகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "பட்டிலிருந்து நகைக்குத் தாவும் நல்லி... ரூ.1000 கோடி விற்பனைக்கு இலக்கு". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/2012/09/18/business-nalli-get-ino-gold-retailing-161688.html?story=1. பார்த்த நாள்: 28 October 2023. 
  2. 2.0 2.1 "The first woman to join the 89-yr-old family business doubled revenue from $44 million to $100 million". theweekendleader. https://www.theweekendleader.com/Success/2664/the-silk-tycoon.html. பார்த்த நாள்: 28 October 2023. 
  3. "'ஒரு பட்டு வியாபாரி என்று சொல்வதையே விரும்புகிறேன்' நல்லி குப்புசாமி செட்டி". தென்றல். பார்க்கப்பட்ட நாள் 28 October 2023.
  4. 4.0 4.1 "நிறுவனம் உருவான வரலாறு". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/apr/04/history-of-company-formation-3596814.html. பார்த்த நாள்: 28 October 2023. 
  5. "The 'soft' corner for silks". The Hindu (Chennai, India). 20 March 2000. http://www.hindu.com/businessline/2000/03/20/stories/102069m3.htm. 
  6. 6.0 6.1 "T.Nagar: Shop till you drop, and then shop some more". 29 August 2006. http://www.thehindubusinessline.com/2006/08/29/stories/2006082903011900.htm. 
  7. 7.0 7.1 "Indian saree firm opens first UK store". gov.uk. https://www.gov.uk/government/news/indian-saree-firm-opens-first-uk-store. பார்த்த நாள்: 28 October 2023. 
  8. Nalli plans lifestyle stores
  9. All in the FAMILY
  10. "NALLI SILK SAREES PRIVATE LIMITED". tofler. https://www.tofler.in/nalli-silk-sarees-private-limited/company/U52100TN1993PTC025196. பார்த்த நாள்: 28 October 2023. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லி_சில்க்ஸ்&oldid=3925270" இலிருந்து மீள்விக்கப்பட்டது