காயூர் அலி கான்
இந்திய அரசியல்வாதி
காயூர் அலி கான் (Ghayoor Ali Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1909 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழாம் தேதியன்று முகமது லியாகத் அலிகான் என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். முசாபர்நகர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் மீரட் கல்லூரியிலும் கல்வி கற்றார். இந்தியாவின் ஏழாவது மக்களவையில் முசாபர்நகர் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் மதச்சார்பற்ற சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.[1][2][3]
காயூர் அலி கான் Ghayoor Ali Khan | |
---|---|
இந்தியாவின் ஏழாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | சயீது முர்தாசா |
பின்னவர் | தரம்வீர் சிங் தியாகி |
தொகுதி | முசாபர்நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 அக்டோபர் 1909 |
இறப்பு | 4 சூலை 1989 புது தில்லி, இந்தியா | (அகவை 79)
அரசியல் கட்சி | மதச்சார்பற்ற சனதா கட்சி |
காயூர் அலி கான் புது தில்லியில் 7 ஏப்ரல் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதியன்று தனது 79ஆவது வயதில் இறந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members Bioprofile". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
- ↑ "ENTRANCEINDIA | Shri Ghayoor Ali Khan MP biodata Muzaffarnagar | ENTRANCEINDIA". www.entranceindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
- ↑ "Rajya Sabha Official Debates: Browsing RSdebate". rsdebate.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-26.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1989. p. 1. பார்க்கப்பட்ட நாள் 5 December 2022.