காரச்சங்கு
காரச்சங்கு (Dog whelk, அறிவியல் பெயர் Nucella lapillus) என்பது ஒரு இரைகௌவல் கடல் நத்தை இனம் ஆகும். இது முரிசிடே, பாறை நத்தைகள் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வயிற்றுக்காலி பாறை நத்தையாகும்.
காரச்சங்கு | |
---|---|
கொட்டலசுகளை உண்ணும் ஒரு காரச்சங்கு குழு. | |
காரச்சங்கு ஓடுகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Nucella |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/NucellaN. lapillus
|
இருசொற் பெயரீடு | |
Nucella lapillus (லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் [1] | |
Buccinum filosa Gmelin, 1791 |
காரச்சங்கை முதலில் கரோலஸ் லின்னேயஸ் 1758 ஆண்டின் சிசுடமா நேச்சுரேலி 10வது பதிப்பில் புசினம் லாபில்லஸ் (பாசியோனிம்) என்று முதன்முதலில் விவரித்தார்.
பரவல்
தொகுஇந்த இனம் ஐரோப்பாவின் கடற்கரையிலும் வட அமெரிக்காவின் வட மேற்கு அட்லாண்டிக் கடற்கரையிலும் காணப்படுகிறது. அட்லாண்டிக் கடற்கரையோரத்தில் உள்ள கயவாய் நீரிலும் இதைக் காணலாம். இந்த இனம் பாறைகள் நிறைந்துள்ள கடலோரத்தை விரும்புகிறது. அங்கு இது சிப்பி, கொட்டலசு போன்றவற்றை உண்கிறது.[2]
ஓடு
தொகுகாரச்சங்கின் ஓடு சிறியதாகவும், வட்ட வடிவானதாகவும், கூர்மையான சங்குப்புரியோடு , குறுகிய, நேரான கவன்குழாய்த் துளையோடு இருக்கும். ஒட்டுமொத்த சங்கு ஓட்டின் நிறம் குறிப்பிட்ட அந்த சங்குகள் வாழும் கடற்கரையின் கடலலையின் போக்கு, சூழல் போன்றவற்றால் மிகப் பரவலாக மாறுபடுகிறது. இந்த சங்கின் அக்ன்ற பகுதியாக உள்ள சுழல் (மெல்லுடலியின் உள்ளுறுப்பின் பெரும்பகுதி இருக்கும் சங்கின் மிகப்பெரிய பகுதி) பொதுவாக சங்கின் மொத்த நீளத்தில் 3 /4 பகுதி இருக்கும்.[3]
சங்கின் வெளிப்புற நிறமானது பொதுவாக வெண்சாம்பல் நிறத்தில் இருக்கும். ஆனால் ஆரஞ்சு, மஞ்சள், பழுப்பு, கருப்பு அல்லது இந்த நிறங்களின் கலவையாகவும் பலவிதமான வகைகளாக இருக்கும். இவை அரிதாக பச்சை, நீலம், இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.
சூழலியல்
தொகுவாழ்விடம்
தொகுகாரச்சங்குகள் பாறைகள் நிறைந்த கடலோரங்கள், கழிமுகங்களில் வாழ்கிறன்றன. காலநிலை அடிப்படையில் இது 0 °C மற்றும் 20 °C க்கு இடையில் ஐசோதர்ம்கள் நில அமைப்பில் வாழ்கிறது.[சான்று தேவை]
உணவுப் பழக்கம்
தொகுகாரச்சங்கானது நத்தை போல கடற் பாறைகள், மணல்வெளியில் நகர்ந்து செல்லும். கடல் நீரின் சுவை பார்த்து தன் இரையைத் தேடிவரும். இதன் உணர் கொம்பும் இரையை உணர உதவுகிறது. இது தன் இரையாக நகர முடியாத தொட்டலாசு, சிப்பி போன்றவற்றையே கொள்கிறது. இதன் இரையான கொட்டலாசு, சிப்பி போன்றவை ஓடுகளைக் கொண்டவை. காரச்சங்கு வாள் முட்கள் கொண்டுள்ளதைப் போன்ற தன் நாக்கால் தன் இரையின் ஓட்டை துளையிடுகிறது. துளையிட ஏதுவாக இதன் காலில் உள்ள ஒரு உள்ளுறுப்பில் சுரக்கும் இரசானம் இரையின் ஓட்டை மென்மையாக்குகிறது. துளை இட்டபிறகு ஓட்டுக்குள் செரிமான நொதியை செலுத்தி அதன்மூலம் இரையின் மென்மையான உடலை 'சூப்' போல கரைக்கிறது. பின்னர் அதை உறிஞ்சி உணவாக்கிக் கொள்கிறது. ஒரு காரச்சங்கானது ஒரு உணவை ஒரு நாளில் சாப்பிடும். இருப்பினும் சிலவகை பெரிய சிப்பிகளை ஜீரணிக்க ஒரு வாரம் வரை கூட ஆகும்.
குறிப்புகள்
தொகு- ↑ Nucella lapillus (Linnaeus, 1758). Retrieved through: World Register of Marine Species on 1 June 2010.
- ↑ Colin Little, J. A. Kitching, 1996, The Biology of Rocky Shores, pp. 140-145. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198549352
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-09-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.