காரா கானிய கானரசு

நடு ஆசியாவின் துருக்கிக் அரசு (840-1212)
(காரா கானிடு கானரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காரா கானிய கானரசு (Kara khanid khanate) என்பது ஒரு துருக்கிய மக்கள் குழுவினரின் கானரசு ஆகும். இது நடு ஆசியாவை 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆண்டது.[8]

காரா கானிய கானரசு
840–1212
அண். பொ. ஊ. 1000இல் காரா கானிய கானரசு.[1]
நிலை
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்
சமயம்
அரசாங்கம்முடியரசு (இரட்டை ஆட்சி)
ககான் 
• 840–893 (முதல்)
பில்கே குல் காதிர் கான்
• 1204–1212 (கடைசி)
உதுமான் உலுக் சுல்தான்
கசிப் (வேந்தர்) 
• 11ஆம் நூற்றாண்டு
யூசூப் பலசகுன்
வரலாறு 
• தொடக்கம்
840
• முடிவு
1212
முந்தையது
பின்னையது
கர்லுக் யப்கு
உயுகுர் ககானரசு
சாமனியப் பேரரசு
கோதான் இராச்சியம்
செல்யூக் பேரரசு
குவாரசமியப் பேரரசு
காரா கிதை

இக்கானரசு நடு ஆசியாவில் திரான்சாக்சியானாவை வென்றது. அப்பகுதியை 999 மற்றும் 1211க்கு இடையில் ஆண்டது.[9][10] திரான்சாக்சியானாவில் இவர்களது வருகையானது நடு ஆசியாவில் ஈரானிய ஆதிக்கத்திலிருந்து துருக்கிய ஆதிக்கத்திற்கான ஒரு தீர்க்கமான மாற்றத்தைக் குறித்தது.[11] எனினும், கானியர்கள் படிப்படியாக பாரசீக-அரபு முஸ்லிம் கலாச்சாரத்தில் இணைந்தனர். அதே நேரத்தில், தங்களது பூர்விகத் துருக்கியக் கலாச்சாரத்தின் சில அம்சங்களையும் தக்க வைத்துக் கொண்டனர்.[7]

காரா கானிய கானரசின் தலைநகரங்கள் கஷ்கர், பலசகுன், உசுகென் மற்றும் சமர்கந்து ஆகியவையாகும். 1040களில் இந்தக் கானரசானது கிழக்கு மற்றும் மேற்குக் கானரசுகளாகப் பிரிந்தது. 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செல்யூக் பேரரசுக்குப் பணிந்ததாகவும், 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காரா கிதை அரசுக்குப் பணிந்ததாகவும் இது திகழ்ந்தது. 1211இல் கிழக்குக் கானரசானது முடிவுக்கு வந்தது. 1213இல் மேற்குக் கானரசானது குவாரசமியப் பேரரசால் முடித்து வைக்கப்பட்டது.

காரா கானிய கானரசின் வரலாறானது சிதறுண்ட மற்றும் பெரும்பாலும் முரண்பாடாக எழுதப்பட்ட நூல்களில் இருந்து மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. இவர்கள் நாணயவியல் குறித்த ஆய்வுகளும் இவ்வாறே உள்ளன.[12]

மேலும் காண்க தொகு

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Abazov, R. (2016) (in en). Palgrave Concise Historical Atlas of Central Asia. Springer. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-230-61090-3. https://books.google.com/books?id=f1wYDAAAQBAJ&pg=PR56. 
  2. 2.0 2.1 Asimov 1998, ப. 119–144.
  3. Barthold, V.V. (1962). Four Studies on the History of Central Asia. E.J. Brill. பக். 99. 
  4. Grousset 2004, ப. 165.
  5. Pozzi, Janhunen & Weiers 2006, ப. 114.
  6. Kemal Silay (1996). An Anthology of Turkish Literature. பக். 27. 
  7. 7.0 7.1 Biran, Michal (March 27, 2012). "ILAK-KHANIDS". Encyclopedia Iranica.  “The two last western ḵāqāns, Ebrāhim b. Ḥo-sayn (1178-1203) and ʿOṯmān (1202-12), wrote poetry in Persian” 
  8. Asimov 1998, ப. 120.
  9. "Encyclopædia Britannica". Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2006-12-08.
  10. Grousset 2004.
  11. Soucek 2000.
  12. Asimov 1998, ப. 119-144.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரா_கானிய_கானரசு&oldid=3811267" இலிருந்து மீள்விக்கப்பட்டது