காரைக்கால் திருவிழா

ஆண்டுதோறும் புதுச்சேரி ஒன்றிய பிரதேசமான காரைக்காலில் நடைபெறும் திருவிழா

காரைக்கால் திருவிழா (Karaikal Carnival) என்பது புதுச்சேரி ஒன்றிய பிரதேச சுற்றுலாத் துறையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கலாச்சார விழாவாகும்.  இது புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் நான்கு பகுதிகளில் ஒன்றான காரைக்காலில் தைப்பொங்கல் பண்டிகையின் போது, மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகின்றது.

நிகழ்வுகள்

தொகு

காரைக்கால் திருவிழாவின் நிகழ்வுகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான போட்டி, மாரத்தான், சைக்கிள் பந்தயம் மற்றும் மாட்டு வண்டி பந்தயம் போன்ற பல கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகிறது. காரைக்கால் இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்ப்பதே இந்த திருவிழாவின் நோக்கமாகும். இந்த இலக்கை அடைய, காரைக்காலைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற பிரத்தியேக ஒளி இசை நிகழ்ச்சியும் முன்னர் நடத்தப்பட்டது

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்

தொகு

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமான கலைஞர்கள் மற்றும் இசைக்குழுக்களின் கிராமிய இசை போன்ற திரைப்பட நிகழ்வுகளும் அடங்கும்.

வான்வெளிக் காட்சி

தொகு

2007-ல் நடைபெற்ற திருவிழாவில் முதன் முதலாக வான்வெளிக் காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை இந்திய வான்படையினர் நிகழ்த்தினர். சுமார் 3000 அடி உயரத்திலிருந்து உலங்கு வானூர்தி மற்றும் வான்குடை மூலம் சாகசங்களை நிகழ்த்தினர்.

கடலணி

தொகு

மக்களைக் கவரும் வகையில், கடற்கரைச் சாலையில் அரசலாற்றில், தண்ணீருக்கு மத்தியில் ஒருவர் உணவருந்துவதற்கு வசதியாக ஒரு மிதவை அமைக்கப்பட்டது.

திருவிழா பாடல்

தொகு

'கலைக்காவலர்' காரை சுப்பையாவின் மகன் நடராசன் இயற்றிய பாடல், 2007-ல் நடந்த பாராட்டு விழாவில் இசைக்கப்பட்டது. திருவிழாப் பாடல் எனப் பெயரிடப்பட்ட பாடலை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.[1]

மீண்டும் திருவிழா

தொகு

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்து திருவிழா இந்த (2023) சனவரி மாதம் 15ஆம் தேதி முதல் 18 வரை 4 நாட்கள் நடைபெற்றது.[2] இத்திருவிழாவினை புதுச்சேரி ஆளுஞர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான மிதிவண்டி போட்டி, சடுகுடு போட்டி உள்ளிட்ட பலபோட்டிகள் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடத்தப்பட்டன.[3]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The Carnival Song 2007 | Audio.isg.si". Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 27 September 2007.
  2. https://karaikal.gov.in/ta/notice/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-03-01/
  3. https://www.dailythanthi.com/news/puducherry/karaikal-carnival-is-over-881144
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_திருவிழா&oldid=3685489" இலிருந்து மீள்விக்கப்பட்டது