காரைக்கால் வானொலி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுச்சேரி நகரிலிருந்து 138 கி.மீ தொலைவில் உள்ள காரைக்கால் நகரவாசிகள், தங்கள் மாநிலத்து செய்திகளை வானொலி வாயிலாக அறிந்துகொள்ளும் பொருட்டு, காரைக்காலில் பண்பலை (எஃப் எம்) வானொலி 06-03-1995 அன்று தொடங்கப்பட்டது.
காரைப் பண்பலையின் ஒலிபரப்பு இந்திய நேரம் காலை 05.55 க்குத் தொடங்கி இரவு 10.30 க்கு நிறைவு பெறுகிறது. 100.3 மெகா ஹெர்ட்ஸ் எஃப் எம் அலைவரிசையில் 6 கிலோ வாட் சக்தியுடன் காரைக்கால் பண்பலை வானொலி இயங்குகிறது. காரைக்கால் பகுதி மட்டுமின்றி, அருகில் உள்ள தமிழ் நாட்டின் பிற ஊர்களிலும் நேயர்களை இது கொண்டுள்ளது. தொடங்கிய காலத்தில் இருந்து பெருவாரியான நேயர்களைப் பெற்றுள்ளது “காரைப்பண்பலை” என்று அழைக்கப்படும் காரைக்கால் வானொலி நிலையம்.
தமிழ்த் திரைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நாடகங்கள், வேளாண்மைச் செய்திகள், பல்வேறு துறைசார் வல்லுநர்களின் பேட்டிகள், கலந்துரையாடல்கள், நேயர்களோடு தொலைபேசி மூலம் உரையாடும் நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள், தமிழ் இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகள், நாட்டுப்புறப் பாடல்கள், வானிலை அறிக்கைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என்று பலவகையான நிகழ்ச்சிகள் இங்கே படைக்கப்படுகின்றன.
உள்ளூர் வானொலிகளில், அகில இந்திய அளவில், அதிக விளம்பர வருவாய் ஈட்டிய வானொலி என்ற பெருமையைக் கொண்டுள்ளது [சான்று தேவை].