கார்கி குப்தா

கார்கி குப்தா(Gargi Gupta), இந்தியாவின் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு, கிழக்கு இந்தியாவில் பார்வையற்றோர், ஊனமுற்றோர் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்காக செயல்படும் இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பான "வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட்" என்று அறியப்படும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயலாளராக உள்ளார்.

கார்கி குப்தா
குடியரசுத் தலைவர் மாளிகையில் மார்ச்8, 2018இல் நாரி சக்தி புரஸ்கார் விருது பெற்ற கார்கி குப்தா.
பிறப்புகார்கி
19 சூலை 1961 (1961-07-19) (அகவை 63)
கொல்கத்தா, மேற்கு வங்காளம்
தேசியம்இந்தியா
பணிசமூகப்பணி
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போது வரை
அறியப்படுவது"வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட்" அமைப்பின் நிறுவனர் (NGO)[1]
பெற்றோர்பிரபீர் குப்தா (தந்தை)[2]
பிரணதி குப்தா (தாய்)
விருதுகள்நாரி சக்தி விருது[3]

வாழ்க்கை

தொகு

குப்தா மேற்கு வங்காளத்தில் பிறந்தார். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இந்திய ரயில்வேயில் பணிக்குச் சேர்ந்தார். இவரது, பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, கொல்கத்தா நகரத்தின் தெருக்களில் கண்ட ஏழைக் குழந்தைகள்தான் இவருக்கு முதன்முதலில் வறுமையை காண்பித்ததாக இவர் தெரிவித்துள்ளார்.

 
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குப்தாவுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதை 2018இல் வழங்கினார்.

கார்கி குப்தா வடக்கு கொல்கத்தாவில் உள்ள தனது தந்தையின் வாடகை வீட்டில் ஆறு குழந்தைகளுடன் தனது வேலையைத் தொடங்கினார். 2018 இல் இவர்களின் எண்ணிக்கை 300 [4] ஆக இருந்தது. இது தனியாரால் நடத்தப்படும் ஒரு காப்பகமாகும். [2] "வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட்" அதன் தெற்கு கொல்கத்தா மையத்தை 1998 இல் பிரபீர் குப்தாவின் மற்றொரு வீட்டில் தொடங்கியது. இங்கு, குடியிருப்பு மழலையர் பள்ளி, பிரெய்லி அச்சகம் [2] மற்றும் நூலகம் போன்றவை அமைந்துள்ளது.

இவரது சேவைகளைப் பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கார்கி குப்தாவுக்கு மார்ச் 8, 2018 அன்று நாரி சக்தி (பெண்கள் அதிகாரம்) விருதை வழங்கினார்.

தொண்டு

தொகு

"வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட்" இன் அங்கத்தினர்கள் அனாதைகள் அல்லது வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள், இலவசக் கல்வியுடன் மலையேறுதல் மற்றும் மலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளையும் அனுபவிக்கின்றனர். [5] 2018 இல் உடல் ஊனமுற்ற வர்களுக்காக கடலோர மலையேற்றத்தை அறிமுகப்படுத்தினார். [1] இவர்களின் கல்வியை முடித்த பிறகு, இவரும் இவரது தன்னார்வ தொண்டு நிறுவனமும் கைதிகளின் மறுவாழ்வு, குறிப்பாக பார்வைக் குறைபாடுள்ள சிறுமிகளின் மறுவாழ்வைக் கவனித்து வருகின்றன. [6] [7]

முக்கிய பணிகள்

தொகு
  • 1992 இல், இவர் கிழக்கு இந்தியாவில் பார்வையற்ற மற்றும் ஊனமுற்ற அனாதை குழந்தைகளுக்காக 'வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட்' எனப்படும் அரசு சாரா அமைப்பை நிறுவினார். [8]
  • 1997இல், 300 குடியிருப்பு மற்றும் 3000 குடியிருப்பு அல்லாத பயனாளிகளுக்கு குடியிருப்பு வசதி தொடங்கப்பட்டது. [8]
  • 2001இல், பெங்காலி வார்த்தை ஆவணங்களை பிரெய்லிக்கு மாற்ற ஒலிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்கியது. [8]
  • உயர் கல்வியைத் தொடரும் பார்வையற்ற பெண்களுக்கு ரிஷ்ராவில் ஒரு இல்லம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [8]
  • இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு ஆசிரியர் பயிற்சி கல்லூரியை நடத்துகிறது, அங்கு ஊனமுற்ற மாணவர்கள் உதவித்தொகை பெறுகிறார்கள் [8]

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • மார்ச் 8, 2018: நாரி சக்தி புரஸ்கார் (பெண்கள் ஆற்றல் விருது), இந்தியாவில் பெண்களுக்கான மிக உயரிய சிவிலியன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. [9] [10]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Walk by the sea, laughing all the way". 23 February 2018. https://timesofindia.indiatimes.com/city/kolkata/walk-by-the-sea-laughing-all-the-way/articleshow/63048887.cms. Mitra, Dipawali (23 February 2018). "Walk by the sea, laughing all the way". Retrieved 12 November 2018.
  2. 2.0 2.1 2.2 "ইচ্ছেডানায় হাজার আলো জ্বালাচ্ছেন গার্গী". 1 April 2013. https://eisamay.indiatimes.com/city/kolkata/ei-samay-aparajito/articleshow/19318332.cms. 
  3. "Nari Shakti Puraskar". TOI. https://timesofindia.indiatimes.com/india/nari-shakti-puraskar/articleshow/63203332.cms. 
  4. "নারীদিবসে বিরল সম্মান কলকাতার! আলো দেখালেন এই বাঙালি নারী". 12 March 2018. https://ebela.in/state/gargi-gupta-honoured-with-nari-shakti-award-on-international-women-s-day-dgtl-1.769711. 
  5. "পর্বতারোহন করছেন পশ্চিমবঙ্গের দৃষ্টিহীন শিক্ষার্থীরা". 1 February 2015. http://www.bbc.com/bengali/news/2015/02/150201_ms_blind_mountaineers. 
  6. "Made in heaven: Two love stories deeper than what meets the eyes - Times of India". 12 March 2018. https://timesofindia.indiatimes.com/city/kolkata/made-in-heaven-two-love-stories-deeper-than-what-meets-the-eyes/articleshow/63262411.cms. 
  7. "দৃষ্টিহীন দুই বন্ধুর বিয়ে দেখল কলকাতা". 12 March 2018 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181113165712/https://www.aajkaal.in/news/kolkata/two-blind-friend-got-married-in-same-place-5o0n. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 "Ministry of Women and Child Development Nari Shakti Awardees 2017" (PDF). Archived from the original (PDF) on 2018-03-12. பார்க்கப்பட்ட நாள் 2018-03-12.
  9. "Infographic: Nari Shakti Puraskar - Times of India". 7 March 2018. https://timesofindia.indiatimes.com/india/nari-shakti-puraskar/articleshow/63203332.cms. 
  10. "Maharashtra's Sindhutai Sapkal, Urmila Apte to be honoured with Naari Shakti 2017 awards". 7 March 2018. https://mumbaimirror.indiatimes.com/mumbai/other/maharashtras-sindhutai-sapkal-urmila-apte-to-be-honoured-with-naari-shakti-2017-awards/articleshow/63204935.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கி_குப்தா&oldid=4108413" இலிருந்து மீள்விக்கப்பட்டது