கார்த்தினி

ரேடன் அட்ஜெங் [1] கார்த்தினி (Raden Adjeng Kartini ) (பிறப்பு: 1879 ஏப்ரல் 2117 -இறப்பு: 1904 செப்டம்பர் 17) சில நேரங்களில் ராடென் ஆயு கார்த்தினி என்றும் அழைக்கப்படும் இவர், சாவகத்தைச் சேர்ந்த இந்தோனேசிய தேசிய வீராங்கனையாவார். இவர் பெண்கள் கல்வி மற்றும் இந்தோனேசிய பெண்கள் உரிமைகளுக்கு ஒரு முன்னோடியாக இருந்தார்.

ரேடன் அட்ஜெங்
கார்த்தினி
ரேடன் அட்ஜெங் கார்த்தினியின் உருவப்படம் (தொகுப்பு டிராபென் அருங்காட்சியகம்
பிறப்பு(1879-04-21)21 ஏப்ரல் 1879
ஜெபாரா, மத்திய ஜாவா, இடச்சு கிழக்கு இந்தியா
இறப்பு17 செப்டம்பர் 1904(1904-09-17) (அகவை 25)
ரெம்பாங், மத்திய சாவகம், இடச்சு கிழக்கு இந்தியாs
(இப்போது இந்தோனேசியா)
மற்ற பெயர்கள்ரேடன் அட்ஜெங் கார்த்தினிi
அறியப்படுவதுபெண்கள் விடுதலை; தேசிய கதாநாய
வாழ்க்கைத்
துணை
ரேடன் ஆதிபதி ஜோயோடிநிரட்

சுயசரிதை தொகு

இப்போது இந்தோனேசியாவிலுள்ள இடச்சு கிழக்கு இந்தியாவில் ஒரு பிரபுத்துவ ஜாவானிய குடும்பத்தில் பிறந்தார். இவர், இடச்சு மொழியை ஆரம்பப் பள்ளியில் பயின்றார். இவர் மேலதிக கல்விக்கு ஆசைப்பட்டார். ஆனால் இவருக்கும் ஜாவானிய சமுதாயத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கும் இந்த விருப்பம் கிடைக்கவில்லை. இடச்சு நெறிமுறைக் கொள்கையை அமல்படுத்தும் பொறுப்பில் இருந்த ஜே.எச். அபெண்டனான் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுடன் இவர் தொடர்பு கொண்டார்.

கடிதங்கள் தொகு

கார்த்தினி தனது கருத்துக்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி கடிதங்களாக எழுதினார். அவுட் ஆஃப் டார்க்னஸ் டு லைட், கிராமத்தில் பெண்கள் வாழ்க்கை மற்றும் ஜாவானிய இளவரசியின் கடிதங்கள் என்ற பெயரில் ஒரு இடச்சு இதழிலும் பின்னர் வெளிவந்தன. இவரது பிறந்த நாள் இப்போது இந்தோனேசியாவில் கார்த்தினி தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டினார். பலதாரமணத்தை எதிர்த்தார். சிறுமிகளின் கல்விக்கான இவரது வாதத்தை இவரது சகோதரிகள் தொடர்ந்தனர். [2] பள்ளிகளுக்கு கார்த்தினி பள்ளிகள் என இவரது பெயரிடப்பட்டன. சிறுமிகளின் கல்விக்கு நிதியளிப்பதற்காக இவரது பெயரில் ஒரு நிதி நிறுவப்பட்டது.

குடும்பம் தொகு

டச்சு காலனியின் ஒரு பகுதியாக ஜாவா இருந்தபோது கார்த்தினி ஒரு பிரபுத்துவ ஜாவானிய குடும்பத்தில் பிறந்தார். கார்த்தினியின் தந்தை முதலில் மயோங்கின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர், சோஸ்ரோனிங்கிராட் ஜெபராவின் ஆட்சியாளராக இருந்தார். இவரது தாயார் நாகசிரா, மாடிரோனோவின் மகளாவார். இவர் தெலுக்காவூரில் மத போதகராக இருந்தார். இவர் தனது கணவனின் முதல் மனைவி என்றாலும் மிக முக்கியமானவர் அல்ல. இந்த நேரத்தில், பலதார மணம் என்பது பிரபுக்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. காலனித்துவ விதிமுறைகளுக்கு பிரபுக்களின் உறுப்பினரை திருமணம் செய்ய ஒரு ஆட்சியாளராக இருக்க வேண்டும். ஆனால் நாகசிரா அவ்வாறு இல்லாததால், [3] சோஸ்ரோனிங்கிராட் மதுரா ராஜாவின் நேரடி வம்சாவளியான வூர்ஜனை (மூர்ஜாம்) இரண்டாவது முறையாக மணந்தார். இந்த இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, கார்த்தினியின் தந்தை ஜெபராவின் ஆட்சியாளராக உயர்த்தப்பட்டார். அவரது இரண்டாவது மனைவியின் சொந்த தந்தை திஜிட்ரோவிக்ரோமோவிற்கு பதிலாக ஆட்சியாளரானார்.

கல்வி தொகு

கார்த்தினி பதினொரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாகவும் மற்றும் இரண்டாவது மூத்த மகளாகவும் வலுவான அறிவுசார் பாரம்பரியம் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தாத்தா, பங்கெரன் அரியோ நான்காம் ஜான்ட்ரோனெகோரோ, தனது 25 வயதில் ஆட்சித் தலைவரானார். அதே நேரத்தில் கார்த்தினியின் மூத்த சகோதரர் சோஸ்ரோகார்டோனோ ஒரு திறமையான மொழியியலாளராக இருந்தார். கார்த்தினியின் குடும்பத்தினர் இவரது 12 வயது வரை பள்ளியில் சேர அனுமதித்தனர். இங்கே, மற்ற பாடங்களுக்கிடையில், இவர் டச்சு மொழியை பேசக் கற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் ஜாவானிய பெண்களுக்கு இது ஒரு அசாதாரண சாதனையாகும். [4]

இவர் 12 வயதை அடைந்த பிறகு, வீட்டில் தனிமையில் ( பிங்கிட் ) இருந்தார். இது ஜாவானிய பிரபுக்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. மேலும் இளம் பெண்களை அவர்களின் திருமணத்திற்கு தயார்படுத்தியது. தனிமைப்படுத்தும் போது பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வரை பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. அந்த சமயத்தில் அவர்கள் மீதான அதிகாரம் அவர்களின் கணவர்களுக்கு மாற்றப்பட்டது. கார்த்தினியின் தந்தை தனது மகளின் தனிமையின் போது சிலரை விட மென்மையானவராக இருந்தார். சிறப்பு நிகழ்வுகளுக்கு பூத்தையல் பாடங்கள் மற்றும் அவ்வப்போது பொதுவில் தோன்றுவது போன்ற சலுகைகளை இவருக்கு வழங்கினார்.

குறிப்புகள் தொகு

  1. Raden Adjeng was a title borne by married women of the priyayi or Javanese nobles of the Robe class
  2. Indonesia 1800-1950 Beck
  3. Harvard Asia Quarterly பரணிடப்பட்டது ஆகத்து 16, 2006 at the வந்தவழி இயந்திரம்
  4. "RA. Kartini". Guratan Pena. April 27, 2006. பார்க்கப்பட்ட நாள் 2013-03-17.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கார்த்தினி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்தினி&oldid=2935310" இலிருந்து மீள்விக்கப்பட்டது