கார்யவட்டம்
கர்யவட்டம் (Kariavattom) என்பது இந்தியா மாநிலமான, கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகரத்தின் ஒரு பகுதியாகும். கார்யவட்டத்தில் கேரளத்தின் மிகப்பெரிய சர்வதேச விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.
கார்யவட்டம் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 8°34′0″N 76°53′0″E / 8.56667°N 76.88333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
அரசு | |
• நிர்வாகம் | திருவனந்தபுரம் மாநகராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695581 |
தொலைபேசி குறியீட்டு எண் | 0471 |
வாகனப் பதிவு | KL-22 |
அருகில் உள்ள நகரம் | திருவனந்தபுரம் |
மக்களவைத் தொகுதி | திருவனந்தபுரம் |
நிலவியல்
தொகுகார்யவட்டமானது திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 47 இல் பங்கப்பாராவுக்கும் (പാങ്ങപ്പാറ) மற்றும் கழக்கூடத்துக்கும் (കഴക്കൂട്ടം) இடையே அமைந்துள்ளது. இது ஸ்ரீகரியத்திலிருந்து (ശ്രീകാര്യം) சுமார் 3 கி.மீ தொலைவிலும், கனியாபுரத்திலிருந்து (കണിയാപുരം) 3.5 கி.மீ தொலைவிலும் உள்ளது.
பழங்கால கூற்றுகளின்படி இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கு (മാര്ത്താണ്ഡവര്മ്മ) (பிற்கால திருவாங்கூர் அரசர் ) எதிராக கிளர்ச்சி செய்த எட்டுவீட்டில் பிள்ளைமார் (എട്ടുവീട്ടീല് പിള്ളമാര്) கரியாவட்டம் அருகே அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு அருகில் ஒரு இடத்தில் சந்தித்ததால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்தது. அவர்கள் ஒரு வட்டமாக உட்கார்ந்து முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றி விவாதித்தார்கள் என்று நம்பப்படுகிறது, எனவே இதற்கு காரியாவட்டம் ( காரியம்+வட்டம் ஆகிய சொற்களிச் சேர்க்கை.) என்று பெயர் பெற்றது. மேற்கண்ட பெயர் குறித்த வாதம் முறையற்றது, காரியவட்டத்தில் உள்ள காரியம் என்ற சொல்லானது கழக்கூட்டம் கோயிலின் காரியக்கருடன் இணைத்துக் கூறப்படுகிறது. ஸ்ரீகாரியம் மற்றும் காரியாக்கர்களின் குடியேறிய இடமாதலால் கார்யவட்டம் என பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. காரியவட்டமானது தற்போது திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. நாராயண குருவின் பிறப்பிடம் கரியாவட்டத்திலிருந்து 5 கி.மீ. தோலைவில் உள்ளது.
அஞ்சல் குறியீட்டு எண் (பின்) குறியீடு 695581.
கல்வி
தொகுபல்கலைக்கழக முதுகலை பிரிவு, அரசு கல்லூரி, கரியாவட்டம், பொறியியல் கல்லூரி [கேரள பல்கலைக்கழகம்], பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் எல்.என்.சி.பி.இ லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி கல்லூரி போன்ற சில முக்கிய கல்வி நிறுவனங்களின் அமைவிடமாக காரியவட்டம் உள்ளது.
அசல் காரியாவட்டத்தில் (அதாவது கரியாவட்டம் ஜங்சன் அருகில்) அரசு. யுபிஎஸ், எஸ்.டி.ஏ பள்ளி, மார் கிரிகோரியஸ் ஆகிய மூன்று பள்ளிகள் உள்ளன.
பொருளாதாரம்
தொகுஇந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணுவியல் தொழில்துறை பூங்காவான டெக்னோபார்க் காரியாவட்டம் அருகே அமைந்துள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விளையாட்டு அரங்கம் (கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம்) 2015 சனவரி 26 அன்று திறக்கப்பட்டது.