கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர்
கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் (Carl Friedrich Freiherr von Weizsäcker) (ஜூன் 28, 1912- ஏப்பிரல் 28, 2007) ஒரு செருமானிய இயற்பியலாளரும் மெய்யியலாளரும் ஆவார். வெர்னர் ஐசன்பர்கு தலைமையில் செருமனியில் இரண்டாம் உலகப் போரின்போது அணுக்கரு ஆராய்ச்சியில் ஈடுபட்டவருள் நீண்ட வாழ்நாள் கொண்ட உறுப்பினர் ஆவார். அப்போது இவர்கள் தம் முழு விருப்பத்தோடுதான் இவ்வாராய்ச்சியில் குழுவாக ஈடுபட்டு செருமனியில் அணுக்குண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டார்களா என்பது குறித்த விவாதம் இன்னமும் தொடர்கிறது.[சான்று தேவை]
கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் Carl Friedrich von Weizsäcker | |
---|---|
கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர், 1993 | |
பிறப்பு | கார்ல் பிரீட்ரிக் பிரீத்தர் வான் வைசாக்கர் ஜூன் 28, 1912 கீல், சுசீசுவிக்-கோல்சுட்டீன் |
இறப்பு | ஏப்ரல் 28, 2007 சுட்டார்ன்பர்கு, பவாரியா | (அகவை 94)
குடியுரிமை | செருமனி |
தேசியம் | செருமானியர் |
துறை | இயற்பியல், மெய்யியல் |
பணியிடங்கள் | மேக்சு பிளாங்க் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வு நெறியாளர் | பிரீட்ரிக் குண்டு |
முனைவர் பட்ட மாணவர்கள் | கார்ல்-கைன்சு கோசாக்கர் |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
வைசாக்கர் குடும்பத்தின் புகழ்வாய்ந்த இவர்,எர்னெசுட்டு வான் வைசாக்கரின் மகன்; மூன்னாள் செருமனியின் குடியரசுத் தலைவரான இரிச்சர்டு வான் வைசாக்கரின் அண்ணன்; இயற்பியலாளரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எர்னெசுட்டு உல்ரிச் வான் வைசாக்கரின் தந்தை; முந்தைய உலக மறைப்பேராயங்களின் மன்றச் செயலாளரான கோறாடு இரெய்சரின் மாமனார்.
இவர் அணுக்கருப்பிணைவால் சூரியனில் ஆற்றல் உருவாதல் பற்றிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தவர். இவர்சூரியக் குடும்பக் கோள்களின் உருவாக்கம் குறித்த கோட்பாட்டு ஆய்வில் பெருந்தாக்கம் செலுத்தியுள்ளார்.
தனது பிந்தைய வாழ்நாளில் இவர் மெய்யியலிலும் அறவியலிலும் தன் கவனத்தைச் செலுத்தியுள்ளார். இவர் இவற்றுக்காக, பல பன்னாட்டுத் தகைமைகளை ஈட்டியுள்ளார்.
விருதுகளும் தகைமைகளும்
தொகு- 1957 மேக்சு பிளான்க் பதக்கம்
- 1958 பிரான்க்பர்ட் ஆம் மைன் நகரத்தின் கோத்தே பரிசு
- 1961 அறிவியல், கலைக்கான பவர்லெ மெரிட்
- 1963 செருமனிப் புத்தகத் தொழில்வணிக அமைதிப் பரிசு
- 1969 கெர்ம்டாம் நகரத்தின் எராசுமசு பரிசு
- 1969 அறிவியல், கலைக்கான ஆத்திரியப் பதக்கம்
- 1973 [[செருமனிக் கூட்டுக்குடியரசின் பெருந்தகைமை (கிராண்டு மெரிட்) குருசு, விண்மீனும் இலச்சினையும் அமைந்தது]]
- 1982 மூன்சுட்டர் பல்கலைக்கழக எர்னெசுட்டு எலிமட் விட்சு பரிசு]]
- 1983 தூசெல்டோர்ஃப் நகரத்தின் ஐன்ரிச் கைன் பரிசு
- 1988 அறிவியல் உரைக்கோவைக்கான சிக்மண்டு ஃபிராய்டு பரிசு
- 1989 சமய முன்னேற்றத்துக்கானடெம்பிள்டன் பரிசு
- 1989 "இவரது உலகம் அறிந்த பன்முக அர்ப்பணிப்புமிக்க மானுடப் பங்களிப்புகளான அமைதி, நீதி படைப்புநேர்மை ஆகியவற்றுக்காக" தியோடோர் கியூசு பரிசு
- இலவுசன்னே பல்கலைக்கழகத்தின் பிரிக்சு ஆர்னோல்டு இரேமாண்டு பரிசு
- ஏன்சியாட்டிக் கோத்தே பரிசு
- பிரேகு நகர. பல்கலைக்கழக நான்காம் கார்ல் பரிசு
- தகைமைப் பட்டங்கள்
- சட்டம்: ஆம்சுடர்டாம் கட்டற்ற பல்கலைக்கழகம், ஆல்பெர்த்தா பல்கலைக்கழகம், அபர்தீன் பல்கலைக்கழகம்
- இறையியல்: தூபிங்கன் பல்கலைக்கழகம், பேசல் பல்கலைக்கழகம்
- அறிவியல்: கார்ல் மார்க்சு பல்கலைக்கழகம் இலீப்சிக்
- மெய்யியல்: பெர்லின் தொழில்நுட்ப நிறுவனம், ஆச்சென் பல்கலைக்கழகம்
சுசீசுவிக்-கோல்சுட்டீனில் உள்ள பார்ம்சுடெட் நகரத்தின் கார்ல் பிரீட்ரிக் வான் வைசாக்கர் பள்ளி இவரது பெயரைத் தாங்கியுள்ளது.
வைசாக்கர் இருமுறை இயற்பியல் நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப் பட்டார்.[1] Since 2009, the Donors' Association for German Science and the Leopoldina makes a biennial award of €50,000 "Carl Friedrich von Weizsäcker Award" for "outstanding scientific contribution to resolving socially important problems".
நூல்களும் பணிகளும்
தொகு- Zum Weltbild der Physik, Leipzig 1946 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7776-1209-X), 2002, 14th edition, renewed and with introduction by Holger Lyre de:Holger Lyre
- translation into English by Marjorie Grene The World View of Physics, London, 1952
- translation into French Le Monde vu par la Physique, Paris 1956
- Die Geschichte der Natur, Göttingen 1948 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7776-1398-3)
- Die Einheit der Natur, Munich 1971 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-423-33083-X)
- translation The Unity of Nature, New York, 1980 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-374-28100-9)
- Wege in der Gefahr, Munich 1976
- translation The Politics of Peril, New York 1978
- Der Garten des Menschlichen, Munich 1977 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-12423-3)
- Deutlichkeit: Beiträge zu politischen und religiösen Gegenwartsfragen, Hanser, München, 1978, 1979 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-12623-6).
- translation The Ambivalence of progress, essays on historical anthropology, New York 1988 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-913729-92-2)
- The Biological Basis of Religion and Genius, Gopi Krishna, New York, intro. by Carl Friedrich von Weizsäcker, which is half the book, 1971, 1972 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-064788-4)
- Aufbau der Physik, Munich 1985 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-14142-1)
- translation The Structure of Physics, Heidelberg 2006 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-5234-0; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-5234-7)
- Der Mensch in seiner Geschichte, Munich 1991 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-16361-1)
- Zeit und Wissen, Munich 1992 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-16367-0)
- Große Physiker, Munich 1999 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-446-18772-3)
மேற்கோள்கள்
தொகு- ↑ Michael Schaaf: Weizsäcker, Bethe und der Nobelpreis, Acta Historica Leopoldina, No. 63 (2014), p. 145-156
வெளி இணைப்புகள்
தொகு- Annotated bibliography for Carl Weizsacker from the Alsos Digital Library for Nuclear Issues பரணிடப்பட்டது 2006-08-28 at the வந்தவழி இயந்திரம்
- "Ich wollte erkennen, ob Atombomben möglich sind" – Carl Friedrich von Weizsäcker interviewed by Michael Schaaf. uni-hamburg.de