கார முட்டைக்கோசுக் கீரை
கார முட்டைக் கோசுக் கீரை (Arugula) (அமெரிக்க ஆங்கிலம்) /əˈruːɡulə/ அல்லது rocket (பிரித்தானிய ஆங்கிலம்) (Eruca vesicaria; syns. Eruca sativa Mill., E. vesicaria subsp. sativa (Miller) Thell., Brassica eruca L.) என்பது பிராசிகேசியே குடும்பத்தின் கீரையாக உண்ணும் ஆண்டுத் தாவரமாகும். இது புத்திளம் கடுப்பான கார்ப்பு மிளகு மணமுடையது. மற்ற வழக்கில் உள்ள பெயர்களாக தோட்ட rocket,[2] (பிரித்தானிய, ஆத்திரேலியn, தென் ஆப்பிரிக்க, அயர்லாந்து, நியூசிலாந்து ஆங்கிலம்),[3] எரூக்கா.[3] "ruchtetta" "rocket salad",[4] "rucola", "rucoli", "rugula", "colewort", "roquette". எரூக்கா சட்டைவா பரவலாக கீரைக் குவையாக உண்ணும் எரூக்கா தாவர இனத்தில் ஒன்றாகும். இது நடுத்தரைக்கடல் பகுதியையும் மொராக்கோ போர்த்துகல்l, சிரியா, இலெபனான், துருக்கி ஆகிய ஆகிய பகுதிகளையும் தாயகமாகக் கொண்டுள்ளது.[3][5]
கார முட்டைக்கோசுக் கீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. விசிகாரியா
|
இருசொற் பெயரீடு | |
Eruca விசிகாரியா கார்ல் இலின்னேயசு, அந்தோனியோ யோசு கவனில்லெசு | |
வேறு பெயர்கள் [1] | |
|
இது 20 முதல் 100 செமீ உயரம் வரை வளரும் ஆண்டுத் தாவரமாகும். இதன் இலைகள் செறிவான இருபக்க இலை மடல்களுடன் அமைந்திருக்கும். இதில் பக்கவாட்டில் நான்கு முதல் பத்து சிறுமடல்களும் நடுவில் பெரிய முனைமடலும் இருக்கும். பூக்கள் 2 முதல் 4 செமீ விட்டமுள்ள மஞ்சரியாக பிராசிகாவகை மலர் கட்டமைப்புடன் அமைந்திருக்கும்; ஈதழ்கள் ஊத்தா நிற நரம்புடன் வெண்குழைவு நிறத்தில் அமையும். பூந்துப் பைகள் அல்லது சூலகங்கள் மஞ்சளாக இருக்கும்; பூ மலர்ந்ததும் சூற்காம்புகள் நீட்டிக்கொண்டு இருக்கும்மிதன் பழம் (காய்) கூரலகு நுனியுடன் 12 முதல் 25 மிமீ நீளத்தில் பல விதைகளுடன் அமையும்.[2][6]
விவரிப்பு
தொகுகார முட்டைக்கோசுக் கீரை 20 முதல் 100 செமீ உயரம் வரையில் வளர்கிறது. இதன் இலைகள் செறிவான இருபக்க இலை மடல்களுடன் அமைந்திருக்கும். இதில் பக்கவாட்டில் நான்கு முதல் பத்து சிறுமடல்களும் நடுவில் பெரிய முனைமடலும் இருக்கும். பூக்கள் 2 முதல் 4 செமீ விட்டமுள்ள மஞ்சரியாக பிராசிகாவகை மலர் கட்டமைப்புடன் அமைந்திருக்கும்; பூந்துப் பைகள் அல்லது சூலகங்கள் மஞ்சளாக இருக்கும்; பூ மலர்ந்ததும் இதழ்கள் உதிர்ந்து விடும். இதன் பழம் (காய்) கூரலகு நுனியுடன் 12 முதல் 25 மிமீ நீளத்தில் பல விதைகளுடன் அமையும். இந்தத் தாவரக் குறுமகவெண்கள் 22 ஆகும்.[2][3][6]
சூழலியல்
தொகுகார முட்டைக்கோசுக் கீரை (Eruca vesicaria) வறண்ட, சிதறலான தரையில் வளரக் கூடியது. இது தோட்டத்தரை அந்துகள் உட்பட, சில அந்துப் பூச்சிகளின் கூட்டுப்புழுக்களுக்கு உணவாகிறது;[2][3] இதன் வேர்கள் புழுக்களாலும் தாக்கப்படுகின்றன.[7]
பயிரிடலும் வரலாறும்
தொகுகாரச் சுவையும் விரிந்த நீள இலைகளும் வாய்ந்த, கார முட்டைக்கோசுக் கீரையில் சி உயிர்ச்சத்தும் பொட்டாசியமும் செறிவாக உள்ளன.[8] கீரை மட்டுமன்றி, பூக்களும் இளங்காய்களும் முதிர்விதைகளும் உண்ணக்கூ> டியவையே .
கார முட்டைக்கோசுக் கீரை தோட்டத்தில் வோக்கோசு, துளசியுடன் வர்க்கப்படுகிறது. இது இப்போது வணிகமுறையில் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. இது உலகமெங்கும் எளிதாக பேரங்காடிகளிலும் உழவர் சந்தைகளிலும் கிடைக்கிறது. இது தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி, வடக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா உட்பட, மிதவெப்ப மண்டலப் பகுதிகளிலும் தகவமைந்து வளர்கிறது.[3][4] இது இந்தியாவில் முதிர்விதைகள் கார்கீர் (காரக்கீரையின் மருவு) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றன. ஆனால், அரேபியாவில் இளங்கீரைக்குக் கார்க்கிர். جرجير (gargīr வழங்குகிறது).
காட்சிமேடை
தொகு-
கார முட்டைக் கோசுக் கீரையின் மஞ்சரியும் இளம்காய்களும்
-
விதைக் காய்கள்
-
கெய்ரோவில் சிற்றுண்டி வண்டி, எகுபதியில் சமைத்த தட்டை மொச்சை (ful medames),ஊறுகாய், புது மெதுவப்பம் (உரொட்டி), புத்திளம் கார முட்டைக்கோசுக் கீரை
-
Tortellini கார முட்டைக்கோசுக் கீரை, எலுமிச்சையுடன்
-
கோர்கொஞ்சோலா வெண்ணெய், கார முட்டைக்கோசுக் கீரை, இன்குழைவு, தக்காளி அடுக்கு
மேற்கோள்கள்
தொகு- ↑ The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 11 May 2016
- ↑ 2.0 2.1 2.2 2.3 Flora of NW Europe: Eruca vesicaria பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Blamey, M. & Grey-Wilson, C. (1989). Flora of Britain and Northern Europe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-40170-2.
- ↑ 4.0 4.1 USDA Plants Profile: Eruca vesicaria subsp. sativa
- ↑ Med-Checklist: Eruca sativa.
- ↑ 6.0 6.1 Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-47494-5.
- ↑ "Arugula: Arugula". smartgardener.com.
- ↑ NutritionData.com, Arugula, Raw
வெளி இணைப்புகள்
தொகு- Jeane Osnos, "The most political vegetables: A whirlwind tour of the edible crucifers", The Botanist in the Kitchen, November 20, 2012. How arugula joined broccoli (and lattes) as supposed markers for big-government liberalism.
- Joel Denker, "The 'Lascivious' Leaf: The Allure of Arugula", Food in the 'Hood (published August 11, 2012) பரணிடப்பட்டது 2020-09-25 at the வந்தவழி இயந்திரம், in The Intowner, Serving Washington, D. C. since 1968 பரணிடப்பட்டது 2020-12-15 at the வந்தவழி இயந்திரம்.
- Ezra Klein, "Arugula", The American Prospect, October 7, 2008.
- John Schwenkler, "Eating arugula has become a political act: Conservative thinker is branded a closet liberal based on the food he eats", Earth Matters, MNN (Mother Nature Network), March 2009. Mr. Schwenkler's article originally appeared in Plenty magazine in October 2008.
- David Kamp, The United States of Arugula: How We Became a Gourmet Nation, New York: Clarkson Potter (2006). பரணிடப்பட்டது 2020-02-18 at the வந்தவழி இயந்திரம்